கார்ஸ்
பைக்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!

டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!
பிரீமியம் ஸ்டோரி
News
டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!

ஃபர்ஸ்ட் ரைடு - ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 & கான்டினென்ட்டல் GT650

ல்லோரும் ஆவலாக எதிர்பார்த்த RE பைக்குகளின் கிளாசிக் ட்வின் பைக்ஸான இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்ட்டல் GT பைக்குகளின் ஃபர்ஸ்ட் லுக்கை மட்டும் கடந்த இதழில் கொடுத்திருந்தோம். ‘ரைடு ரிப்போர்ட் என்னாச்சு பாஸ்?’ என்று ஏகப்பட்ட மிரட்டல்கள். அதன் விளைவாக இந்த இரண்டு பைக்குகளையும் கதறக் கதற ஓட்டி, அதற்கான டெஸ்ட் ரிப்போர்ட்டைக் கொடுத்திருக்கிறோம்! ஹேப்பிதானே?

டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!

இன்டர்செப்டர்

ஃபர்ஸ்ட் லுக்கிலேயே இம்ப்ரெஸ் செய்கிறது இன்டர்செப்டர். `ராயல் என்ஃபீல்டுதானே... எப்படியும் அதிரத்தான்போகுது’ என நினைத்து பைக்கை ஸ்டார்ட் செய்தால் (கிக் ஸ்டார்ட் கிடையாது), இந்த ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜினின் பீட் சத்தமே வித்தியாசமாக இருந்தது. ராயல் என்ஃபீல்டு ரசிகர்களுக்கு இது புதுசாக இருக்கும். எனக்கு இதன் பீட், ட்ரையம்ப் பைக்கின் பீட் மாதிரி இருந்தது. 

டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!

ஐடிலிங்கில், அட... அதிர்வுகளே காணோம்! இன்ஜின் ஸ்மூத்தாக இருந்தது. பேலன்ஸர் ஷாஃப்ட் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஹை ரெவ்களில் மட்டும் ஹேண்ட்பாரிலும் ஃபுட் பெக்குகளிலும் லேசாக அதிர்வுகள் தெரிந்தன. பரவாயில்லைதான். 350, 500 சிசி RE பைக்குகளை ஒப்பிடுகையில், இந்த 650 சிசி பைக்கின் அதிர்வுகள் குறைவுதான் எனத் தோன்றுகிறது.

பவர் டெலிவரி, இன்டர்செப்டரில் அருமை. 5.2 kgm டார்க்கில் 80 சதவிகிதம், (கிட்டத்தட்ட 4.16 kgm டார்க்) 2,500 rpm-லேயே கிடைத்து விடுகிறது. 80 கிலோ எடைகொண்ட என்னை `சட் சட்’ என இழுத்தது இன்டர்செப்டர். 100 கி.மீ ஸ்பீடெல்லாம் அசால்ட்டாகச் செல்கிறது இன்ஜின். 4,000 rpm வரை இழுத்தேன்; ஸ்ட்ரெஸ் இல்லை. 5,500 rpm-ல் 120 கி.மீ போனேன். அப்போதும் சிரமம் தெரியவில்லை. அட... 7,000 rpm-ல் கிட்டத்தட்ட 140 கி.மீ வரை எந்தவித இழுபறியும் இல்லாமல் பறந்தது இன்டர்செப்டர்.  எனக்குத் தெரிந்து ராயல் என்ஃபீல்டிலேயே வேகமான பைக் இதுதான். ரைடிங் ஜாலியாக இருந்தது.

டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!

டவுன்ஷிஃப்ட்டிங்கின் ஸ்மூத்னெஸ் பற்றிச் சொல்லியாக வேண்டும். காரணம், ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச். 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் எப்போது வேண்டுமானாலும் சிக்கல் இல்லாமல் கியரைக் குறைக்க முடிகிறது. சில பைக்குகளில் வேகங்களில் கியரைக் குறைக்கும்போது, இன்ஜின் பிரேக்கிங் அதிகமாகி, நம்மை முன்னே இழுக்கும். இன்டர்செப்டரில் அந்தப் பிரச்னை இல்லை.

டிசைனைப் பொறுத்த வரை வட்டவடிவ ஹெட்லாம்ப்ஸ், சிங்கிள் பீஸ் ஹேண்டில்பார், ஹீல் பிளேட் கொண்ட ஃபுட் பெக்ஸ், 18 இன்ச் ஸ்போக் வீல்கள், இரண்டு பேர் உட்காரும் அளவுக்கு இடவசதி கொண்ட ஃப்ளாட் சீட், RE லோகோ என ரெட்ரோ டிசைனில் கலக்குகிறது. இரண்டு பைக்குகளிலுமே டபுள் எக்ஸாஸ்ட் சத்தம் வேற லெவல்.

டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!
டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!

இரண்டிலுமே பிரெல்லி டியூப் டயர்கள், செம கிரிப். கேஸ் சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்ஸார்பர்கள். இரண்டிலுமே டியூப்லெஸ் டயர்கள் இல்லை; ரேடியலும் இல்லை. டபுள் கிரேடில் சேஸி என்பதால், இரண்டுமே செம ஸ்ட்ராங்காக இருக்கும். குறைந்த வேகத்தில் இன்டர்செப்டரின் சஸ்பென்ஷன் அற்புதமாக வேலை செய்கிறது. 

கான்டினென்ட்டல் GT

இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் தெரியாது. இரண்டிலேயே எனக்கென்னவோ கான்டினென்ட்டல்தான் ஹேண்ட்சமாகத் தெரிகிறது. இங்கே 12.5 லிட்டர் டேங்க் தான். கான்டினென்ட்டலில் கிராஃபிக் டிசைன், ஆப்ஷனல் சிங்கிள் சீட் (டூயல் சீட் ஸ்டாண்டர்டு ஆப்ஷன்), ஆங்குலர் இண்டிகேட்டர்ஸ், இரண்டு பக்கமும் டிஸ்க் என்று இதுவும் ரெட்ரோ டிசைன்தான். ஆங்காங்கே சில மாடர்ன் டச் கொடுத்திருக்கிறது RE. மொத்தத்தில் சாலிட் டிசைனில் பல்க்கியாக, கெத்தாக இருக்கிறது கான்டினென்ட்டல் GT.

டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!
டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!

இரண்டிலுமே மெக்கானிக்கலாக ஒரே மாதிரியான அம்சங்கள்தான். அதனால், இன்ஜின் பெர்ஃபாமென்ஸிலும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. சிட்டியிலும் சரி, ஹைவேஸிலும் சரி - கான்டினென்ட்டல் பைக்கும் விரட்டி ஓட்டத் தூண்டுகிறது. ரைடிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாக இருந்தது கான்டினென்ட்டலில். சில இடங்களில் மட்டும் உறுத்தல். உதாரணத்துக்கு, ரைடரின் கால்கள் டேங்க்கின் பக்கவாட்டுப் பகுதியை இறுக்கமாகக் கவ்வ வேண்டும்தானே! இதில் டேங்க்கின் அடிப்பக்க ரிம்மில்தான் கால் டச் ஆகிறது. உயரம் குறைவான சில ரைடர்களின் கால்களுக்கு டேங்க் எட்டவே எட்டாது. இந்தப் பிரச்னை, இன்டர்செப்டரில் இல்லை. இன்டர்செப்டரின் சீட் உயரம் 804 மிமீ என்றால், கான்டினென்ட்டல் GT-ல் 793 மிமீதான். ஒருவேளை, இன்டர்செப்டரின் பெரிய டேங்க்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். (13.7 லி) இதனால், கார்னரிங்கில் பைக்கை அழுத்தமாகத் தள்ளுவதுபோல் இருக்கிறது.

எது யாருக்கு?

உங்களுக்கு காபி/டீ இரண்டுமே பிடிக்கும். ஒரு கடையில் இரண்டுமே நன்றாக இருந்தால், `காபி குடிக்கலாமா... டீ குடிக்கலாமா?’ என்கிற அழகான குழப்பம் ஏற்படுமே... அதே அவஸ்தைதான் இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது.

டிராஃபிக்குக்கு இன்டர்செப்டர்... வீக் எண்டுக்கு கான்டினென்ட்டல்!

கொஞ்சம் ஃபன் பார்ட்டிகள் மற்றும் வீக் எண்ட் பார்ட்டிகளை கான்டினென்ட்டல் GT, திருப்திப்படுத்தும். இதன் லுக்கும் வாவ்! நெடுஞ்சாலையில் விரட்ட, கான்டினென்ட்டல் GT அருமை.

பளபளவென மேக்கப் போட்டதுபோல் ஷைனிங்காக இருக்கிறது இன்டர்செப்டர். சிட்டி ரைடிங் மற்றும் குறைவான வேகங்களுக்கு இன்டர்செப்டர் தோதாக இருக்கிறது. இரண்டு பைக்குகளுமே 4 லட்சம் ரூபாய்வாக்கில் வருகின்றன! நவம்பர் 14 வரை இந்த அழகான அவஸ்தைக்குக் காத்திருங்கள்!

தொகுப்பு: தமிழ்