கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

இன்ட்ரூடரில் இன்ஜெக்‌ஷன்!

இன்ட்ரூடரில் இன்ஜெக்‌ஷன்!
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ட்ரூடரில் இன்ஜெக்‌ஷன்!

அறிமுகம் - சுஸூகி இன்ட்ரூடர் Fiதொகுப்பு: தமிழ்

இன்ட்ரூடரில் இன்ஜெக்‌ஷன்!

ஜிக்ஸரில் லேட்டாக ஃப்யூயல் இன்ஜெக்‌ஷனைக் கொண்டு வந்தது சுஸூகி. இப்போது லேட்டஸ்ட்டாக இன்ட்ரூடரிலும் Fi இன்ஜினைக் கொண்டுவந்து விட்டது. Fi இன்ட்ரூடரில், ஒரு சின்ன ரைடு!

சுஸூகியின் சூப்பர் பைக்கான இன்ட்ரூடரின் இன்ஸ்பிரேஷன்தான் இந்த ஜூனியர் இன்ட்ரூடர். இதன் டிசைனும், கிராஃபிக்ஸும் கண்களை உறுத்தவில்லை. சதுர வடிவ யூனிக்கான ஹெட்லைட், கிளாஸாக இருக்கிறது. ஃப்யூல் டேங்க், ரயில் பெட்டிபோல நீளமாக இருக்கிறது. பாடி டிசைனில் அங்கங்கே வளைவு நெளிவுகள். அட... இதன் எக்ஸாஸ்ட்டைப் பாருங்கள். நிச்சயம் இதன் ஸ்டைல் வேறு எந்த பைக்குகளிலும் பார்த்ததில்லை. கார்புரேட்டர் பைக்குக்கும் Fi-க்கும் டிசைனில் பெரிய வித்தியாசமெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. ஹெட்லைட் பக்கத்தில் Fi எனும் பேட்ஜ் மட்டும்தான் இதன் அடையாளம்.

இன்ட்ரூடரில் இன்ஜெக்‌ஷன்!

இன்ஜினுக்கு வருவோம். கார்புரேட்டர் இன்ஜின் அறிமுகமான 4 மாதங்களுக்குப் பிறகு வந்துள்ளது Fi. ஜிக்ஸரில் இருக்கும் அதே Fi இன்ஜின்தான். 154.9 சிசி ஏர்கூல்டு, 14.8 bhp பவர், 1.4 kgm டார்க். டெக்னிக்கல் அம்சங்கள் அதேதான். ஆனால், கியர்பாக்ஸில் ஏதோ ஓவர்டைம் பார்த்துள்ளது சுஸூகி. கார்புரேட்டருக்கும் Fi-க்கும் உள்ள இன்னொரு வித்தியாசம், எடை. 1 கிலோ எடை கூடியிருந்தால், Fi. கார்புரேட்டர் - 148 கிலோ. ஆனால், த்ராட்டில் ரெஸ்பான்ஸில் Fi-க்கும் கார்புரேட்டர்-க்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. கார்புரேட்டர் ஓட்டுவதுபோல்தான் இருக்கிறது இந்த Fi. மிட் ரேஞ்சில் மட்டும் ஸ்ட்ராங் ஃபீலிங் கிடைத்தது. Fi-ல் டாப் எண்ட் மந்தமாகி விட்டது போன்ற உணர்வு.

ரைடிங் பொசிஷன் சுஸூகியில் எப்போதுமே பெஸ்ட்தான். இன்ட்ரூடரிலும் அப்படித்தான். இதன் சீட் உயரம்  740 மிமீதான். அதனால் உயரமானவர்கள், உயரம் குறைந்தவர்கள் இருவருக்குமே நல்ல ரைடிங் பொசிஷன் கிடைக்கிறது. கால் வைக்கும் ஃபுட் பெக்குகள் கொஞ்சம் முன்னோக்கி இருப்பதால் ஸ்போர்ட்டியாகவும் இருக்கும். மற்றபடி ஃப்ரேம், டயர்கள், பிரேக்ஸ் எல்லாமே ஜிக்ஸரின் வழித்தோன்றல்களே!

இன்ட்ரூடரில் இன்ஜெக்‌ஷன்!

நீளமான பைக்காக இருந்தாலும், கார்னரிங்கில் இன்ட்ரூடர், செம ஃபன் பைக்காக இருக்கிறது. ஸ்டெபிளிட்டியும் பக்கா! கம்ஃபர்ட் லெவலும் சூப்பர். மோசமான மேடு, பள்ளங்களில் பயணிக்கும்போது மட்டும் அதிர்வுகள் அதிகமாக இருக்கின்றன.

கார்புரேட்டரைவிட ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட இன்ட்ரூடர் 7,500 ரூபாய் அதிகம். Fi-க்காக 7,500 ரூபாய் விலையை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், ரைடிங்கில் இருந்து த்ராட்டில் ரெஸ்பான்ஸ் வரை கார்புரேட்டர்  வெர்ஷன் கொண்ட இன்ட்ரூடர் ஓட்டுவதுபோலவேதான் இருக்கிறது.