கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

டிவிஎஸ் ஆர்மியின் கம்யூட்டிங் குதிரை!

டிவிஎஸ் ஆர்மியின் கம்யூட்டிங் குதிரை!
பிரீமியம் ஸ்டோரி
News
டிவிஎஸ் ஆர்மியின் கம்யூட்டிங் குதிரை!

ஃபர்ஸ்ட் ரைடு - டிவிஎஸ் ரேடியான்

ரேடியானை டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டுவந்தது, எல்லோருக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏற்கெனவே ஸ்போர்ட், ஸ்டார் சிட்டி+ மற்றும் விக்டர் பைக்குகளை கம்யூட்டர் செக்மன்ட்டில் வைத்திருந்ததால், அடுத்து 125 சிசி பைக்தான் வரும் என பலரும் நினைத்திருந்தோம். ஆனால், ஸ்போர்ட் மற்றும் ஸ்டார் சிட்டிக்கு இடையில் ஒரு செக்மென்ட் இருப்பதை உணர்ந்து, அங்கு ரேடியானை பொசிஷன் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்ததுள்ளது டிவிஎஸ். சரி, `ரேடியானுடன் வாழ்ந்த சில மணி நேரங்கள்’ என டைட்டில் கார்டு போட்டுவிட்டு, ஸ்டோரிக்குள் போவோம்.

டிவிஎஸ் ஆர்மியின் கம்யூட்டிங் குதிரை!

ஸ்டைல்

கம்யூட்டர் பைக்குகளை டிசைன் செய்வது பெரிய வேலையா எனத் தோன்றலாம். ஆனால் யோசித்துப் பாருங்கள், அப்பாச்சியின் ஸ்போர்ட்டியான பாடியில் ஸ்டார் சிட்டியின் இன்ஜினைப் பொருத்துவது சரிப்படுமா? இல்லை... ஸ்டார் சிட்டியில் அப்பாச்சியின் இன்ஜினைப் பொருத்துவதுதான் சாத்தியமா? கம்யூட்டர் பைக்கை டிசைன் செய்வதும் கஷ்டம்தான் பாஸ்! ரேடியானைப் பார்த்தவுடன் ஹீரோ ஸ்ப்ளெண்டர்தான் முதலில் நினைவுக்கு வந்தது. பெட்ரோல் டேங்க், சென்டர் பேனல், டெயில் லைட் எல்லாமே ஸ்ப்ளெண்டரின் இன்ஸ்பிரேஷன். ஆனால் டேங்க் பேட், பிரவுன் சீட், LED DRL உடன் கூடிய ஹெட்லைட், தங்க நிற இன்ஜின் கேஸ், ஹெட்லைட்டில் உள்ள க்ரோம் வேலைப்பாடுகள் போன்றவை, ரேடியானைத் தனித்துக் காட்டுகின்றன.

டம்பெல்ஸ்போல இருக்கும் ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், குழப்பங்கள் எதுவும் இல்லாமல், படிப்பதற்குத் தெளிவாக இருக்கிறது. சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டரும் உண்டு. ஹெட்லைட் கேஸிங்கில், USB சார்ஜிங் போர்ட்டை ஆப்ஷனலாகப் பொருத்தித் தருகிறார்கள். 

டிவிஎஸ் ஆர்மியின் கம்யூட்டிங் குதிரை!

பைக்கின் தரத்தில் எந்தக் குறையும் இல்லை. மிக மோசமான சாலையில் போகும்போதுகூட பைக்கில் இருந்து தேவையில்லாத சத்தம் எதுவும் வரவில்லை. பெயின்ட் ஃப்னிஷ் மற்றும் ஸ்விட்ச்களின் குவாலிட்டி செம. ஸ்டைலில் புதிதாக எதையும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும், சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து, ரேடியானை மனசுக்குப் பிடிக்கும் விதமாகக் கொடுத்துள்ளார்கள்.

இன்ஜின்

ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் இருக்கும் அதே 109.7சிசி, சிங்கிள் சிலிண்டர், டியூரா லைஃப் இன்ஜின்தான் ரேடியானிலும். பவr & டார்க்கில் பெரிய மாற்றங்கள் இல்லை. 60 கி.மீ வேகம் வரை இன்ஜின் சுறுசுறுப்பாக இருக்கிறது, சிட்டி ரைடிங்குக்கு இதுதான் தேவை! நெடுஞ்சாலையில் 70 கி.மீ வரை ஈஸியாகப் போக முடிகிறது. அதற்கு மேல் இன்ஜின் திணறுகிறது. இன்ஜின் ரிஃபைன்மென்ட்டும், RTR 200-ஐ நினைவுபடுத்தும் எக்ஸாஸ்ட் சத்தமும் இன்ஜினின் ப்ளஸ். ரைடிங் பொசிஷன் அப்ரைட்டாகவும், சிட்டி ரைடிங்குக்கு வசதியாகவும் இருக்கிறது. செக்மென்ட்டிலேயே நீளமான சீட்டில் சொகுசுக்குக் குறையில்லை. இது நெடுஞ்சாலையில் 78.5கிமீ மைலேஜ் கிடைத்தது. ஆனால், சிட்டியில் வெறும் 57.7கிமீதான் மைலேஜ் தந்தது. 

டிவிஎஸ் ஆர்மியின் கம்யூட்டிங் குதிரை!

ரைடு குவாலிட்டி

இன்ஜின் மட்டுமல்ல, ஃப்ரேம் மற்றும் சஸ்பென்ஷனும் ஸ்டார் சிட்டி ப்ளஸ்ஸில் இருந்துதான் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதைவிட ஸ்டிஃப்பாகவே இருக்கிறது ரேடியானின் சஸ்பென்ஷன். பெரிய பள்ளங்களிலும் ஸ்பீடு பிரேக்கர்களிலும் சுலபமாகக் கடந்துச் சென்றாலும், குண்டு குழிகளிலும் உடைந்த சாலைகளிலும், கையும் முதுகும் கொஞ்சம் பஞ்சர் ஆகிவிடுகிறது. எடை அதிகமான ஆட்களை, ஸ்டார் சிட்டி ப்ளஸ் பைக்கில் வைத்து ஓட்டினால், திடீரென ஆக்ஸிலரேஷன் கொடுக்கும்போது பைக் கொஞ்சம் கிரிப் இல்லாமல் அலையும். இந்தப் பிரச்னை ரேடியானில் இல்லை. லோடு ஏற்ற வசதியாக உள்ளது இதன் சஸ்பென்ஷன். 18 இன்ச் வீல் மற்றும் டியூப்லெஸ் டயர்கள், பைக்கின் ஸ்டெபிலிட்டியை மேலும் அதிகரிக்கின்றன.

டிவிஎஸ் ஆர்மியின் கம்யூட்டிங் குதிரை!

ஸ்டெபிலிட்டி ஒரு பக்கம் என்றால், சுறுசுறுப்பிலும் அசத்துகிறது ரேடியான். டிராஃபிக்கில் குறுகலான இடைவெளியிலும் புகுந்துப் புறப்பட்டு வரலாம். டிவிஎஸ்ஸின் Synchronized Braking System தொழில்நுட்பத்தோடு வெளிவரும் முதல் பைக் இதுதான். டிரம் பிரேக்குகள் ஓகேதான். முன்பக்க டிஸ்க் பிரேக்கை ஆப்ஷனலாகவாவது கொடுத்திருக்கலாம்.

இந்த கம்யூட்டர் எடுபடுமா?

ரேடியானில் குறை சொல்வதற்குப் பெரிதாக எதுவுமே இல்லை. `டிவிஎஸ் லேபிளில் இன்னொரு கம்யூட்டர் பைக் தேவையா?’ என்ற கேள்வி மட்டுமே இருந்தது. ஸ்டார் சிட்டி ப்ளஸ் உடன் பல பாகங்களைப் பகிர்ந்துகொண்டாலும், சில கூடுதல் அப்டேட்டுகள் ரேடியானைத் தனித்துக் காட்டுகின்றன. சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களைக் குறிவைத்து வெளிவந்திருக்கிறது வந்திருப்பதால், அதற்கேற்ப பிராக்டிக்கலாக இருக்கிறது ரேடியான். எக்ஸ்-ஷோரூம் விலை 48,990/- ரூபாய் என்பதால், இதன் வெற்றி நிச்சயம் என்று டிவிஎஸ் கருதுகிறது.  ஆனால், விற்பனையைக் கொஞ்சமும் கணிக்க முடியாத இந்தச் சந்தையில், ரேடியானை வாடிக்கையாளர்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது ஒருசில மாதங்களில் தெரியும். ரேடியானின் தென்னிந்திய விற்பனை இன்னும் ஆரம்பமாகவில்லை.

கமான் ரேடியான்!

தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ