Published:Updated:

ரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்?

ரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்?
பிரீமியம் ஸ்டோரி
ரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்?

ஒப்பீடு - அப்பாச்சி ரோடு பைக் VS ரேஸ் பைக்ரஞ்சித் ரூஸோ

ரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்?

ஒப்பீடு - அப்பாச்சி ரோடு பைக் VS ரேஸ் பைக்ரஞ்சித் ரூஸோ

Published:Updated:
ரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்?
பிரீமியம் ஸ்டோரி
ரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்?

கால்பந்து உலகக்கோப்பை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே, இந்தியாவில் நேஷனல் மோட்டார் சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடங்கிவிட்டது. கோவையில் நடந்த முதல் சூப்பர் ஸ்டாக் போட்டியிலேயே, செம்ம வேகத்தில் பறந்து கே.ஒய் அகமது வெற்றிபெற... மீடியா ரேஸுக்குச் சென்றிருந்த நாமும் ரேஸை முடித்துவிட்டு, டிவிஎஸ் இன்ஜினீயர்களுடன் அடுத்த ரேஸுக்காகக் காத்திருந்த அப்பாச்சி  RTR 200 2.0 மற்றும் RR310 பைக்கைப் பற்றிப் பேசினோம்.

‘‘அப்பாச்சி ரேஸ் பைக்குக்கும், ரோடு பைக்குக்கும் என்ன வித்தியாசம்?’’ 

ரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்?

RTR 200

‘‘அப்பாச்சி 200 4V 2.0 ரோடு பைக், 20.5 bhp பவரை உருவாக்குகிறது. இதே பைக்கின் ரேஸ் ஸ்பெக் வேரியன்ட் 24bhp பவரை அளிக்கிறது. ரோடு பைக்கில் குறைந்த இன்ஜின் வேகத்திலேயே (8,500 rpm) அதிக பவர் கிடைக்கும்படி பைக் டியூன் செய்யப்பட்டுள்ளது. ஆனால், டிராக் பைக்கில் 9,300 rpm வேகத்தில்தான் பைக்குக்கு முழு பவர் கிடைக்கும். இன்னும் அதிக பவரை உருவாக்க முடியும் என்றாலும், ரோடு பைக் போல இன்ஜின் நீடித்து உழைக்க வேண்டும் என்பதற்காக, பவர் சின்ன அளவில் மட்டுமே  அதிகரிக்கப்பட்டுள்ளது.

அப்பாச்சி 200 ரேஸ் ட்ராக் பைக்கில் பர்ஃபாமென்ஸ் ஏர் ஃபில்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகக் காற்றை இன்ஜினுக்குள் அனுப்பும். ஸ்டாக் எக்ஸாஸ்ட்டுக்குப் பதிலாக, ரேஸ் ஸ்பெக் எக்ஸாஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரேஸ் ஸ்பெக் எக்ஸாஸ்ட், சைலன்ஸரில் உருவாகும்  Back Pressure குறைத்து, இன்ஜின் சுலபமாக மூச்சு விடும்படி செய்கிறது. ரேஸ் பைக்கில் கேம் ஷாஃப்ட்டும் மாற்றப்பட்டுள்ளது. ரோடு பைக் கேம் ஷாஃப்ட்டைவிட, ரேஸ் பைக் கேம் ஷாஃப்ட்டின் புரொஃபைல் வேறு என்பதால், இன்டேக்-எக்ஸாஸ்ட் வால்வ் திறந்து மூடும் நேரம் மாறுபடும். இதன் மூலம் இன்ஜின் வேகத்தை அதிகரிக்க முடியும்.

ரோடு பைக்கின் முன்பக்க வீல் ஸ்டேபிளாக இருக்கும்; ரேஸ் பைக்கின் முன் பக்க வீல் லைட்டாக இருக்கும். ரேஸ் டிராக்கின் நெருக்கமான வளைவுகளில் திணறாமல் திரும்பும். இதற்காக முன்பக்க சஸ்பென்ஷனில் தனியாக எந்த மாற்றமும் செய்யவில்லை. எடை இங்கொரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. ரேஸ் பைக்கின் எடை குறைவதால், பைக்கின் முன்பக்கம் துரிதமாகத் திரும்புகிறது. டிராக்கின் தன்மை சாதாரண சாலையைவிட ஸ்மூத்தாக இருக்கும். அதுவும் இந்த வித்தியாசத்துக்குக் காரணம்.

ரோடு பைக்கில் பயன்படுத்தும்  Keihin CV கார்புரேட்டார்தான், ரேஸ் பைக்கிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஏர் ஃபில்டர், கேம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப கார்புரேட்டர் டியூன் செய்யப்பட்டுள்ளது. ரேஸ் பைக்கின் எடை, ரோடு பைக்கைவிட 13 கிலோ எடை குறைவு.

ரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்?

RR310

அப்பாச்சி RTR 200 போலவே, ரேஸ் டிராக்கில் பயன்படுத்தும் RR310 பைக்கும் 4bhp பவர் அதிகம். இன்ஜின் வேகம் 10,300 rpm வரை உயர்த்தப்பட்டுள்ளது. 

பிரேக், சஸ்பென்ஷன் போன்றவற்றில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ரோடு பைக் அதிகபட்சமாக 160 கி.மீ வேகம் வரை செல்லும்.  RR310 ரேஸ் பைக், அதிகபட்சமாக 175 கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது.

ஏற்கெனவே பைக்கில் Fi உடன் 40 மிமீ திராட்டில் பாடி பயன்படுத்தப்பட்டுள்ளதால், குறைவான இன்ஜின் வேகத்திலேயே அதிக பவர் கிடைத்துவிடும். ரோடு பைக்கைவிட இன்ஜின் வேகம் அதிகமாக இருப்பதால், சாதாரண எக்ஸாஸ்ட்டுக்குப் பதிலாக  High Rev Limiter எக்ஸாஸ்ட் பைப் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப இன்டேக் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்பு மாற்றப்பட்டு, கூடுதல் பெட்ரோல் கிடைக்கும்படி ECU டியூன் செய்யப்பட்டுள்ளது.இதைத் தவிர, அப்பாச்சி RR310 பைக்கில் வேறு எந்த மாற்றமும் செய்யவில்லை’’ என்றனர். 

‘‘Reverse Inclined Engine, பைக் கார்னர்களில் திரும்பும்போது நல்ல ஸ்டெபிளிட்டியைத் தந்தாலும், நேர் பாதைகளில் ஸ்டெபிளிட்டி குறைவாகவே இருக்கும். அதை எப்படிச் சரி செய்தீர்கள்?’’

‘‘RR310, டிராக்குக்காகவே உருவாக்கப்பட்ட பைக் என்பதால், டம்மி ரைடரை வைத்து விண்ட் டனல் டெஸ்ட் மூலம் பைக்கின்  Coefficient of Drag (Cd)-யை 0.52 என்ற அளவுக்குக் குறைவாக வைத்துள்ளோம். இதனால், டிராக்கில் வேகமாகச் செல்லும்போது, பைக் அலைபாய்வதைக் குறைத்துள்ளோம்’’ என்றனர்.