Published:Updated:

ட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி?

ட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி?

அனுபவம் / டிவிஎஸ் ரேஸிங்ரஞ்சித் ரூஸோ

ட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி?

அனுபவம் / டிவிஎஸ் ரேஸிங்ரஞ்சித் ரூஸோ

Published:Updated:
ட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
ட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி?

 “அப்பாச்சியை ரோட்லதானே ஓட்டியிருக்கீங்க... ட்ராக்ல ஓட்டுங்களேன்’’ என்று அழைப்புவிடுத்தது டிவிஎஸ். ‘எப்போது ரேஸ் டிராக் செல்ல வாய்ப்புக் கிடைக்கும்’ என காத்திருந்த எனக்கு, சூப்பர் சான்ஸ் இது. ட்ராக்கில் எனக்கே எனக்கு என ஒரு அப்பாச்சி காத்திருந்தது. 360 டிகிரி நோட்டம் விட்டேன். அட, நம்ம 200சிசி அப்பாச்சி, 4 வால்வ் பைக்! அதே ஸ்ட்ரீட் பைக்தான். சைலன்ஸரை மட்டும் மாற்றியிருந்தார்கள். “எடை குறைந்தால்தான் ட்ராக்கில் பறக்க முடியும்” என்று டிப்ஸ் தந்தார் ஹாரிஸ் சில்வஸ்டர். இவர்தான் எனக்கு கோச்.

ட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி?

‘ஃபாலோ மீ’ என்று முன்னாடி இருந்து ஒரு ட்ரையல் காட்டினார், நேஷனல் பைக் ரேஸ் சாம்பியன் ஜெகன். ட்ராக்கில் எந்தெந்த இடத்தில் பிரேக் பிடிக்கக் கூடாது; எங்கே ஆக்ஸிலரேஷன் கொடுக்கக் கூடாது... இதற்கான முன்னோட்டம் அது. அடுத்தச் சுற்றில், நமக்கும் அவருக்கும் இருந்த தொடர்பு முறிந்துவிட்டது. சரியாக நினைவில்லை; கிட்டத்தட்ட 12 எண்ணுவதற்குள் 100-ஐத் தொட்டிருந்தேன். நம் ஊர் டிராஃபிக்கை நினைத்துப் பார்த்தேன். பள்ளங்கள், பேரிகேட்கள், ஸ்பீடு பிரேக்கர்கள், சரியா நம் பைக்கைப் பார்த்து தற்கொலைக்கு முயற்சிக்கும் தெரு நாய்கள்... என எந்தத் தடைகளும் இல்லாமல், அப்பாச்சியில் ஆக்ஸிலரேட் செய்தது செம ஜாலி.

சும்மாவா... 1.85 kgm டார்க் ஆச்சே! கார்னரிங்கில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். 5 கியர்தான். வேகங்களில் கியரைக் குறைக்கும்போதும் கவனம் தேவை; சட்டெனக் கவ்வும். ஸ்லிப்பர் கிளட்ச் இருந்தால் நன்றாக இருக்கும்? லேட்டஸ்ட் அப்பாச்சியில் இதைச் சேர்த்துவிட்டது டிவிஎஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி?

மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் மொத்தம் 3.7 கி.மீ நீளம். இதில் 12 திருப்பங்களும், மூன்று நேர் சாலைகளும் உள்ளன. நேர் சாலையில் அப்பாச்சியின் பர்ஃபாமென்ஸ் சுமார்தான். ஆனால், வளைவுகளில் CBR பைக்குக்குக் குறைந்தது இல்லை RTR200. பைரலி டயர்களில் எத்தனை கிரிப்! முன்பக்கம் கொஞ்சம் ஹெவியாக இருந்திருந்தால், இன்னும் தன்னம்பிக்கையோடு வளைவுகளைக் கடந்திருக்கலாம். ரேஸ் டிராக்குக்கு வருவதே இந்த வளைவுகளுக்காகத்தான். அவ்வளவு த்ரில்.

இங்கு பாடி பொசிஷன் ரொம்ப முக்கியம். உடலை அசைத்து, பைக்கின் சென்டர் ஆஃப் கிராவிட்டியை சென்டரில் வைத்தால்தான் பைக்கை நன்றாக வளைக்க முடியும். (பார்க்க படம்) உடலின் மேல் பாகத்தை அசைத்தால், அதிக ஆற்றல் வீணாகும்; உடல் வலியும் ஏற்படும். அதிக லேப்களை ஓட்ட முடியாது. அதனால், உடலின் கீழ்பகுதியை மட்டுமே அசைக்க வேண்டும். அப்பாச்சியில் ஃபுட்பெக்குகள் கொஞ்சம் உயரமாக இருப்பதால், கார்னரிங் கிளியரன்ஸ் அருமை. அப்பாச்சியின் சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக இருப்பது, திருப்பங்களில் செல்லும்போது உதவுகிறது. நேர் பாதையிலும் சரியான பொசிஷன் அவசியம். உடம்பை முன் பக்கம் வளைத்து டேங்கோடு ஒட்டி உட்கார வேண்டும்.

ட்ராக்கில் அப்பாச்சி ஓட்டுவது எப்படி?

ஒரே ஒரு குறை. ஹேண்டில்பார் உயரமாக இருப்பதால், ஏதே ஒரு திணறல் இருந்தது. கியர் மற்றும் ஆக்ஸிலரேட்டர் இரண்டும்தான் ட்ராக்கில் முக்கிய கன்ட்ரோல்களே! பிரேக் போட வேண்டிய அவசியம் வந்தால், முன்பக்கம் நம் எடையைக் கொண்டு போகவேண்டும். இதனால், பேலன்ஸ் மிஸ் ஆகாமல் வேகத்தைக் குறைக்க முடியும். ரைடர்களின் எடை, உயரம், உடல்வாகு போன்றவற்றுக்கு ஏற்ப பைக்கின் கேரக்டரும் மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்க!

பிட் ஸ்டாப்பில் பைக்கை நிறுத்தியபோது, ஒன்று மட்டும் புரிந்தது. ‘அவதார்’ படத்தில் வரும் இக்ரான் டிராகன் போல், ‘டிராக்கில் வேகம் மட்டும் முக்கியமில்லை; பைக்குக்கும் நமக்குமான பாசமும் ரொம்ப முக்கியம்!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism