Published:Updated:

டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?

டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?

ஒப்பீடு - டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V VS சுஸூகி ஜிக்ஸர் SP தொகுப்பு: ராகுல் சிவகுரு

டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?

ஒப்பீடு - டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V VS சுஸூகி ஜிக்ஸர் SP தொகுப்பு: ராகுல் சிவகுரு

Published:Updated:
டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?
பிரீமியம் ஸ்டோரி
டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?

விற்பனையில் அதிரடிக்காரனாக இல்லாவிட்டாலும், 150-160சிசி செக்மென்ட்டின் முடிசூடா மன்னனாக இருந்துவருகிறது சுஸூகி ஜிக்ஸர். இதற்கு அந்த பைக்கின் டிசைன், சிறப்பம்சங்கள், ஓட்டுதல் அனுபவம் ஆகியவையே காரணம். ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு வெளிவந்த அப்பாச்சி RTR 160 4V, ஜிக்ஸரின் இடத்தைக் குறிவைத்தே களமிறங்கியிருக்கிறது. ஒரே செக்மென்ட்டில் இருக்கும் முன்னாள் கூட்டாளிகளின் தயாரிப்புகளில் எது பெஸ்ட்?

டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?

டிசைன்

 படங்களைப் பார்க்கும்போதே, எது பழைய மாடல் என்பதை எளிதாகக் கணித்துவிட முடிகிறது. ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தாலும், ஜிக்ஸரின் டிசைன் ஸ்டைலாகவே இருக்கிறது. கட்டுமஸ்தான தோற்றத்தில் இருக்கும் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க், தொடைகளுக்கு நல்ல சப்போர்ட் தருகிறது. சற்று மேல்நோக்கி இருக்கும் பைக்கின் பின்பகுதி, ஜிக்ஸரின் ஸ்போர்ட்டினெஸ்ஸைப் பறைசாற்றுகிறது. ஆனால், SP கலரில் வழங்கப்பட்டிருக்கும் Gloss டூயல் டோன் ஃப்னிஷ், கிராஃபிக்ஸ் மற்றும் க்ரோம் எக்ஸாஸ்ட் உடன் இருப்பது, உங்களுக்குப் பிடிக்கிறதா? சிங்கிள் டோன் கலர்களிலேயே, இந்த பைக் அழகாக இருந்தது!

ரேஸ் பைக் போன்ற தோரணையுடன் இருக்கிறது அப்பாச்சி RTR 160 4V. அப்பாச்சி RTR 200 4V பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், இதில் உட்காரும்போது, Big Bike Feel தானாக வந்துவிடுகிறது. ஜிக்ஸரைப் போலவே இங்கும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் இருக்கிறது; என்றாலும் ஜிக்ஸரில் கியர் இண்டிகேட்டர் ஸ்டாண்டர்டாக இருக்கும். ஆனால், அப்பாச்சி RTR 160 4V பைக்கின் Fi மாடலில் மட்டுமே கியர் இண்டிகேட்டர் இருக்கிறது. அப்பாச்சி சீரிஸ் பைக்குகளின் ப்ளஸ்களில் ஒன்றான மேட் ஃப்னிஷ் கலர்களில்,  RTR 160 4V பைக்கை டிவிஎஸ் அறிமுகப்படுத்தாதது ஏனோ?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

150-160 சிசி செக்மென்ட்டில், வேகம் - மைலேஜ் ஆகியவை சமவிகிதத்தில் இருப்பது அவசியம். ஜிக்ஸர் பைக்கில் இருக்கும் 2 வால்வ் - ஏர் கூல்டு இன்ஜின், போட்டியாளர் களுடன் ஒப்பிடும்போது குறைவான பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்துகிறது (14.8bhp பவர் - 1.4kgm டார்க்). என்றாலும், டெக்னிக்கல் விபரங்களைத் தாண்டியும் ஜிக்ஸர் கவர்கிறது. இதற்கு பைக்கின் இன்ஜின் டியூன் செய்யப்பட்ட விதமே காரணம். ஆம், நகரப் பயன்பாட்டுக்குத் தேவையான ஆரம்ப கட்ட வேகம் மற்றும் கியர்களுக்கு இடையேயான வேகம் ஆகியவற்றில் இந்த பைக் சொல்லியடிக்கிறது.

அதாவது, வீலிங் செய்வது ரொம்ப ஈஸி! இதனாலேயே கூடுதல் திறன்மிக்க பைக்குகளை வைத்திருப்பவர்கள்கூட, தன்வசம் ஒரு ஜிக்ஸர் வைத்திருப்பதைப் பார்க்க முடியும். இப்படி நகரத்திலேயே தனது மொத்த வித்தையையும் காட்டி விடுவதாலோ என்னவோ, 90 கி.மீ வேகத்தைத் தாண்டிய பிறகு, நெடுஞ்சாலைகளில் கொஞ்சம் திணறுகிறது ஜிக்ஸர். 110 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தை இந்த பைக் எட்டுகிறது. என்றாலும், அதிர்வுகள் மற்றும் இன்ஜின் கதறுவதை நம்மால் உணர முடிகிறது.

டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?

நீண்ட நாட்களாக மெளனம் காத்துவந்த டிவிஎஸ், புதிய அப்பாச்சி RTR 160 4V மூலம் எகிறியடித்திருக்கிறது. ஆம், 16.5bhp பவர் மற்றும் 1.48kgm டார்க்கை வெளிப்படுத்து வதனால், 150-160சிசி செக்மென்ட்டின் பவர்ஃபுல் பைக் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறது. மேலும், சமீபத்திய டிவிஎஸ் தயாரிப்புகளைப் போலவே, இந்த 4 வால்வ் - ஆயில் கூல்டு இன்ஜின் ஸ்மூத்தாகத் தனது பணியைச் செய்கிறது. எனவே, இது எதிர்பார்த்தபடியே வேகத்தில் அசத்தினாலும், ரிஃபைன்மென்ட்டிலும் செமையாக ஸ்கோர் செய்கிறது. ஜிக்ஸர் போல ஆரம்ப கட்ட வேகங்களில் பஞ்ச் இல்லை என்றாலும், டாப் எண்ட் பர்ஃபாமென்ஸில் அசத்துகிறது அப்பாச்சி RTR 160 4V.

மேலும் கியர்பாக்ஸ் ஜிக்ஸரைவிடத் துல்லியமாக இருப்பதால், எடை குறைவான கிளட்ச்சைப் பிடித்து கியர் மாற்றுவது நல்ல அனுபவமாக இருக்கிறது. த்ராட்டில் ரெஸ்பான்ஸும், பெரிய இன்ஜினுக்கானது போல இருக்கிறது. எனவே, வேகம் செல்வதே தெரியவில்லை என்பதுடன், இதே காரணத்தால் நெடுஞ்சாலையில் விரட்டி ஓட்டுவதற்குச் சிறந்த பைக்காக இருக்கிறது அப்பாச்சி RTR 160 4V. ஆனால், 6,000 ஆர்பிஎம் தொடங்கி 7,500 ஆர்பிஎம் வரையிலான இன்ஜின் வேகத்தில் செல்லும்போது, பைக்கில் அதிர்வுகளை உணர முடிகிறது. 

டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?

ஓட்டுதல் அனுபவம்

டிவிஎஸ் - சுஸூகி; இரண்டுமே முன்னாள் கூட்டாளிகள் என்பதை, இந்த இரு பைக்குகளும் தயாரிக்கப்பட்ட விதத்திலேயே புரிந்துகொள்ள முடிகிறது. ஆம், ஓட்டுதல் அனுபவத்தை முன்னிறுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும் இவை, ரைடருக்கு மனநிறைவைத் தருகின்றன. ஒரு டீன்-ஏஜ் பையனைப் போல துடிப்புடன் இருக்கிறது ஜிக்ஸர். உயரமாக வைக்கப்பட்டிருக்கும் ஹேண்டில்பார் மற்றும் மேல்நோக்கிய நிலையில் இருக்கும் இருக்கை ஆகியவை செம காம்போ! மேலும், அப்பாச்சியைவிட 8 முதல் 12 கிலோ எடை குறைவாக இருப்பதுடன், 27 மிமீ குறைவான வீல்பேஸையும் (1,330 மிமீ) கொண்டுள்ளது ஜிக்ஸர்.

எனவே, இந்த பைக்கை நகரத்தில் வளைத்து நெளித்து ஓட்டுவது செம ஃபன்னாக இருக்கிறது. திருப்பங்களில் செல்லும்போது பைக்கின் சேஸியும், அகலமான MRF டயர்களும் (முன்: 100/80-17, பின்: 140/60-R17) ஒன்றோடொன்று கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றன. இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப்பைக் கொண்டிருப்பதால், மலைச் சாலைகளில் ஜிக்ஸரை ஓட்டுவது ஜாலியாக இருக்கும்; ஆனால், மோசமான மற்றும் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. பைக்கின் கட்டுமானத் தரம் சூப்பர் ரகம்!

டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?

உயரம் குறைவான ஹேண்டில்பாரைக் கொண்டிருக்கும் அப்பாச்சி RTR 160 4V, ஸ்போர்ட்டியான சீட்டிங் பொசிஷனைக் கொண்டிருக்கிறது. ஆனால் நகரம், நெடுஞ்சாலை என இரண்டிலும் பைக்கைப் பயன்படுத்துவது வசதியாகவே இருக்கிறது. தனது 35 ஆண்டுகால ரேஸிங் அனுபவத்தை, மற்றுமொருமுறை நிருபித்திருக்கிறது டிவிஎஸ். அப்பாச்சி RTR 160 4V பைக்கின் மிகத் துல்லியமான கையாளுமைக்கு, Remora டயர்களும் (முன்: 90/90-17, பின் - 130/70-17) - Showa சஸ்பென்ஷனின் செட்-அப்பும் துணைநிற்கின்றன. மேலும், பள்ளம் மேடுகள் நிறைந்த சாலைகள் தரும் இடர்பாடுகளை, பைக்கின் சஸ்பென்ஷன் சிறப்பாக உள்வாங்கிக்கொள்கிறது. தவிர, பில்லியன் இடவசதி மற்றும் சொகுசிலும், அப்பாச்சி RTR 160 4V முன்னிலை வகிக்கிறது. ஆனால், 180சிசி மற்றும் 200சிசி மாடல்களைப் போலவே, இங்கு டூயல் சேனல் ஏபிஎஸ்ஸை ஆப்ஷனலாகவாவது வழங்கலாமே டிவிஎஸ்?

இரண்டு பைக்குகளுமே, பின்பக்க டிஸ்க் பிரேக்கை (ஜிக்ஸர் - 220மிமீ, அப்பாச்சி - 200மிமீ) ஆப்ஷனலாக வழங்குகின்றன. எனவே, விலை அதிகமாக இருந்தாலும், இவற்றை வாங்குவது நல்ல முடிவாக இருக்கும். ஜிக்ஸரைவிட அதிக எடை மற்றும் வீல்பேஸைக் கொண்டிருந்தாலும், அப்பாச்சி RTR 160 4V பைக்கின் பிரேக்கிங் நன்றாக இருக்கிறது. மேலும், திடீரென பிரேக் பிடித்தாலும், பைக் அலைபாயாமல் நின்றுவிடுவது பெரிய ப்ளஸ். அப்பாச்சியைவிடச் சிறிய முன்பக்க டிஸ்க் பிரேக் (266 மிமீ) கொண்டிருந்தாலும், ஜிக்ஸரின் பிரேக் ஷார்ப்பான ஃபீட்பேக்கை அளிக்கிறது. ஆனால், பைக்கின் குறைவான எடை மற்றும் வீல்பேஸ் இருப்பதால், திடீரென பிரேக் பிடிக்கும்போது பைக்கின் நிலைத்தன்மை தவறுவதை நம்மால் உணர முடிகிறது. இதற்கான தீர்வாக, சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலை, விரைவில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது சுஸூகி. இது இன்ட்ரூடரில் இருக்கும் அதே செட்-அப்பாக இருக்கலாம்.

டிவிஎஸ் VS சுஸூகி - எது ஜெயிக்குது?

பின்பக்க டிஸ்க் பிரேக் உடன் கிடைக்கக்கூடிய சுஸூகி ஜிக்ஸர் SP பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை 93,950 ரூபாய். டிசைன், வசதிகள், கட்டுமானத் தரம், ஓட்டுதல் அனுபவம் ஆகியவற்றில் அசத்தும் இந்த பைக், விற்பனையில் பின்தங்குவது ஆச்சர்யமாக இருக்கிறது. 97,600 ரூபாய்க்குக் (சென்னை ஆன்ரோடு) கிடைக்கும் அப்பாச்சி RTR 160 4V Rear Disc மாடல், ஜிக்ஸரைவிட விலை அதிகமாக இருக்கிறது. என்றாலும், அது ஜிக்ஸர் செய்யும் அனைத்தையும், இன்னும் கொஞ்சம் பெட்டராகவே செய்கிறது. அதாவது தேவைப்படும்போது அம்பியாகவும், அந்நியனாகவும் இருக்கும் திறமை, இந்த அப்பாச்சிக்குக் கைகூடி வந்திருக்கிறது. கூடவே அந்த Big Bike Feel மற்றும் சொகுசு ஆகியவை போனஸ்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism