Published:Updated:

வந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்!

வந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்!
பிரீமியம் ஸ்டோரி
வந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்!

அறிமுகம் - சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ராகுல் சிவகுரு

வந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்!

அறிமுகம் - சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ராகுல் சிவகுரு

Published:Updated:
வந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்!
பிரீமியம் ஸ்டோரி
வந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்!

நீங்கள் இந்தச் செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சுஸூகி நிறுவனம் தனது பிரீமியம் ஸ்கூட்டரான பர்க்மேன் ஸ்ட்ரீட்டை அறிமுகப்படுத்தியிருக்கும். ஆம், 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்திய மேக்ஸி ஸ்கூட்டர்தான் இது! உலக சந்தைகளில் பல்வேறு இன்ஜின் திறனில் (125சிசி, 200சிசி, 250சிசி, 400சிசி, 600சிசி) விற்பனை செய்யப்படும் பர்க்மேன் ஸ்ட்ரீட், கைனடிக் ப்ளேஸ் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அறிமுகமாகப் போகும் மேக்ஸி ஸ்கூட்டராக இருக்கப்போகிறது.

வந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்!

அதனைப் பறைசாற்றும் விதமாக, பெரிய விண்ட் ஸ்கிரீன் மற்றும் ஏப்ரன் - நீட்டான ஹெட்லைட்டின் வடிவமைப்பு அமைந்திருக்கின்றன. ஹோண்டா கிராஸியாவைத் தொடர்ந்து, பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் LED ஹெட்லைட் இருக்கிறது! ஜிக்ஸரில் இருக்கும் அதே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ரியர் வியூ மிரர்கள், இந்த ஸ்கூட்டரிலும் இருக்கின்றன. பலவித அம்சங்களுடன் கூடிய கீ-ஸ்லாட், சீட்டுக்கு அடியே ஸ்டோரேஜ் ஸ்பேஸ், பைகளை மாட்ட கொக்கி, 12V சார்ஜிங் பாயின்ட், LED டெயில் லைட், அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள் எனப் போதுமான வசதிகளும் இருக்கின்றன.

ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே 124.3சிசி, சிங்கிள் சிலிண்டர், SEP இன்ஜின்தான், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இது வெளிப்படுத்தும் 8.6bhp பவர் மற்றும் 1.02kgm டார்க்கிலும் மாற்றமில்லை. அதேபோல, முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் - CBS டிஸ்க் பிரேக் - 12 இன்ச் வீவில் MRF 90/90 டயர் மற்றும் பின்பக்க மோனோஷாக் - CBS டிரம் பிரேக் - 10 இன்ச் வீலில் MRF 90/100 டயர் என மெக்கானிக்கல் செட்-அப், அப்படியே ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் இருப்பதுதான். அந்த ஸ்கூட்டரைவிட, 5,000 முதல் 8,000 ரூபாய் வரை கூடுதல் விலையில், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரின் விலை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.