Published:Updated:

“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க!” - ரேஸர் சந்தேஷ்

“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க!” - ரேஸர் சந்தேஷ்
பிரீமியம் ஸ்டோரி
“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க!” - ரேஸர் சந்தேஷ்

சாதனை - ரேஸிங்தமிழ்

“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க!” - ரேஸர் சந்தேஷ்

சாதனை - ரேஸிங்தமிழ்

Published:Updated:
“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க!” - ரேஸர் சந்தேஷ்
பிரீமியம் ஸ்டோரி
“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க!” - ரேஸர் சந்தேஷ்

பெங்களூருவைச் சேர்ந்த  சந்தேஷுக்கு, தனது இருபது வயதில் (2011) ஒரு பைக் பரிசாகக் கிடைத்தது. லைசென்ஸ் எடுத்துவிட்டு நண்பர்களுடன் ஜாலியாக ரோட்டில் பைக் ஓட்டிக்கொண்டிருந்தவர், ‘பெங்களூரு நந்தி ஹில் க்ளைம்ப்’ ரேஸில் எதேச்சையாகக் கலந்துகொள்ள... ‘அட செமையா இருக்கே!’ என்று ரேஸ் பக்கம் பைக்கைத் திருப்ப ஆரம்பித்தார்.

வீட்டில் எந்தத் தடையும் இல்லை. ‘‘பிசினஸைப் பார்த்துக்கொண்டே ரேஸையும் கவனிச்சுக்கோ’’ என்று வீட்டில் பச்சைக் கொடி காட்ட, ரேஸ் டிராக்கில் பச்சை சிக்னல் விழுந்ததும் பறந்த முதல் பைக் சந்தேஷின் பைக்காக இருந்தது. பெங்களூரு மட்டுமில்லாமல், மற்ற மாநிலங்களில் நடக்கும் ரேஸ்களிலும் கலந்துகொண்டார் சந்தேஷ்.

“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க!” - ரேஸர் சந்தேஷ்

165 சிசி நோவிஸ் பிரிவில், டெக்னிக்கல் கோளாறு காரணமாக பைக் நடு ட்ராக்கில் நின்றபோதுகூட இரண்டாவதாக வந்து ரேஸை ஃபினிஷ் செய்தது; 2012-ல் நடந்த யமஹா ஒன் மேக்கில் ட்ராக்கை விட்டு வெளியே போன பிறகும்கூட ஜெயித்து, இந்தோனேஷிய ரேஸில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது; 2014-ல் ஹோண்டா ஒன் மேக்கில் கலந்துகொண்டு மூன்றாவதாக வந்து போடியம் ஏறியது... என சந்தேஷ் அடுத்தடுத்த லெவலுக்குப் முன்னேறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க!” - ரேஸர் சந்தேஷ்


இதற்கு நடுவில்  கன்னாபின்னா வளைவுகளும், ட்ரிக்கியான பாதைகளும் கொண்ட டெல்லி புத் இன்டர்நேஷனல் ரேஸ் ட்ராக்கில், பைக்கில் அதிவேக லேப் ரெக்கார்ட் செய்தார் சந்தேஷ். 5.5 கி.மீ லேப்பை வெறும் 2.03 நிமிடங்களில் கடந்து பறந்ததுதான் சந்தேஷின் சாதனை.

165 சிசி, 200 சிசி பைக் ரேஸ் செக்மென்ட்டில், என்னதான் பைக்கை முறுக்கினாலும் 160 கி.மீ-க்கு மேல் போக முடியாது. அந்த வேகமும் போதவில்லை சந்தேஷுக்கு. இன்னும் வேகம் என்றால், பைக் செக்மென்ட்டையும் மாற்ற வேண்டும். அடுத்த லெவல் என்றால், சூப்பர் பைக் கேட்டகிரிதான். 250 சிசியில் இருந்து 1000 சிசி செக்மென்ட் ரேஸ்களுக்கு மாறினார் சந்தேஷ். சாதாரண பைக்கின் எடை 130 கிலோவுக்கு மேல் இருக்காது. சூப்பர் பைக்குகளின் எடை 200 கிலோவைத் தாண்டும். பவரும் டார்க்கும் சாதாரண பைக்குகளைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். எனவே, பெரிய பைக்குகளை ஓட்டுவதற்குத் தனிப்பயிற்சியும், பைக்கைக் கையாளக்கூடிய திறமையும் வேண்டும். அதற்காக ஜப்பான் பைக் ரேஸரான யோஷியாக்கி கட்டோவிடம் ‘யமஹா ரைடிங் கிளினிக்’ எனும் அகாடமியில் வெறித்தனமாகப் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார் சந்தேஷ்.

“கீழே விழுறதப் பத்திக் கவலைப்படாதீங்க!” - ரேஸர் சந்தேஷ்

விளைவு  - MRF சூப்பர் பைக் கப் ரேஸிங்கில் கலந்துகொண்டு ஜெயித்தபோது, மலேசியாவில் நடந்த சூப்பர்பைக் சாம்பியன்ஷிப்புக்கு எந்தவிதப் போட்டியும் இல்லாமல் தேர்வானார். இதுதான் சந்தேஷ் கலந்துகொண்ட முதல் இன்டர்நேஷனல் ரேஸ்.

ரேஸ் ட்ராக்கில் நிறைய விபத்துகளைச் சந்தித்திருக்கும் சந்தேஷ் இப்போது, தாய்லாந்தில் நடக்க இருக்கும் 1000 சிசி சூப்பர் பைக் லோக்கல் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்ள ரெடியாகிக் கொண்டிருக்கிறார். ‘‘தாய்லாந்து ரேஸ், மலேசியாவைவிட செம டஃப்பா இருக்கும். எல்லா புரொஃபெஷனல் ரேஸர்ஸ் கூடவும் மோத வேண்டியிருக்கும். அதான் என்னோட பயிற்சியும் இப்போ கடுமையா மாறியிருக்கு!’’ என்று பைக்கை முறுக்கிப் பறந்தார் சந்தேஷ்.

சந்தோஷச் செய்தி சொல்லுங்க சந்தேஷ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism