Published:Updated:

கேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா? - ரிலீஸ் 2019

கேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா? - ரிலீஸ் 2019
பிரீமியம் ஸ்டோரி
கேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா? - ரிலீஸ் 2019

கேடிஎம் 390 அட்வென்ச்சர்ராகுல் சிவகுரு

ட்வென்ச்சர் பைக் ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி! உங்களின் நீண்ட காலக் காத்திருப்புக்கு விடையாக, அடுத்த ஆண்டில் 390 அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது கேடிஎம்.

2016-ம் ஆண்டு முதல் டெஸ்ட்டிங்கில் இருக்கும் இந்த பைக்கின் ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, 19 இன்ச் முன்பக்க ஸ்போக் வீல் மற்றும் 17 இன்ச் பின்பக்க ஸ்போக் வீல் -  உயரமாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் விண்ட் ஸ்கிரீன், எக்ஸாஸ்ட் பைப், முன்பக்க ஃபெண்டர் - இன்ஜின் Skid ப்ளேட் - சஸ்பென்ஷன் செட்-அப்  என ஒரு அட்வென்ச்சர் பைக்குக்குத் தேவையான அம்சங்கள் இருக்கின்றன.

இதில் டியூக் 390 பைக்கில் இருக்கும் அதே 373.2சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் பொருத்தப்படும் என்றாலும், டியூனிங் - கியர் ரேஷியோ - செயின் ஸ்ப்ராக்கெட் ஆகியவற்றில் வித்தியாசம் இருக்கும். அதேபோல, டியூக் 390 பைக்கின் ட்ரெல்லிஸ் ஃப்ரேம்தான் அட்வென்ச்சர் பைக்கிலும் இருக்கும். பின்பக்கத்தில் தடிமனான பாக்ஸ் ஃப்ரேம் ஸ்விங் ஆர்ம் இடம்பெற்றுள்ளது. அக்டோபர் மாதத்தில் நடைபெறும் InterMot அல்லது நவம்பர் மாதத்தில் நடைபெறும் EICMA ஆகிய மோட்டார் எக்ஸ்போக்களில், இந்த பைக் காட்சிக்கு வைக்கப்படலாம்!

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், பிஎம்டபிள்யூ G310GS, கவாஸாகி வெர்சிஸ் X-300 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக, 390 அட்வென்ச்சர் பைக்கை கேடிஎம் களமிறக்கும். தனது G310GS அட்வென்ச்சர் பைக்கின் புக்கிங்கை (50,000 ரூபாய்  - முன்பதிவுத் தொகை) பிஎம்டபிள்யூ துவங்கியிருக்கும் நேரத்தில், கேடிஎம் இந்த அட்வென்ச்சர் பைக்கின் விலை பற்றி இன்னும் மூச்சு விடவில்லை.