Published:Updated:

இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

ஃபர்ஸ்ட் ரைடு - ஏத்தர் S 450 ஸ்கூட்டர்தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ

இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

ஃபர்ஸ்ட் ரைடு - ஏத்தர் S 450 ஸ்கூட்டர்தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ

Published:Updated:
இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?
பிரீமியம் ஸ்டோரி
இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

நா ‘ஒருமுறை சார்ஜ் செய்தால், 70, 80 கி.மீ மட்டும்தான் செல்ல முடியும். அதிகபட்ச வேகமும் மற்ற ஸ்கூட்டர்களைவிட குறைவு’ - எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்து இப்படி பல கருத்துகள் மக்களிடையே இருக்கின்றன. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் கான்செப்ட் ஸ்கூட்டராக சோதனை செய்யப்பட்டுவந்த ஏத்தர்-340 எனும் ஸ்கூட்டர், இப்போது விற்பனைக்குவந்துள்ளது. இன்னும் கொஞ்சம் வசதிகளைச் சேர்க்கலாமா என யோசித்து, கூடவே சர்ப்ரைஸாக 450 எனும் மாடலையும் கொண்டுவந்துள்ளனர். இரண்டும் ட்வின்ஸ் போல இருந்தாலும், இரண்டுக்கும் பர்ஃபாமென்ஸ் வித்தியாசம் உள்ளது. 340-ஐ விட விலை அதிகமான 450  மாடலை டெஸ்ட் செய்தோம்.

இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?
இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

டிசைன்

ஏத்தர் ஸ்கூட்டரின் டிசைன், வெரி சிம்பிள். இப்போதைக்கு வெள்ளை வண்ணம் மட்டும்தான், எதிர்காலத்தில் வேறு நிறங்களில் வரலாம். LED ஹெட்லைட் இந்த ஸ்கூட்டரின் ஒல்லியான ஏப்ரானுக்கு பொருத்தமாக உள்ளது. ஹெட்லைட் போலவே டெயில் லைட்டும் இண்டிகேட்டர்களும் கவர்ச்சியாக உள்ளன.  ஏப்ரானில் ஆரம்பித்து பின் வீல் வரை நீண்டு, பில்லியன் ஃபுட்ரெஸ்ட்டாக முடியும் இதன் சைடு ஸ்கர்ட், ஸ்கூட்டரின் முக்கியமான டிசைன் டச். மொத்த ஸ்கூட்டரின் ஃபினிஷிங்குக்கும் நூறு லைக்குகளை போடலாம். சீட்டுக்குக் கீழே உள்ள ஸ்டோரேஜ் ஸ்பேஸ் அதிகமோ அதிகம். பிரீமியம் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் உள்ளே அடங்குகிறது. உள்ளே இருக்கும் LED ஸ்டிரிப் மொத்த இடத்தையும் வெளிச்சம் பாய்சுகிறது.

டேஷ்போர்டு

ஏத்தர் ஸ்கூட்டரில் இருக்கும் பெரிய 7 இன்ச் டச் ஸ்கிரீன், ‘இந்திய ஸ்கூட்டர்களிலேயே முதல் முறையாக’ என்ற இன்ட்ரோவுக்கு பொருத்தமானது. இதுதான் இந்தியாவிலேயே முதன்முறையாக ‘கெபாசிடிவ் டச்’ ஸ்கிரீனுடன் வரும் ஸ்கூட்டர். டச் ஸ்கிரீன், ஸ்கூட்டர் ஓட்டும்போது கவனக்குறைவை ஏற்படுத்தும்; பாதுகாப்பு பங்கம் விளைவிக்கும் என்று யோசிக்கத் தேவையில்லை. காரணம், ஸ்கூட்டரை நிறுத்தினால் மட்டுமே டச் வேலை செய்யும்.

ஏத்தரின் இந்த டச் ஸ்கிரீனுக்கு IP65 ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஸ்கிரீனின் உள்ளே தூசு நுழையாது மற்றும் குறைந்த பிரஷரில் வாட்டர் வாஷ் செய்யலாம். சாதாரண ஸ்கூட்டர்களை போல ஸ்பீடோ மீட்டர், ஓடோ மீட்டர், ட்ரிப் மீட்டர், ஸ்பீடு இண்டிகேட்டர், ரேஞ்ச் இண்டிகேட்டர் என எல்லாமே உள்ளன. கூடுதலாக, செட்டிங்ஸ் போக டிராப் டவுன் மெனு, ஜிபிஎஸ் நேவிகேஷன், பார்க் அசிஸ்டன்ட் என மூன்று வசதிகளை ஸ்கிரீனின் மூன்று கார்னரிலும் தெளிவாகத் தெரியும்படி வைத்திருக்கிறார்கள். ஏத்தரின் மொபைல் ஆப் டவுன்லோட் செய்தால், இன்னும் பலவசதிகளை பயன்படுத்தலாமாம். பார்க் அசிஸ்டன்ட் பயன்படுத்தினால், ஸ்கூட்டர் 3கி.மீ வேகத்தில் ரிவர்ஸில் போகும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பின்பக்கம் நகர்த்தும்போது பின் வீலில் விசை உருவாவதால், நகர்த்துவது கொஞ்சம் சிரமம். அதனால், இந்த பார்க் அசிஸ்ட் நிச்சயம் தேவையானதுதான். ஸ்கூட்டரில் இருக்கும் ‘எக்கோ மோடு’ செலெக்ட் செய்தால், ஸ்கூட்டரின் உச்சபட்ச வேகமும், ரெஸ்பான்ஸும் குறைத்துவிடும். ஆனால், கூடுதல் ரேஞ்ச் கிடைக்கும்.

இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

சூப்பர் பைக்குகளிலும், ரேஸ் பைக்குகளிலும் மட்டுமே இருக்கும் 6 Axis IMU சென்ஸார் இதில் உள்ளது. ஸ்கூட்டருடன் ஒரு சிம்கார்டையும் பொருத்தி கொடுக்கிறார்கள். இதன் மூலம் நாம் ஸ்கூட்டரை எப்படி ஓட்டுகிறோம் என்பதை ஜிபிஎஸ் மூலம் ஆக்ஸிலரேஷன், பிரேக்கிங், கார்னரிங் போன்றவற்றை வைத்து கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள். ‘இரும்புத்திரை’ படம் பார்த்துவிட்டு, என் டேட்டா எனக்குத் தெரியாமலே எடுக்குறாங்களே என்று யோசித்தால், கூகுள் குரோம் போல ஸ்கூட்டரையும் இன்காக்னிட்டோ மோடில் போட்டுவிடலாம்.

மூலை ஓகே, வேலை எப்படி?

ஏத்தர் 450 ஸ்கூட்டரின் 765 மிமீ சீட் உயரம் சரியாகப் பொருந்தியது. கிராஸியாவின் 766 மிமீ-யையும், ஏப்ரிலியாவின் 775 மிமீ உயரத்தையும் ஒப்பிட்டால் இந்த உயரம் குறைவு. ஆனால், ஒரு ஸ்போர்ட்டி ஸ்கூட்டருக்கு ஏற்ற உயரம்தான். சாவியைப் போட்டு ஸ்டார்ட்டரை அழுத்தினால், ஸ்கூட்டரில் ஸ்கிரீன் ஆன் ஆவதை தவிர எந்த சலனமும் தெரியாது. அவ்வளவு அமைதி. லைட்டாக ஆக்ஸிலரேட்டரை முறுக்கியதுமே ஸ்கூட்டர் நகர ஆரம்பிக்கிறது.

இப்படியே அமைதியாகப் போனால், 25 கி.மீ மேல் தூங்கிவிடுவோமோ எனத் தோன்றும். ஆனால், ஸ்போர்ட்டி ஸ்கூட்டர் என்பதைக் காண்பிக்கும் விதமாகவே இருக்கிறது 450. சட்டென 50 கி.மீ வேகத்தைத் தொட்டுவிடுகிறது. இதற்குமேல் எப்படியும் பவர் குறைந்துவிடும் என்று நினைத்திருந்தேன். ஆனால், வேகமெடுத்துக்கொண்டே இருந்தது ஏத்தர்.

இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

50 கி.மீ வேகத்தைத் தாண்டியதும் 75 கி.மீ வரை ‘ஒய்ய்ன்ன்ன்’ என்று ஜெட் விமானம் போல சத்தம் போட்டுக்கொண்டே போனது. இதை எதிர்பார்க்கவில்லை. சாலையில் இந்தச் சத்தத்தோடு போனால், எல்லோரும் திரும்பிப் பார்ப்பார்கள். இதுவரை ஓட்டிய எல்லா ஸ்கூட்டர்களைவிடவும் விரைவாக வேகத்தை எட்டியது ஏத்தர் 450. டிராஃபிக்கில் கிரீன் சிக்னல் போட்ட உடனேயே 150சிசி பைக்குகளை கூட ஓவர்டேக் செய்துவிட்டுப் போய்விடலாம். மிட் ரேஞ்சில் பவருக்கு பஞ்சமே இல்லை. 75 கிலோ ரைடரை ஏற்றிக்கொண்டு செல்லும்போதும், அலட்டிக்கொள்ளாமல் செல்கிறது. டபுள்ஸ் போகும்போதுகூட அதிக எடை இருக்கிறதோ என்று யோசிக்கவிடவேயில்லை. 125சிசி ஸ்கூட்டர்களைவிட விரைவாக இருந்தாலும், 75 கி.மீ எனும் உச்சபட்ச வேகம் குறைவானது. சிட்டியில் பயன்படுத்த மட்டுமே இது போதுமானது. 450-யின் இந்த பர்ஃபாமென்ஸுக்குக் காரணம், லித்தியம் ஐயான் பேட்டரியும் 5.1 kW பிரெஷ்லெஸ் மோட்டாரும்தான். இந்த பேட்டரியை ஸ்கூட்டரின் ஃப்ளோர் போர்டுக்குக் கீழே அலுமினியம் பெட்டியில் வைத்துள்ளார்கள். இதனால், பேட்டரி அரைமணி நேரம் தண்ணீரில் முழ்கினாலும் எதுவும் ஆகாது. அதற்குமேல் போனால் ஆபத்து. மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மோட்டாரை வீலில் பொருத்தியிருப்பார்கள் 450-யில் வித்தியாசமாக ஃபிரேமில் பொருத்தியிருக்கிறார்கள். இது ஸ்கூட்டரை ஸ்போர்ட்டியாக மாற்றுகிறது.

வேகம் மட்டுமா, ஃபன்னும் உள்ளதா?

நகரும் டிராஃபிக்கில் பொறுமையாகப் போவதால், நிறைய பேர் கடுப்பாவார்கள். ஆனால், ஏத்தர் நம்மை ஏமாற்றவில்லை. இதில் இருக்கும் அலுமினியம்-ஸ்டீல், ஹைப்ரிட் ஃபிரேம் எடையைக் குறைக்கிறது. ஸ்விங்ஆர்ம் 4.2 கிலோ, ஸ்டீல் சப்-ஃபிரேம் 3.5 கிலோ மட்டுமே. 90 செக்‌ஷன் டயர்களுடன் இருக்கும் 12 இன்ச் வீல்கள் சிட்டி ரைடுக்கு ஏற்றதாக உள்ளது. பின்பக்கம் மோனோ ஷாக்கும், முன்பக்கம் டெலஸ்கோப்பிக் சஸ்பென் ஷனும் ஸ்கூட்டரை டிராஃபிக்கில் நுழைந்து சட்டென்று திருப்புவதற்கு ஏற்ற மாதிரி ஸ்போர்ட்டியாக இருக்கிறது. சஸ்பென்ஷன் ஸ்டிஃப்பாக இருப்பதால் ரைடு சொகுசாக இருக்காது. ஆனால், ஸ்போர்ட்டியாக இருக்கும்.

450-யில் இருக்கும் இரண்டு டிஸ்க் பிரேக்குகளைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஹோண்டா போல காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. முன்பக்க டிஸ்க் டல் அடித்தாலும், பின்பக்கம் ஷார்ப். பின்பக்கம் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் இருக்கிறது என்று சொன்னால் மட்டுமே தெரியும். அது, வேலை செய்வதை உணர முடியாது. ஒரு வழியாக மொத்த எடையையும் 118 கிலோவில் அடக்கிவிட்டார்கள்.

இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

சார்ஜிங் ஸ்டேஷன்!

இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன் குறைவு என்பதால், ஏத்தரின் 75 கி.மீ ரேஞ்ச் போதாது. அதிக ரேஞ்ச் கொடுப்பதால், பேட்டரியை குறைந்த காலத்திலேயே மாற்றவேண்டிவரும். தற்போது ஏத்தர் பேட்டரிகளுக்கு 50,000 கி.மீ வரை வாரன்டி தரப்படுகிறது. ஏத்தர் 450-யின் பேட்டரி 2.40 மணி நேரத்தில் 80 சதவிகிதம் சார்ஜாகிவிடும். முழுமையாக சார்ஜ் ஆவதற்கு 4.18 மணி நேரம் தேவை. தற்போது பெங்களூரில் 14 சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவியுள்ளது இந்நிறுவனம். ‘ஏத்தர் க்ரிட்’ எனும் இதில் சார்ஜ் செய்தால், நிமிடத்துக்கு ஒரு கி.மீ எனும் ரேஞ்சில் சார்ஜ் ஆகும். இன்னும் 60 ஏத்தர் க்ரிட்களை பெங்களூரில் அமைக்கவிருக்கிறார்கள். 3 கி.மீ-க்கு ஒரு சார்ஜரை பொருத்திவிட்டு மற்ற சிட்டிகளுக்கும் ஏத்தர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யலாம் எனும் முடிவில் இந்நிறுவனம் உள்ளது. அடுத்த ஆண்டு சென்னையிலும், வெகுவிரைவில் கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

1 டெல்ஸ்கோப்பிக் ஃபோர்க்கும், 12 இன்ச் வீலும் ஸ்போர்ட்டி ரைடுக்காகவே...

2 ஃப்ளோர் போர்டில் உள்ள பேட்டரி பேக் குறைவான சென்டர் ஆஃப் கிராவிட்டியை உருவாக்குகிறது. மேலும், ஒரு மீட்டர் ஆழம் கொண்ட நீரில் மூழ்கினால் பேட்டரிகள் 30 நிமிடங்கள் வரை தாக்குபிடிக்கும்.

3
அலுமினியத்தால் ஆன சப் ஃபிரேம் மற்றும் ஸ்விங் ஆர்ம், ஸ்கூட்டரின் குறைவான எடைக்குத் துணைநிற்கிறது.

4 இன்ஜினைவிட மோட்டார் சிறிதாக இருப்பதால், பைக்குகளைபோல மோனோஷாக் பொருத்துவதற்கு அதிக இடம் கிடைத்துள்ளது.

5 Brushless DC மோட்டார், பவரை 2-step ரிடெக்‌ஷன் சிஸ்டம் வழியாக, பெல்ட் டிரைவைப் பயன்படுத்தி சக்கரத்துக்குக் கடத்துகிறது.

இந்தியாவின் டெஸ்லாவா ஏத்தர்?

பெட்ரோல் விலை நாளுக்குநாள் உயர்வதால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கி ஓட்டுவோமா என்ற யோசனை வந்துவிடுகிறது. டாப் ஸ்பீடை தவிர ஒரு 125cc ஸ்கூட்டர் எப்படியிருக்குமே அதற்குக் கொஞ்சமும் சளைத்ததல்ல ஏத்தர் 450. இதன் நடைமுறை தன்மையும், வசதிகளும் இப்போது இருக்கும் சாதாரண எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஒருபடி மேலே உள்ளது. ஆனால், ரூ.1,24,750 எனும் ஆன்ரோடு விலை, கொடுத்திருக்கும் வசதிகளுக்கு சரியான விலைதான் என்றாலும், இன்னும் குறைவாக இருந்திருக்கலாமே என்று யோசிக்கவைக்கிறது. போக்குவரத்துக்கு மட்டுமே ஸ்கூட்டர் எதிர்பார்ப்பவர்களுக்கும் எலெக்ட்ரிக்கோ இல்லையோ, மற்ற ஸ்கூட்டர்களை ஒப்பிடும்போது ஏத்தர் நல்ல தேர்வாகவே இருக்கும். மொபைல்போன், கம்ப்யூட்டர் போல எந்தவொரு தொழில்நுட்பமும் காலம் போகப்போக விலையும் குறையும். ஏத்தரின் விற்பனை கூடும்போது அதன் விலையும் குறையும் என எதிர்பார்க்கலாம்.