கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

கேடிஎம்-ல் சாதுவான டியூக் வந்துடுச்சு!

கேடிஎம்-ல் சாதுவான டியூக் வந்துடுச்சு!
பிரீமியம் ஸ்டோரி
News
கேடிஎம்-ல் சாதுவான டியூக் வந்துடுச்சு!

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட் - கேடிஎம் டியூக் 125

வர்ஃபுல் பைக்ஸ் - பெற்றோர்களுக்கு எப்போதுமே பிடிக்காது. அதன் வேகத்தின்மேல் இருக்கும் பீதியின் காரணமாக, எங்கே தன் மகன் அதை ஓட்டிச் சென்று கீழே விழுந்து விடுவானோ / விபத்துக்குள்ளாகி விடுவானோ என்ற உணர்வே அவர்களுக்கு மேலோங்கியிருந்தாலும், தமது ரைடிங் திறனை பெற்றோர்கள் குறைத்து மதிப்பிடுவது எந்த மகனுக்குத்தான் பிடிக்கும்?

கேடிஎம்-ல் சாதுவான டியூக் வந்துடுச்சு!

RX-100/RD350, ஷோகன், பல்ஸர், அப்பாச்சி, R15, டியூக் என பைக்குகள் மாறினாலும், இளசுகளுக்கு காலம்காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் (கொடுமை) ஏமாற்றம்தான் இது. இப்படி பலரது பைக் கனவுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இந்த விஷயத்துக்கான தீர்வை, கேடிஎம் கண்டுபிடித்துவிட்டது என்றே தோன்றுகிறது. அதுதான் `டியூக் 125’.

ஃப்ளாஷ்பேக்

சரியாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் ஆஸ்திரிய நிறுவனமான கேடிஎம்-மின் ஆதிக்கம் தொடங்கியது. முதலில் டியூக் 200, பிறகு டியூக் 390, அதன் RC மாடல்கள் என வரிசையாக வெளிவந்த பைக்குகள், பெர்ஃபாமென்ஸ் செக்மென்ட்டை மாற்றியமைத்தன. எப்படி மாடல்களின் எண்ணிக்கை அதிகமானதோ, அதேபோல இவற்றின் விலையும் காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டே போனது. இதனால் அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலை என்ற மதிப்பை கேடிஎம் இழந்ததால், அதை மீட்டெடுக்கும்விதமாக தனது விலை குறைவான மாடலாக டியூக் 125 பைக்கை அந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது.

டிசைன், வசதிகள்

டியூக்கின் விலையை கேடிஎம் அறிவித்ததும், இப்படி ஒரு கேள்வி எழுந்தது: 'இந்த 125 சிசி பைக்குக்கு ஏன் இவ்வளவு விலை கொடுக்க வேண்டும்?'

 `புதிய இன்ஜின் தவிர பைக்கின் பாடி பேனல்கள், மெக்கானிக்கல் பாகங்கள், வசதிகள் என மற்ற எல்லாமே டியூக் 200தான். அதனால்தான் இந்த விலை’ என கேடிஎம், இதற்கான காரணத்தை விளக்கியது. அதற்கேற்ப ஆரஞ்சு நிற அலாய் வீல்கள், WP நிறுவனத்தின் USD ஃபோர்க் - மோனோஷாக், Bybre நிறுவனத்தின் டிஸ்க் பிரேக்ஸ், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், டிஜிட்டல் மீட்டர் என வசதிகளின் பட்டியல் மிக நீளம். ஆனால், வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் டியூக் 125-ல் டூயல் சேனல் ஏபிஎஸ் இருக்கும் நிலையில், இந்திய மாடலில் இருப்பதோ சிங்கிள் சேனல் ஏபிஎஸ் (முன்பக்க வீலுக்கு மட்டுமே)தான்! 

கேடிஎம்-ல் சாதுவான டியூக் வந்துடுச்சு!

எனவே, 200சிசி பைக்குகளுக்கு இணையாக இதன் விலை அதிகமாக இருந்தாலும், வசதிகளில் இது வேற லெவலில் இருக்கிறது. இதை பெற்றோர்களிடம் சொல்லி, மகன்களால் எளிதாக ஒப்புதல் வாங்கிவிட முடியுமா? இதற்காகவே இந்த 125சிசி பைக்கின் விலையில் கேடிஎம் கொஞ்சம் கருணை காட்டியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது.

இன்ஜின் பர்ஃபாமென்ஸ்

இன்ஜினை ஸ்டார்ட் செய்தால், டியூக் பைக்குகளுக்குரிய சத்தம் கொஞ்சம் மென்மையாக ஒலிக்கிறது. த்ராட்டில் ரெஸ்பான்ஸ் லைட்டாகவும் பன்ச்சாகவும் இருக்கிறது. டியூக் 200 போலவே இதன் ரைடிங் பொசிஷன் இருந்தாலும், உயரமான மற்றும் உடல் பருமனான ரைடர்களுக்கு இடநெருக்கடி உள்ளது. இதுபோன்ற சில குறைகள் பைக்கில் இருந்தாலும், பெர்ஃபாமென்ஸ் விஷயத்தில் கேடிஎம் என்றுமே சோடை போனதில்லை. ஆனால் இங்கே இருப்பதோ, 14.5bhp பவர் மற்றும் 1.2kgm டார்க்கை வெளிப்படுத்தும் லிக்விட் கூல்டு, DOHC & Fi கொண்ட 124.7 சிசி இன்ஜின்தான். தவிர, டியூக் 125 பைக்கின் எடையும், டியூக் 200 போலவே 148 கிலோ என்பதால், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருந்தும் பெரியளவில் பயனில்லை.

எனவே, பைக்கை ஓட்டத் தொடங்கியதுமே, வெடிக்கும் பெர்ஃபாமென்ஸ் இல்லாமல், டியூக் 200 பைக்கை ஸ்லோமோஷனில் ஓட்டுவதுபோன்ற உணர்வே அதிகமாக இருந்தது. பைக் இப்படித்தான் என்ற தெளிவு கிடைத்த பிறகு, ஃபன் தானாகக் கிடைக்கிறது. ஆக்ஸிலரேஷன் கேடிஎம் பைக்குகளுக்கு உரிய விதத்தில் இருந்தாலும், பெர்ஃபாமென்ஸ் கொஞ்சம் டல்தான். மற்ற 125சிசி பைக்குகளுடன் ஒப்பிடும்போது, 90கிமீ வேகத்தை விரைவாக எட்டி விடுகிறது டியூக் 125.

பைக்கின் கியர்பாக்ஸ் அதுவரை கைகொடுத்தாலும், பிறகு பவர் குறைபாடு அப்பட்டமாகத் தெரிகிறது. 6-வது கியருக்கு மாறும்போது வேகத்தில் மாற்றம் முன்னேற்றம் மெதுவாக இருக்கிறது. எனவே, 5-வது கியரிலேயே பைக்கை ஓட்டுவது நல்ல முடிவாக அமையலாம். நீளமான நேர்சாலைகளில் ஓட்டும்போது, கொஞ்ச நேரத்துக்குப் பிறகு 105 கிமீ-யை ஸ்பீடோமீட்டரில் பார்க்க முடிந்தது. பிறகு பைக்கின் ஓட்டத்துக்குச் சாதகமாக காற்று அடித்தபோது, 115 கி.மீ-யை எட்டியது டியூக் 125. எனவே, மேலோட்டமாகப் பார்க்கும் போதே, இது நகரச் சாலைகளை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்ட பைக் என்பது தெரிகிறது.

ஓட்டுதல் அனுபவம்


இந்த பைக்கை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், `110 கிமீ-க்குமேல் பைக் போகாது’ எனச் சொல்லி பெற்றோர்களிடம் மகன் ஓகே வாங்கிவிடலாம். ஆனால் அதற்குப் பின்னே, டியூக் பைக்குகளுக்குரிய ஓட்டுதல் அனுபவம் இங்கே கிடைப்பது பெரிய ப்ளஸ். டியூக் 200 பைக்கின் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் இங்கே இருப்பதால், பெர்ஃபாமென்ஸ் குறைபாடு சரிகட்டப்பட்டுவிட்டது. எனவே, திருப்பத்தில் பைக்கை அதிக வேகத்திலும் செலுத்தலாம் என்பதுடன், வழக்கத்தைவிட லேட்டாக பிரேக் பிடிக்க முடிகிறது. இப்படி மெக்கானிக்கலாக டியூக் 125 அதிரடிப்பதால், நகர நெரிசலில் விரட்டி ஓட்டக்கூடிய ஃபன் பைக்காக இது இருக்கிறது.

தொகுப்பு: ராகுல் சிவகுரு

கேடிஎம்-ல் சாதுவான டியூக் வந்துடுச்சு!

டியூக் போன்ற பைக்குகளை வாங்குபவர்கள், ஓட்டுதல் அனுபவத்தைவிட பெர்ஃபாமென்ஸுக்கே முன்னுரிமை கொடுப்பவர்கள் என்பது வாடிக்கை. 1.38 லட்சம் ரூபாய் சென்னை ஆன்-ரோடு விலைக்குக் கிடைக்கும் இது, பவர்ஃபுல்லான டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V மற்றும் பஜாஜ் பல்ஸர் 200NS பைக்கைவிட விலை அதிகம்! இன்னும் சொல்லப்போனால், கொஞ்சம் அதிகமாகச் செலவழித்தால், யமஹா R15 பைக்கையே வாங்கிவிட முடியும். முன்னே சொன்ன பைக்குகள் டியூக் 125-யைவிட வேகமாகச் செல்லக்கூடியவை என்றாலும், மைலேஜ் விஷயத்தில் இது முன்னே வந்துவிடுகிறது. பவர்ஃபுல் தோற்றத்துடன் கூடிய பைக்காக இருப்பினும், பெற்றோர்களுக்கு ஏற்ற சாய்ஸாக டியூக் 125 நிற்கிறது. பைக் ஆர்வலர்களுக்கும் இது மனநிறைவைத் தருவது ப்ளஸ்.