Published:Updated:

“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை!”

“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை!”

நேர்காணல் - பெனெல்லி இந்தியா

“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை!”

நேர்காணல் - பெனெல்லி இந்தியா

Published:Updated:
“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை!”

ந்தியாவுக்குள் இறங்கியதுமே இத்தாலியின் பெனெல்லிக்குச் சோதனை மேல் சோதனை. BS-IV மாற்றம், டி.எஸ்.கே நிறுவனத்தின் முடக்கம் என இரண்டு பெரிய நெருக்கடிகளைச் சந்தித்ததால், சில மாதங்களாக பெனெல்லியின் செயல்பாட்டில் மந்தநிலை தெரிந்தது. ஆனால், இப்போது இந்தியாவில் புதிய கூட்டணி மூலம் மீண்டும் தனது முந்தைய ஃபார்முக்குத் திரும்புகிறது பெனெல்லி. மஹாவிர் குழுமத்தின் இயக்குநர் விகாஸ் ஜாபக் மற்றும் பெனெல்லியின் விற்பனைத் துறைத் தலைவர் டான்டே பஸ்டோஸ் இருவரையும் சந்தித்தேன்.

“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை!”

‘’பெனெல்லியின் பிளான் என்ன?’’

‘‘இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 302S, லியோன்சினோ 500 மற்றும் லியோன்சினோ ட்ரெய்ல் பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கிறோம். அடுத்த ஆண்டு முடிவுக்குள் TNT, TRK, Imperiale பைக்குகள் என 12 பைக்குகளுக்குத் திட்டம் இருக்கிறது. இந்தியாவில் 18 ஆக இருக்கும் பெனெல்லி ஷோரூம்கள், அடுத்த ஆண்டுக்குள் 40 ஆகலாம்.”

‘‘புதிய வாகன விதிமுறைகளில் பெனெல்லியின் நிலை?’’

‘‘ஏபிஎஸ் இல்லாத பைக்கை பெனெல்லி வெளியிடாது. BS-IV மாற்றத்தின்போது  TNT899 மற்றும்  TNT1130 மாடல்களை அப்டேட் செய்யமுடியாமல் இழந்துவிட்டோம். இந்தமுறை அப்படி எதுவும் நடக்காது.’’

‘‘பெனெல்லியின் பைக்குகள் விலை குறைவாக இருந்தாலும், அதன் பராமரிப்புச் செலவு அதிகமாக இருக்கிறதே?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை!”

‘‘ஸ்பேர் பார்ட்ஸ் விலை, பைக்கின் சர்வீஸ் இன்டர்வெல் போன்றவற்றை மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளோம். லாங் டெர்ம் இன்ஷூரன்ஸ், 4 ஆண்டு மெயின்டனென்ஸ் பேக்கேஜ் போன்ற புதிய திட்டங்களையும் வெளியிடுவோம். காஸ்ட் ஆஃப் ஓனர்ஷிப் முன்பைவிட இனி குறைவாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.”

‘‘உள்நாட்டுத் தயாரிப்பில் பெனெல்லியின் நிலை என்ன?’’

‘’கேடிஎம், பிஎம்டபிள்யூ, டிரையம்ப் எதுவுமே ஆசிய நிறுவனங்கள் கிடையாது. ஆனால், பெனெல்லி இத்தாலிய நிறுவனம் என்றாலும், இப்போது முழுக்க முழுக்க சீனாவில்தான் தொழிற்சாலை இருக்கிறது. பைக்கின் 80 சதவிகித பாகங்களை நாங்களே தயாரித்துக் கொள்கிறோம். மீதம் உள்ள 20 சதவிகிதம்தான் சில நிறுவனங்கள் தயாரிக்கின்றன. நாங்கள் எந்த உள்நாட்டுத் தயாரிப்பாளர்களுடனும் கூட்டணி வைக்கவேண்டிய அவசியம் இருக்காது.’’

“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை!”

‘’பெனெல்லியில் எலெக்ட்ரிக் பைக்ஸ் ஏதும்...?’’

‘‘எலெக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி என்பது, சாதாரண பைக்குகளைப்போல் கிடையாது. மெக்கானிக்கல் இன்ஜினீயர்களைவிட சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் அதிகம் தேவை. சீனா போன்ற நாடுகளில் அரசுத் தரப்பில் இருந்து பல சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்தியாவிலும் அந்த நிலை வரும். ஒருமுறை விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டால் தாமதமாக வருபவர்களுக்கு இடமே கிடையாது. அதனால், நாங்களும் தயாராகத்தான் இருக்கிறோம். அதற்கான சூழல் வரும்போது நிச்சயம் எங்களிடமிருந்தும் எலெக்ட்ரிக் பைக்குகளை எதிர்பார்க்கலாம்.’’

“ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஆர்வம் இல்லை!”

‘‘பெனெல்லியில் 302R போல் அடுத்த ஸ்போர்ட்ஸ் பைக் எப்போது எதிர்பார்க்கலாம்?”

‘‘உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் பைக் வெளியிடுவதில் ஆர்வம் இல்லை. 302R பைக்கின் எடை அதிகம். ஸ்போர்ட்ஸ் பைக்கை விரும்புபவர்கள் எடை குறைவான பர்ஃபாமென்ஸ் அதிகமான பைக்கையே விரும்புகிறார்கள். TRK, லியோன்சினோ போன்ற மாடல்களைப் பயன்படுத்தி அதிக பைக்குகளை விற்பனை செய்வதுதான் இப்போதைய இலக்கு!’’

‘’பெனெல்லியின் 600 சிசி இன்ஜின், 2006 யமஹா R6 பைக்கின் இன்ஜின். இனி வரப்போகும் பைக்குகளிலும் யமஹாவின் இன்ஜின்தானா?’’

‘’இல்லை. வரவிருக்கும் புதிய பைக்குகளில் பெனெல்லியின் எடை மற்றும் விலை குறைவான புதிய இன்ஜின்கள்தான் இருக்கும். பழைய இன்ஜின்களை இனி பயன்படுத்தப் போவதில்லை.’’

ரஞ்சித் ரூஸோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism