Published:Updated:

பஜாஜ் வெளியிட்டிருக்கும் புதிய டியூக், பல்ஸர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பஜாஜ் வெளியிட்டிருக்கும் புதிய டியூக், பல்ஸர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?!
பஜாஜ் வெளியிட்டிருக்கும் புதிய டியூக், பல்ஸர் பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?!

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டூ-வீலர்களில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரே 150 சிசி பைக் பல்ஸர்தான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையான 1.6 லட்ச ரூபாய்க்கு, ஏபிஎஸ் கொண்ட டியூக் 200 பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது கேடிஎம். இதில் இருக்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் அமைப்பை, Bosch நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதைத் தவிர டியூக் 200 பைக்கில் மெக்கானிக்கலாகவோ, தோற்றத்திலோ எந்த வித்தியாசமும் இல்லை. எனவே லிக்விட் கூலிங், 4 வால்வ், DOHC, Fi ஆகியவற்றைக் கொண்ட 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, WP நிறுவனத்தின் 43மிமீ USD ஃபோர்க் - அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், 300மிமீ - 230மிமீ டிஸ்க் பிரேக் செட்-அப், 3 கலர் ஆப்ஷன்கள் (ஆரஞ்ச் - வெள்ளை - கறுப்பு) ஆகியவற்றில் எதிர்பார்த்தபடியே எந்த மாற்றத்தையும் பஜாஜ் செய்யவில்லை.

இந்தியாவில் 450 டீலர்களைக் கொண்டிருக்கும் கேடிஎம்-க்கு, இங்கே பெஸ்ட் செல்லராக இருப்பது டியூக் 200தான்! ஏபிஎஸ் கொண்ட பைக்குடன், ஏபிஎஸ் இல்லாத மாடலும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை 1.52 லட்ச ரூபாய். 

கேடிஎம் டியூக் 125

சில நாள்களுக்கு முன்புவரை, இந்தியாவில் டியூக் 200 தான் கேடிஎம்மின் விலைகுறைவான பைக்காக இருந்துவந்தது. தற்போது அந்த பெருமையைத் தட்டிப் பறித்திருக்கிறது புதிய டியூக் 125. டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையான 1.18 லட்ச ரூபாய்க்குக் களமிறங்கியிருக்கும் இது, கேடிஎம் டியூக் 200 பைக்கை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டுக்கும் க்ராஃபிக்ஸ் மட்டும்தான் வித்தியாசம்! ஆனால், சர்வதேச டியூக் 125, டியூக் 390 பைக்கைப் போன்ற டிசைனைக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இங்கே வரலாறு கொஞ்சம் வேறு விதமாகத் திரும்பியிருக்கிறது. ஆம், 2012-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இதே டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைக்குத்தான் கேடிஎம் டியூக் 200 பைக் அறிமுகமானது என்பது ஸ்பெஷல்! ஏப்ரல் 1, 2019 முதலாக 125சிசி-க்கும் அதிகமான டூ-வீலர்களில் ஏபிஎஸ் கட்டாயமாக்கப்பட இருக்கிறது. எனவே, டியூக் 125 பைக்கில் CBS அமைப்பைப் பொருத்தாமல், டியூக் 200 போல சிங்கிள் சேனல் ஏபிஎஸ்ஸைச் சேர்த்திருக்கிறது கேடிஎம். 

இதனால், இந்தியாவில் ஏபிஎஸ் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட முதல் 125சிசி பைக்காக இது பெயர் பெற்றிருக்கிறது. டியூக் 125 பைக்கில், 14.5bhp@9,250rpm பவர் மற்றும் 1.2kgm@8,000rpm டார்க்கை வெளிப்படுத்தும் 124.7சிசி, லிக்விட் கூல்டு, 4 வால்வ், DOHC, Fi ஆகியவற்றைக் கொண்ட சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், டியூக் 200 போல, இங்கும் ஸ்லிப்பர் க்ளட்ச் கிடையாது. 818 மிமீ சீட் உயரம் கொண்டிருக்கும் டியூக் 125 பைக்கின் எடை 148 கிலோ. 125சிசி செக்மென்ட்டின் பவர்ஃபுல் & எடை அதிகமான பைக்காக இது இருப்பதற்கு நல்ல காரணம் இருக்கிறது. அதாவது இன்ஜின் தவிர, இந்த பைக்கின் மெக்கானிக்கல் செட்-அப் அப்படியே டியூக் 200தான். இதனால் மற்ற 125 சிசி பைக்குகளைவிட இதன் ஓட்டுதல் அனுபவம் சிறப்பாக இருக்கும், இதனால் சிறிய 125சிசி இன்ஜினைக் கொண்டிருந்தாலும், விலை விஷயத்தில் இது யமஹா YZF-R15 V3.0 (1.27 லட்ச ரூபாய் - டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V Race Edition (1.11 லட்ச ரூபாய் - டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) போன்ற 150சிசி/200சிசி பைக்குகளுடன் போட்டிபோடுகிறது. 

பஜாஜ் பல்ஸர் 150 ட்வின் டிஸ்க்

ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டூ-வீலர்களில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரே 150 சிசி பைக் பல்ஸர்தான்! இப்படித் தனது பெயர்சொல்லும் பைக்காக இருக்கும் இதில், சில அப்டேட்களை செய்திருக்கிறது பஜாஜ். அதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த ட்வின் டிஸ்க் மாடலில், இன்ஜினுக்கு UnderBelly பேனல் சேர்க்கப்பட்டிருக்கிறது. பைக்கின் 2 கலர் - கிராஃபிக்ஸ் ஆப்ஷன்களும் (கறுப்பு - சிவப்பு, கறுப்பு - நீலம்) மாறுதல் பெற்றுள்ளன. மேலும், நடுப்புற பாடி பேனல்களில் மேட் ஃப்னிஷ் இடம்பெற்றுள்ளது. புனே ஆன்-ரோடு விலையான 96,300 ரூபாய்க்குக் கிடைக்கும் இது, முந்தைய ட்வின் டிஸ்க் மாடலைவிட 1,500 ரூபாய் அதிகம் எனத் தகவல் வந்திருக்கிறது. மெக்கானிக்கலாக (ஃப்ரேம், டயர்கள் - சஸ்பென்ஷன், சீட், பிரேக்) இது பல்ஸர் 180 பைக்கையே நினைவுபடுத்துகிறது. 

பஜாஜ் பல்ஸர் 150 க்ளாஸிக்/Neon

கடந்த ஜூன் மாதத்தில் கறுப்பு நிறத்தில் மட்டும் வெளிவந்த பல்ஸர் 150 க்ளாஸிக், இந்தியாவின் விலைகுறைவான 150சிசி பைக் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் தற்போது அந்த பைக்கில் புதிய கலர் ஆப்ஷன்களைச் சேர்த்திருக்கிறது பஜாஜ். எனவே Gloss கறுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும் மாடலில் ஆங்காங்கே சிவப்பு/சில்வர் நிற வேலைப்பாடுகள் (ஹெட்லைட், பேட்ஜ், பக்கவாட்டு பேனல், கிராப் ரெயில், வீல் ரிம், சீட்) எட்டிப்பார்க்கின்றன. இதுவே பல்ஸர் 150 Neon எனும் க்ளாஸிக் மாடலில், சிவப்பு/மஞ்சள்/சில்வர் வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. தவிர பல்ஸர் 150 வரலாற்றிலேயே முதன்முறையாக இங்கே மேட் ப்ளாக் கலரில் பைக் காட்சியளிக்கிறது. இதன் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 66,770 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டிலுமே இருப்பது, 14bhp@8,000rpm பவர் மற்றும் 1.34kgm@6,000rpm டார்க்கை வெளிப்படுத்தும் 149சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி. கார்புரேட்டர் மற்றும் 2 வால்வ் அமைப்புடன் இயங்கும் இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், ட்வின் டிஸ்க் மாடலில் இருப்பதுதான். 240மிமீ டிஸ்க் - 130மிமீ டிரம் பிரேக் செட்-அப், டெலிஸ்கோபிக் ஃபோர்க் - ட்வின் கேஸ் Charged ஷாக் அப்சார்பர், டபுள் Cradle ஃப்ரேம் என மெக்கானிக்கல் அம்சங்களில் இவை ஒற்றுமையாகவே இருக்கின்றன. இது ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் மாடல் என்பதால், இதில் ஏபிஎஸ் பொருத்தவேண்டிய அவசியம் பஜாஜுக்கு ஏற்படவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு