Published:Updated:

சகோதர யுத்தம்!

சகோதர யுத்தம்!
பிரீமியம் ஸ்டோரி
சகோதர யுத்தம்!

போட்டி - எக்ஸ்-பிளேடு VS ஹார்னெட்ராகுல் சிவகுரு - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

சகோதர யுத்தம்!

போட்டி - எக்ஸ்-பிளேடு VS ஹார்னெட்ராகுல் சிவகுரு - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:
சகோதர யுத்தம்!
பிரீமியம் ஸ்டோரி
சகோதர யுத்தம்!

‘ஹோண்டா டூ-வீலர்ஸ்... தற்போது சகோதரச் சண்டையை எதிர்கொண்டுள்ளது. ஆம், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஒன்றாகக் காட்சிபடுத்தப்பட்ட முற்றிலும் புதிய எக்ஸ்-பிளேடு மற்றும் ஹார்னெட் பேஸ்லிஃப்ட் ஆகியவைதான் சண்டைக்கான காரணி. 150-160சிசி பிரிவில் பைக்குகளை வாங்கப்போகும் வாடிக்கையாளர்களுக்குப் புதிதாக ஒரு ஆப்ஷன் கிடைத்திருக்கிறது என்றாலும் எக்ஸ்-பிளேடு, ஹார்னெட்டின் விற்பனை எண்ணிக்கையில் கைவைத்துவிட்டது. பிப்ரவரி மாதத்தில் 7,723 ஹார்னெட் பைக்குகள் விற்பனையான நிலையில், மார்ச் மாதத்தில் விற்பனை ஆனதோ 3,148 ஹார்னெட் பைக்குகள்தான்! இதற்கிடையே மார்ச் மாதத்தின் நடுவில் அறிமுகமான எக்ஸ்-பிளேடு, அந்த மாதத்தின் இறுதியில் 2,717 பேரை சென்றடைந்திருக்கிறது. இரண்டுக்கும் டிசைன் மற்றும் இன்ஜின் ஏரியாவில் பல ஒற்றுமைகள் இருக்கும் நிலையில், எந்த பைக்கை வாங்கலாம்?

சகோதர யுத்தம்!

டிசைன்

 எக்ஸ்-பிளேடு மற்றும் ஹார்னெட் ஆகியவை அளவுகளில் (நீளம்-அகலம்-உயரம்-கி.கி) கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும், இரண்டு பைக்குகளையும் அருகருகே நிறுத்திவைத்தால், கண்கள் தானாகவே எக்ஸ்-பிளேடு வசம்தான் செல்கிறது. பெயருக்கு ஏற்றபடியே, ஷார்ப்பான டிசைன் பாணியை பார்க்க முடிகிறது. பைக்கின் முன்பக்கத்தில் இருக்கும் LED ஹெட்லைட், அப்படியே ரோபோவின் முகத்தை நினைவுபடுத்துகிறது. அதற்கு மேலே இருக்கும் வைஸர், கச்சிதமான சைஸில் இருக்கிறது. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க்கில் இருபுறமும் இடம் பெற்றிருக்கும் கறுப்பு நிற பாடி பேனல்கள், பைக்குக்கு கட்டுமஸ்தான தோற்றத்தை அளிக்கின்றன. பைக்கின் நடுவே வேலைப்பாடுகளுடன் இருக்கும் கறுப்பு நிற பாடி பேனல்கள், இன்ஜின் Belly Pan, சிங்கிள் பீஸ் சீட் ஆகியவை, எக்ஸ்-பிளேடின் ஸ்டைலை உயர்த்துகின்றன. மற்றபடி பின்பக்கத்தில் இருக்கும் T வடிவ LED டெயில் லைட், வித்தியாசமான வடிவமைப்பில் இருக்கும் கிராப் ரெயில், Tyre Hugger, டூயல் போர்ட் எக்ஸாஸ்ட் என இந்த பைக்கின் டிசைனில் ஹோண்டா மாற்றி யோசித்திருப்பது தெரிகிறது. 

ஏறக்குறைய மூன்றாண்டு பழைய டிசைன் என்றாலும், ஹார்னெட்டின் டிசைன் அழகாகவே இருக்கிறது. இந்த பைக்கின் பேஸ்லிஃப்ட் மாடலில், போட்டியாளர்களிடம் இல்லாத LED ஹெட்லைட்ஸைச் சேர்ந்துவிட்டது ஹோண்டா. ஸ்ப்ளிட் ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் பல்க்காக இருக்கும் 12 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் வடிவமைப்பு செம! எக்ஸ்-பிளேடுடன் ஒப்பிடும்போது, ஹார்னெட்டில் இடம்பெற்றுள்ள கிராஃபிக்ஸ் கவர்ச்சியாக இருக்கிறது. எக்ஸாஸ்ட் பைப் காம்பேக்ட் சைஸில் இருந்தாலும், பார்க்க ஸ்போர்ட்டியாக இருக்கிறது. பின்பக்கத்தில் இருக்கும் X வடிவ டெயில் லைட், ஸ்பிளிட் கிராப் ரெயில் ஆகியவை ஹார்னெட்டின் தோற்றத்துடன் இயைந்து செல்கின்றன. கல்லூரி மாணவர்களுக்கு எக்ஸ்-பிளேடு பிடிக்கும் என்றால், வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு ஹார்னெட் பிடிக்கும் எனத் தோன்றுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சகோதர யுத்தம்!

சிறப்பம்சங்கள்

இரண்டு பைக்கிலும் LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட், சிங்கிள் பீஸ் சீட், டிஜிட்டல் மீட்டர், 276 மிமீ முன்பக்க பெட்டல் டிஸ்க் பிரேக், 17 இன்ச் டியூப்லெஸ் டயர்கள், Hazard லைட், மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை இருந்தாலும், சிறப்பம்சங்களில் இரண்டுமே ஆங்காங்கே வேறுபடுகின்றன. எக்ஸ்-பிளேடின் டிஜிட்டல் மீட்டரில் கியர் இண்டிகேட்டர் மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர் இருக்கிறது; இதுவே ஹார்னெட் தடிமனான டயர்களைக் கொண்டிருக்கிறது (முன் - 100/80-17, பின் - 140/70-17). மேலும் பின்பக்கத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் - CBS - சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவை இங்கே ஆப்ஷனலாக வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் 130மிமீ டிரம் பிரேக்கைக் கொண்டுள்ள எக்ஸ்-பிளேடில், CBS-யாவது ஆப்ஷனலாக வழங்கியிருக்கலாமே ஹோண்டா?

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்


 இரண்டு பைக்கிலும் இருப்பது, ஒரே 162.71சிசி - சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு - HET இன்ஜின் உடனான 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான். ஆனால், அந்தந்த பைக்கின் பொசிஷனிங்குக்கு ஏற்ப, இன்ஜின் டியூனிங் செய்திருக்கிறது ஹோண்டா. எனவே, 8,500 ஆர்பிஎம்-ல் 13.9bhp பவரை எக்ஸ்-பிளேடு வெளிப்படுத்தினால், ஹார்னெட் அதைவிட 1bhp அதிக பவரை (8,500ஆர்பிஎம்மில் 14.9bhp) வெளிப்படுத்துகிறது. அதேபோல, 6,000 ஆர்பிஎம்மில் 1.39kgm டார்க்கை எக்ஸ்-பிளேடு வெயிட்டால், ஹார்னெட் அதைவிட 0.06kgm அதிக டார்க்கை, 500 ஆர்பிஎம் தள்ளி (6,500 ஆர்பிஎம்மில் 1.45kgm) வெளியிடுகிறது. சுருங்கச் சொல்வதென்றால், மிதவேகப் பயன்பாட்டுக்கு எக்ஸ்-பிளேடு என்றால், அதிகவேகப் பயன்பாட்டுக்கு ஹார்னெட்; இன்ஜின் பவர் மற்றும் டார்க் விபரங்களில் ஹார்னெட் முன்னிலை வகித்தாலும், இரண்டு பைக்குகளையும் மாற்றி மாற்றி ஓட்டிப்பார்த்தபோது, பர்ஃபாமென்ஸில் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.

சகோதர யுத்தம்!

ஓட்டுதல் அனுபவம்

முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டிரம் பிரேக் கொண்ட ஹார்னெட்டைவிட, 2 கிலோ அதிக எடையைக் கொண்டிருக்கிறது எக்ஸ்-பிளேடு. மேலும், மெலிதான டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டயர்கள் (முன் - 80/100-17, பின் - 130/70-17) என மெக்கானிக்கலாகவும் இந்த பைக் கொஞ்சம் வித்தியாசப்படுகிறது. இந்தக் காரணத்தால், நகரத்தில் வளைத்து நெளித்து ஓட்டுவது சுலபமாக இருக்கலாம். அதே நேரத்தில் தடிமனான டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டயர்களைக் கொண்டிருக்கும் ஹார்னெட், திருப்பங்களில் பைக்கைச் செலுத்தும்போது ரைடருக்குக் கூடுதல் நம்பிக்கையைத் தரலாம். மற்றபடி சீட்டிங் பொசிஷன் மற்றும் சீட்டின் சொகுசு ஆகியவை, இரண்டு பைக்கிலும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன.

4 வேரியன்ட்களில் கிடைக்கும் ஹார்னெட் பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை, 94,913 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது. ஒரே வேரியன்ட்டில் கிடைக்கும் எக்ஸ்-பிளேடு பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை 88,169 ரூபாய். ஹார்னெட்டைவிடச் சுமார் 7,000 ரூபாய் விலை குறைவாக இருக்கும் எக்ஸ்-பிளேடு, டெக்னிக்கல் விபரங்களில் சமமாகவே இருக்கிறது. ஆனால், பின்பக்க டிஸ்க் பிரேக் - CBS போன்ற சில வசதிகள் இல்லை.

சகோதர யுத்தம்!

ரண்டு பைக்குகளுக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருந்தாலும், அவற்றை வித்தியாசமாக பொசிஷன் செய்திருக்கிறது ஹோண்டா. நகரத்தில் தினசரி பயணம் செய்வதற்கு ஸ்டைலான பைக் வேண்டும் என்பவர்களுக்கு எக்ஸ்-பிளேடு; நகரப் பயன்பாட்டுடன், எப்போதாவது நண்பர்களுடன் நெடுஞ்சாலை பயணம் மேற்கொள்வேன் என்பவர்களுக்கு ஹார்னெட். இதுவே ஹோண்டாவின் சாசனம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism