Published:Updated:

GSX-S750 எனும் - நேக்கட் GUN!

GSX-S750 எனும் - நேக்கட் GUN!
பிரீமியம் ஸ்டோரி
GSX-S750 எனும் - நேக்கட் GUN!

ஃபர்ஸ்ட் ரைடு - சுஸூகி GSX-S750தொகுப்பு: தமிழ்

GSX-S750 எனும் - நேக்கட் GUN!

ஃபர்ஸ்ட் ரைடு - சுஸூகி GSX-S750தொகுப்பு: தமிழ்

Published:Updated:
GSX-S750 எனும் - நேக்கட் GUN!
பிரீமியம் ஸ்டோரி
GSX-S750 எனும் - நேக்கட் GUN!

‘என்னைக்காவது ஒருநாள் இந்த பைக்கை வாங்கிடணும்’ என்று சிலரின் திட்டத்தில் நிச்சயம் இந்த பைக் இருக்கும். சுஸூகி GSX-1000. மிடில் கிளாஸ் பசங்களுக்கு இது கொஞ்சம் எட்டாக்கனிதான். காரணம், GSX-S1000 பைக்கின் விலை கிட்டத்தட்ட 15 லட்சம். அதே மாடலில் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, சிசியைக் குறைத்து 7.45 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலைக்கு ஒரு பைக்கைக் காட்டுகிறது சுஸூகி. அது, GSX-S750. ஏற்கெனவே GSX-R750 என்று ஒரு பைக் இருக்கிறது. நான் இப்போது பறந்தது GSX-S750 பைக்கில்.

1000 சிசி பைக் வெறியர்கள் பார்த்தால், அப்படியே ஆசையாகக் கட்டிப்பிடித்துக் கொள்வார்கள். அதே நேக்கட் டிசைன். ஹெட்லைட் அசெம்பிளியும் அதேதான். அந்தக் குட்டி பொசிஷன் லேம்ப்புகள், ஏதோ ஒரு காட்டு விலங்கின் கோரைப் பற்கள்போல் இருப்பது அட்டகாசம்.  சில பைக்குகளில் ஸ்போர்ட்டினெஸ்ஸுக்காக ஃபுட்பெக்குகள் பின்னோக்கி வைத்திருப்பார்கள். இது சில நேரங்களில் தண்டனையாக இருக்கும். இதிலும் ஸ்போர்ட்டினெஸ் அப்படித்தான். ஆனால், தண்டனையாக இல்லை; கெத்தாக இருக்கிறது. சீட்டில் உட்கார்ந்தால் இறங்க மனசில்லை. சொகுசாக இருக்கிறது. ஆனால், சீட்டின் உயரம் 820 மிமீ.  உயரம் குறைவானவர்களுக்கு சிரமம்தான். GSX-1000-ல் இருக்கும் அதே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், செம ஸ்டைல்.

GSX-S750 எனும் - நேக்கட் GUN!

சுஸூகியின் ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம் அருமை. ஸ்டார்ட் பட்டனை ஒரு தடவை அழுத்தினால் போதும். பைக் ஸ்டார்ட் ஆகிவிடும். இன்ஜின், GSR750 பைக்கில் இருந்த அதே இன்ஜின்தான். ஆனால், ரி-ட்யூன் செய்திருக்கிறார்கள். 114 bhp பவர், 8.1 kgm டார்க். R750 பைக்கைவிட இந்த S750 பைக்கை ஓட்டும்போது, இன்னும் பவர் டெலிவரியில் பன்ச் கிடைக்கிறது. இன்லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின். கியரைப் போட்டுக் கிளப்பினால், Naked Gun-ல் இருந்து கிளம்பும் தோட்டாவைப்போல் சீறுகிறது GSX-S750. நம்புங்கள்! ஸ்பீடோ மீட்டரில் 227 கி.மீ தெரிந்தது. வாவ்! செம எக்ஸைட்டிங்! அப்படிப்பட்ட சாலைக்கு எங்கே போவது? அதற்காகத்தான் டெல்லி BIC ட்ராக்கில் இதைப் பறக்கவிட்டேன்.

அதே நேரத்தில் செம ஃப்ரெண்ட்லி! எப்படியென்றால், 200 கி.மீ-ல் இருந்து பிரேக் பிடித்து 40 கி.மீ-ல் வந்தோம். வேண்டுமென்றே கியரைக் குறைக்கவில்லை. பைக்கில் எந்த திக்கலும் இல்லை. அதே 6-வது கியரில் 40 கி.மீ-ல் கூட செம ஜாலியாக ரெவ் ஆகிறது. ஆனால், 6,000 - 8,000 rpm-ல் கை, கால் என எல்லா இடத்திலும் அதிர்வுகள்! GSX1000 பைக் ஓட்டியவர்களை இது இம்ப்ரஸ் செய்ய வாய்ப்பில்லை. அதேநேரம், புதிதாக வாங்குபவர்களுக்கு இது பெரிய குறையாக இருக்காது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

GSX-S750 எனும் - நேக்கட் GUN!

தாயைத் தேடும் பிள்ளைபோல், ஸ்போர்ட்ஸ் பைக் ரைடர்கள் ஆசையாகத் தேடுவது -  ஸ்லிப்பர் கிளட்ச்தான். அதற்குப் பதிலாக ‘இதை வெச்சுக்கோங்க’ என்று ‘லோ ஆர்பிஎம் அசிஸ்ட்’ எனும் வசதியை நீட்டுகிறது சுஸூகி. அதென்ன? சுருக்கமாக இதை ‘ஆர்பிஎம் பூஸ்டர்’ என்று சொல்லலாம். உதாரணத்துக்கு, ஒரு ஸ்பீடு பிரேக்கரில் பைக்கை ஏற்றுகிறோம். கியரைக் குறைத்து கிளட்ச்சை ரிலீஸ் செய்யும்போது, தேவையான ஆர்பிஎம் இல்லாமல் பைக் திணறும். சில பைக்குகள் ஆஃப் ஆகியே விடும். உங்கள் கிளட்ச் என்கேஜ்மென்ட்டுக்கு ஏற்ப தேவையான ஆர்பிஎம்-மை பூஸ்ட் செய்து, பைக் ஸ்டால் ஆகிவிடாமல், தோட்டாபோல் ரிலீஸ் செய்ய உதவுவதுதான் லோ ஆர்பிஎம் அசிஸ்ட். ஸ்டார்ட்-ஸ்டாப் டிராஃபிக்கில் செம லவ்லியான வசதி இது.

தோட்டா மட்டும் சீறினால் போதாது. துப்பாக்கியும் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். GSX-S750-ஐ  திடமாக உருவாக்கியிருக்கிறது சுஸூகி. சேஸியே புதுசுதான். 41 மிமீ தடிமனான USD ஃபோர்க். KYB ஷாக் அப்ஸார்பர்கள் பற்றி ரைடர்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலும் இரு பக்கமும் ப்ரீ-லோடு அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன்கள். சாதாரண சாலைகளையெல்லாம் தெறிக்க விடுகிறது KYB சஸ்பென்ஷனின் டைட் செட்-அப். 215 கிலோ இருந்தாலும், ஹேண்ட்லிங் ரொம்ப நம்பிக்கையாக இருந்தது டிராக்கில். கவாஸாகி Z900 பைக்கை விட 5 கிலோவும், ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் S பைக்கை விட 28 கிலோவும் அதிகம். இது, சாதாரணச் சாலைகளில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. கஷ்டமாக இருக்கலாம்.

GSX-S750 எனும் - நேக்கட் GUN!

ஏபிஎஸ் பிரேக்ஸ் - வாவ்! 310 மிமீ ட்வின் டிஸ்க் முன் பக்கம். 240 மிமீ பின் பக்க டிஸ்க். எத்தனை ஸ்பீடில் போனாலும்... ‘பச்சக்’தான்! பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்தின் பேட்லாக்ஸ் ஹைப்பர் ஸ்போர்ட்ஸ் டயர்கள் வேற லெவல். காய்ந்த சாலைகளில் செம பர்ஃபாமென்ஸ். அப்படியென்றால் மழைச் சாலைகளில் கஷ்டமா? இல்லை. பாதுகாப்பைப் பொறுத்தவரை டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறது. அதுவும் 3 ஸ்டேஜ்களில். மூன்றாவது லெவலில் வைத்துவிட்டு எப்படிப்பட்ட ஈரத்திலும் சாய்ந்தபடி பறக்கலாம்.

ட்ரையம்ப் (9.19 லட்சம்), கவாஸாகி Z900 (7.68 லட்சம்), யமஹா MT-09 (9.5 லட்சம்).. இந்த பைக்குகளை ஒப்பிடும்போது GSX-S750-ன் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 7.45 லட்சம்தான். ஜப்பானில் இருந்து CKD முறையில் தயாரிக்கப்படுவதால், ஆர்டர் கொடுத்தால்தான் பைக் ரெடியாகி உங்கள் வீட்டுக்கு வரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism