கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

என்னோட வயசான குழந்தை!

என்னோட வயசான குழந்தை!
பிரீமியம் ஸ்டோரி
News
என்னோட வயசான குழந்தை!

கிளாஸிக் கார்னர் - பஜாஜ் கப் 1988 மாடல் ஸ்கூட்டர்

 "ப்ரோ, இதைக் கொஞ்சம் என்னானு பாருங்க..." என்று வாட்ஸ்-அப்பில் 'புளூவாக' ஒரு ஸ்கூட்டர் படத்தை அனுப்பியிருந்தார் நம் மாணவப் புகைப்பட நிபுணர்.  

என்னோட வயசான குழந்தை!

அட! இது பஜாஜ் சேட்டக்கின் குட்டி, பஜாஜ் கப் (CUB) ஸ்கூட்டர் ஆச்சே! வெகுநாள்கள் கழித்து ஒரு லிமிடெட் எடிஷன் வின்டேஜ் ஸ்கூட்டரைப் பார்த்ததும் உற்சாகம் தொற்றிக்கொள்ள, அதன் ஓனரை பெசன்ட் நகரில் ஸ்கூட்டரும் கையுமாகப் பிடித்தேன்.

"என் பேரு ஜெய். இந்த ஸ்கூட்டர் 1988 மாடல்..." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். "6 வருஷத்துக்கு முன்னாடி என்னோட நண்பருக்காக ஸ்கூட்டர் பார்க்கப் போனோம். அப்போதான் இதைப் பார்த்தேன். பார்த்தவுடன் காதல். உடனே வாங்கிட்டேன்.  27,000 ரூபாயும், 3 மாசம் நேரமும் செலவாச்சு ரெஸ்டோர் செய்ய! சிட்டி, ஹைவே, லாங் ரைடு எதுவா இருந்தாலும் இப்போ இதுதான்!

வெளியே போகும்போது என் ஸ்கூட்டரை திரும்பிப் பார்க்காத ஆட்களே கிடையாது. சிலர், விலைக்குத் தருவீங்களானு கேப்பாங்க. இது என் குழந்தைங்க. இதை எப்படி?" என்று ஃபீல் ஆனார் ஜெய்.

எல்லாம் ஓகே! பராமரிப்பு?

என்னோட வயசான குழந்தை!

"இதோட எடை வெறும் 95 கிலோதான். பெரும்பாலான எடை வலது பக்கமா இருக்குறதால சரியா ஓட்டிப் பழக கொஞ்ச நாள் தேவைப்படும். 5.9bhp பவர். வேகம் 60 கி.மீ தாண்டிப் போகாது. 50-60 கி.மீ மைலேஜ் கிடைக்குது. இது போதாதா? ஜெனரல் சர்வீஸ் வெறும் 600 ரூபாய் தான் வரும். இன்ஜின் ஆயில் வெறும் 150 ரூபாய். இண்டிகேட்டர்லாம் கிடையாது. வெறும் லேம்ப் மட்டும்தான். ஆனா சிம்பிள் அண்ட் நீட்! குறைன்னு பார்த்தா இதுக்கான மெக்கானிக்ஸ் இல்லேங்கிறது தான்!" என்று மறுபடியும் ஃபீலிங் மோடுக்குப் போனார்.

"அது சரி; இந்த பைக்லதான் அவுட்டிங் போவேன்னு சொல்றீங்க? கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்லாம் இதுக்கு எப்படிச் சம்மதிப்பாங்க?"

"உண்மையைச் சொல்றேன் ப்ரோ... இன்னும் ஒரு பொண்ணைக்கூட இந்த ஸ்கூட்டர்ல டபுள்ஸ் ஏத்தினது கிடையாது. இந்த ஸ்கூட்டர்ல வர ஆசைப்படுற பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்" என்று நினைத்தபடியே ஜாலி மூடுக்கு மாறினார்.

 ரஞ்சித் ரூஸோ - படங்கள்:பா.அகல்யா