கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

மூணு வீல் ஸ்கூட்டர்!

மூணு வீல் ஸ்கூட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
News
மூணு வீல் ஸ்கூட்டர்!

ஃபர்ஸ்ட் ரைடு - ட்ரையாங்கோ

ப்போது மூன்று வீல் ஸ்கூட்டர்கள்தான் ஐரோப்பாவில் டிரெண்டிங். 2006-ம் ஆண்டு விற்பனைக்கு வந்த பியாஜியோ MP3 ஸ்கூட்டர்தான் உலகின் முதல் மூன்று சக்கர ஸ்கூட்டர். இப்போது ஐரோப்பாவில் இரண்டு சக்கர ஸ்கூட்டர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிக் கொண்டிருக் கிறன்றன இவை. ஸ்டெபிளிட்டி, கிரிப், உயரம் குறைவானவர்களுக்கும் பயன்படுத்த சுலபமாக இருப்பது, ஐரோப்பாவின் எல்லா காலச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றது, பாதுகாப் பானது போன்ற சில காரணங்களுக்காக இந்த ஸ்கூட்டர்களை மக்கள் விரும்புகிறார்கள். 

மூணு வீல் ஸ்கூட்டர்!

ஃபிரான்ஸில் ட்ரையாங்கோவின் 50சிசி 2 ஸ்ட்ரோக் ஸ்கூட்டரை டெஸ்ட் சாம்பிளாகக் கொடுத்திருந்தார்கள். இந்த ஸ்கூட்டரின் பெரிய ப்ளஸ் Triango Arch Tilting System. பியாஜியோ சிறிய இன்ஜின் கொண்ட ஸ்கூட்டர்களைச் செய்ய மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்றதால், Tom Malphettes என்பவர் இந்த சிஸ்டத்தை உருவாக்கி டிரையாங்கோ ஸ்கூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.இரண்டு பக்கமும் 14 இன்ச் வீல்கள். வளையவேண்டும்; திரும்பவேண்டும்; சுழலவேண்டும்; பள்ளம் மேடுகளில் ஏறி இறங்கவேண்டும்; சாய்ந்து போகும்போது பேலன்ஸ் செய்ய வேண்டும்; இதெல்லாம் செய்யும்போது பிரேக்கும் போட வேண்டும். இதற்காக உருவாக்கப்பட்ட மெக்கானிக்கல் லிங்குகள்தான் Tilt Lock and Brake System (TiLaBS). இந்த ஸ்கூட்டரின் 50 cc இன்ஜினை, சீனாவின் Tianma Motorcycle உருவாக்குகிறது. 

மூணு வீல் ஸ்கூட்டர்!

ஐரோப்பாவில் இந்த ஸ்கூட்டர்களை ஏற்றுக் கொள்வதெல்லாம் பெரிய வேலையில்லை. இந்தியாவில் இதை ஏற்றுக் கொள்ள எங்களுக்குச் சரியான கூட்டாளி வேண்டும். கிடைத்தால் வருவோம் என்று சொல்கிறார் டாம். இந்தியாவில் 125 cc டிரையாங்கோ ஸ்கூட்டரை 70,000 முதல் 75,000 விலையில் கொண்டு வருவதுதான் எங்களின் எண்ணம் என்று கூறினார் டாம். இந்த ஸ்கூட்டர்கள் இந்தியச் சாலைகளுக்கு வருமா என்பது உறுதியில்லை. ஆனால், இப்போது ஐரோப்பாவில் விற்பனையில் இருப்பதால் சான்ஸ் கிடைத்தால் இந்த ஸ்கூட்டரை ஓட்டிப் பாருங்கள். வேற லெவல் அனுபவம் கிடைக்கும்.

தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ