Published:Updated:

5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா?

5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா?
பிரீமியம் ஸ்டோரி
5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா?

ரீடர்ஸ் ரிப்போர்ட் - ஹோண்டா ஆக்டிவா 5Gதமிழ் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா?

ரீடர்ஸ் ரிப்போர்ட் - ஹோண்டா ஆக்டிவா 5Gதமிழ் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா?
பிரீமியம் ஸ்டோரி
5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா?

மொபைல் நெட்வொர்க்கைவிட வேகமாக இருக்கிறது ஹோண்டா. BSNL-ல் 4G வருவதற்கு முன்பு ஆக்டிவாவில் 4G வந்தது; இப்போது எந்த நெட்வொர்க்குகளிலும் 5G வரவில்லை. ஆனால், ‘5G’ எனும் புதிய மாடலில் ஆக்டிவாவை இறக்கிவிட்டது ஹோண்டா. ஆட்டோ எக்ஸ்போவில் நிறைய பேர் ஆக்டிவாவைச் சுற்றிச் சுற்றி வரும்போதே இதன் வெற்றி உறுதியாகிவிட்டது. 4G-க்கும் 5G-க்கும் என்ன வித்தியாசம்? ‘‘நீங்களே எத்தனை தடவைதான் டெஸ்ட் டிரைவ் பண்ணுவீங்க? இது எங்க டர்ன்! நாங்க ரிப்போர்ட் பண்ணினாதான் கரெக்ட்டா இருக்கும்’’ என்று நமக்குக் கிடைத்த 5G-யின் சாவியைப் பறித்தனர் அனுராதா - ராஜசேகர் தம்பதியினர். ‘‘இதை ஏன் சொல்றேன்னா, எங்ககிட்ட பழைய ஆக்டிவா, RE ஹிமாலயன், ஸ்விஃப்ட்னு வீடு பூரா கார், பைக்ஸ்தான்! நாங்க ரைடிங்குக்காகவே பொறந்தவங்க. புல்லட் நடத்தும் ரைடர் மேனியாவில் எங்களை அடிக்கடி நீங்க பார்க்கலாம்’’ என்கிறார்கள் இருவரும். ஆக்டிவா 5G-யை எடுத்து பெசன்ட் நகர் பீச் வரை ‘விரட்டு விரட்டு’ என்று விரட்டிவிட்டு வந்து பேசினார்கள்.

5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா?

ஸ்டைல்:

அனு: பழைய ஆக்டிவாவுக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிற மாதிரி தெரியலை. டேஸில் மெட்டாலிக் மஞ்சள் கலர் எங்கே இருந்தாலும் கண்டுபிடிக்கலாம். நல்ல கலர். இன்ஸ்ட்ரூமென்ட் டயல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. டிஜி-அனலாக் மீட்டர் செம ஸ்டைல். ஃபுல் LED ஹெட்லைட் இருக்கு. இதுதான் ரொம்ப முக்கியம். இந்தக் காலத்துல இது இல்லைனா மதிக்கமாட்டாங்க. க்ரோம் ஸ்டைலிங்கும் எனக்குப் பிடிச்சிருக்கு. மத்தபடி சொல்லிக்கிற மாதிரி பெருசா இல்லை.

ராஜசேகர்: ஸ்பார்ட்டன் ரெட் கலரும் இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன். கலர் ஆப்ஷனெல்லாம் ஓகே! 5G-னு பேர் வெச்சுட்டு, இன்னும் கொஞ்சம் மாடர்னா எதிர்பார்த்தேன். 5G டேக் மட்டும்தான் புதுசு. பின் பக்கத்தில் இருந்து பார்த்தா பழைய ஆக்டிவா மாதிரியேதான் இருக்கு. இன்னும் கொஞ்சம் ஸ்டைலிஷ்ஷா இருந்திருக்கலாம். கொஞ்சம் வசதிகள் மட்டும்தான் கூடியிருக்கு. மெக்கானிக்கலா அதேதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா?

இன்ஜின்:

அனு:  ஆக்டிவா ஏன் இப்பவும் நம்பர் ஒன்னா இருக்குனு ஆக்டிவாவை ஓட்டிப் பார்த்தாதான் தெரியும். பழைய ஆக்டிவாவைவிட செம ஸ்மூத். அப்படியே றெக்கை கட்டிப் பறக்கிற மாதிரி தோணுது. அதே 110 சிசி இன்ஜின்தானாமே? நிச்சயம் இன்ஜினில் ஹோண்டா ட்யூனிங் பண்ணியிருக்கணும்! ரோட்ல ஆளே இல்லைன்னா செமயா ஒரு ஃபாஸ்ட் ரைடு போலாம். இன்ஜினுக்குத்தான் என்னோட இன்ஃபினிட்டி லைக்ஸ்!

ராஜசேகர்: பழைய ஆக்டிவாவோட அதே இன்ஜின்னு சொன்னா நம்ப முடியலை. அதைவிட பட்டர் ஸ்மூத்தா இருக்கு. பவர் அதே 8 bhpதான். நம் ஊருக்கு இந்த பவர் போதும்! ஆக்டிவா 5G-ல் கூட ரைடர்மேனியா டிராவல் போகலாம் போல! அந்த மாதிரி இன்ஜின் ஓட்டுறதுக்கு ஜாலியா இருக்கு. எங்க பழைய ஆக்டிவா வாங்கி பல வருஷம் ஆச்சு. இன்னும்கூட அதே ஸ்மூத்னெஸ் இருக்கு. செலவும் வைக்கலை. இன்ஜின்தான் ஆக்டிவாவுக்குப் பெரிய ப்ளஸ்.

5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா?

வசதிகள்:

அனு:  இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் எக்கோ மோடு சூப்பர். சர்வீஸ் பண்ண மறந்துட்டா, அதை ஞாபகப்படுத்தும் இண்டிகேட்டரையும் நான் வரவேற்கிறேன். LED ஹெட்லாம்ப்தான் டாப் மோஸ்ட் அட்ராக்ஷன். முன் பக்கம் ஹூக் இருப்பது வசதிதான். சீட்டைத் திறக்கிறதுக்கு ஒரு பட்டன் கொடுத்திருக்காங்க. பார்க்கிறதுக்கு வேணும்னா இது ஸ்டைலா இருக்கு! பயன்படுத்த ரொம்பவும் சிக்கல்தான். சாவியை கரெக்டான பொசிஷனில் வைத்து சீட்டைத் திறக்குறதுக்குள்ள..! அதேபோல் பெட்ரோல் ஃபில்லிங் ஆப்ஷனைக் கவனத்திலேயே எடுத்துக்க மாட்டேங்குதே ஹோண்டா? ஒவ்வொரு தடவையும் சீட்டை விட்டிறங்கி பெட்ரோல் போடுறதுதான் சிரமம். அதேபோல் முன்பக்கம் அப்ரான் இடவசதி கொஞ்சம் குறைஞ்சிருக்கோனு தோணுது. என் பழைய ஆக்டிவாவில் ஒரு கூடை வெச்சு, பக்கத்தில் என் பையனையும் நிக்க வெச்சுக்கிட்டுப் போவேன். இதுல கூடை வைக்கவே ரொம்ப சிரமமா இருக்கும்போலயே! ஆனால், சீட் நல்ல நீளம். கணவன்-மனைவி-குழந்தைனு மூணு பேர் சூப்பரா போகலாம்.

ராஜசேகர்: கிராஸியா மாதிரி 4-in-1 லாக் வசதி அருமைதான். ஆனா, அனு சொன்ன மாதிரி சீட்டைத் திறக்குறது; பெட்ரோல் போடுறது அவ்வளவு ஈஸியா இல்லையே! அதேபோல், பிரேக் லாக் கிளாம்ப்பும் சும்மா பேருக்குத்தான் வெச்சிருக்காங்க. இதை மேடு-பள்ளங்களில் லாக் பண்ணி ஸ்கூட்டரை பார்க் பண்ண முடியலை. லேடீஸ்க்கு ரொம்பக் கஷ்டம்தான். இப்போ வர்ற ஸ்கூட்டர்கள்ல மொபைல் சார்ஜிங் போர்ட்டெல்லாம் குடுக்குறாங்களே! ஹோண்டா இதைக் கண்டுக்கவே இல்லை (இதை 500 ரூபாய் செலவழித்து எக்ஸ்ட்ரா ஆக்சஸரீஸில் வாங்கிக்கொள்ளலாம்).

அண்டர் சீட் ஸ்டோரேஜ் இடவசதி - மற்ற ஸ்கூட்டர்கள்ல 21 - 22 லிட்டரெல்லாம் வந்துடுச்சு! இதில் 18 லிட்டர்தான். ஆனா, ஒரு ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட்டை வெச்சு மூட முடியுது. ஓகேதான். உள்ளே நைட் லாம்ப் இல்லை. பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 5.3 லிட்டர்தான். என்னைப் பொறுத்தவரை வசதிகள் ஆக்டிவாவில் ரொம்பக் குறைவுதான்.

5G பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்குதா புது ஆக்டிவா?

ஹேண்ட்லிங்

அனு: எனக்கென்னவோ இதோட எடை குறைஞ்ச மாதிரியே ஒரு ஃபீலிங். ஆக்டிவாவின் கெத்தே அதோட பின் பக்க எடையும், ஹைவேஸில் கிடைக்கிற ஸ்டெபிலிட்டியும் தான். ஸ்பீடு போய்ப் பார்த்தேன். லேசா அலைபாயுறது மாதிரியே இருக்கு. ஹீரோ ப்ளஷர் ஓட்டுற மாதிரி ஒரு ஃபீலிங்தான் எனக்குக் கிடைச்சது.

ராஜசேகர்: ஹோண்டாவோட CBS பிரேக்கிங் சிஸ்டம் நல்லாவே ஒர்க் ஆகுது. பசங்களுக்கு டிஸ்க் பிரேக் இருந்தால்தான் செட் ஆகும். ஆப்ஷனலாக்கூடக் கொடுத்திருக்கலாம். அதேபோல், இன்ஜின் கில் ஸ்விட்ச் ஏன் ஸ்கூட்டருக்கு இருக்கக் கூடாது? சிக்னலில் நிற்கிறப்போ பெட்ரோல் சேமிக்கலாமே? மற்றபடி 5G எனக்கும் வெயிட்லெஸ் ஸ்கூட்டரா மாறினது மாதிரியே ஒரு ஃபீலிங்!

எங்கள் தீர்ப்பு

‘‘ஆக்டிவா 4G-யைவிட 2,000 ரூபாய் விலை அதிகம். மற்ற ஸ்கூட்டர்களெல்லாம் டேக்கோ மீட்டர், நேவிகேஷன், புளூடூத், டிஸ்க், மொபைல் சார்ஜிங் போர்ட், டிஜிட்டல் கடிகாரம்னு வசதிகளில் எங்கேயோ போயிட்டாங்க! ஹோண்டா இப்போதான் LED லைட்டுக்கே வந்திருக்கு! டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகக்கூட இல்லை. இந்தக் குறைகள் எல்லாத்தையும் இன்ஜின் ஒரே ஆளா சமாளிக்குது. இன்ஜின்தான் ஆக்டிவாவின் கெத்து! ‘வசதிகள் இல்லேனா பரவாயில்லை; ரீ-சேல் வேணும், சர்வீஸ் பிரச்னை இருக்கக் கூடாது, மெயின்டனன்ஸ் குறைவா இருக்கணும், இன்ஜின் ஸ்மூத்னெஸ் வேணும்’னு நினைக்கிற Z-Gen மக்களுக்கு, இந்த 5-வது Gen ஆக்டிவா சூப்பர் சாய்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism