கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?
பிரீமியம் ஸ்டோரி
News
பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

போட்டி - ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (ரூ.2.13 லட்சம்)  vs பிஎம்டபிள்யூ G310GS (ரூ.3.90 லட்சம்) vs கவாஸாகி வெர்சிஸ் x-300 (ரூ.5.61 லட்சம்)

ட்வென்ச்சர் என்றால் சும்மா இல்லை. கொஞ்சம் தில்லும் பணமும் செலவழித்துத்தான் ஆக வேண்டும். இது அட்வென்ச்சர் பைக்குகளுக்கும் பொருந்தும். ஆம்! மார்க்கெட்டில் ஹிமாலயன் பைக்கைத் தவிர, 2 லட்ச ரூபாய்க்குக் குறைவாக அட்வென்ச்சர் பைக்குகள் நஹி!  ஹிமாலயனுக்குப் போட்டியாக இருந்த ஒரே பைக் - கவாஸாகி வெர்சிஸ் X-300. ஆனால் இதன் விலைக்கு 2 ஹிமாலயன் வாங்கிவிடலாம். இப்போது இந்தப் போட்டியில் பிஎம்டபிள்யூ G310GS பைக்கும் சேர்ந்து விட்டது. மூன்றையும் காடு, கடல், மேடு என உறும விட்டோம்.

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

சாஃப்ட் ரோடு...

ஒவ்வொரு பைக்கையும் 60 கி.மீ ஓட்டிச் செல்வதுதான் எங்களுடைய முதல் நாள் டாஸ்க். முதல் 20 கி.மீ தூரம், லோடு டிரக்குகளே ஓவர்டேக் செய்யும் அளவு பொறுமையாகவே பைக்கை ஓட்டினோம்.

ராயல் என்ஃபீல்டு:
ஹிமாலயனின் 411cc BS4 இன்ஜின், ஸ்மூத்தாக இருந்தது. மிட் ரேஞ்ச் ஸ்ட்ராங்காக இருப்பதால், பொறுமையாகப் போகும்போது பைக் திணறவில்லை. ஐந்து கியர்தான்... ஐந்தாம் கியர் ஓவர்டிரைவ் என்பதால், ஓவர்டேக்குகள் த்ரில் தரவில்லை. ரெட்லைனை நெருங்கும்போது அதிர்வுகள் கடுப்பேற்றுகின்றன. 24.8bhp பவர் குறையாகத் தெரிந்தாலும்,. 3.2 kgm டார்க் உங்களை பைக்கிலேயே உட்கார வைக்கிறது. மூன்று இலக்க வேகத்தை நினைத்துப் பார்க்க வேண்டாம். 

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

பிஎம்டபிள்யூ: G310GS சுறுசுறுப்பான பைக்காக இருந்தது. பைக்கின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஷார்ப்பாக உள்ளது. பிஎம்டபிள்யூ என்ற பெயருக்கு ஏற்ப, இன்ஜின் இன்னும் ஸ்மூத்தாக இருந்திருக்கலாம். 34bhp பவர் மற்றும் 2.8kgm டார்க் தரும் இந்த வேகமான இன்ஜினைப் பாராட்டத்தான் வேண்டும்.

கவாஸாகி: வெர்சிஸ் X-300 மட்டும்தான், இந்தப் போட்டியில் இருக்கும் ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக். இது நின்ஜா 300-ல் இருக்கும் அதே இன்ஜின் என்பதால், 7000rpm கடந்த பிறகுதான் இன்ஜின் விழித்துக் கொள்கிறது. 39.8bhp பவர் உள்ள ஸ்மூத்தான இன்ஜின்- 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருந்தாலும், லோ எண்டிலும் மிட் ரேஞ்சிலும் அட்வென்ச்சர் பைக்குக்கு ஏற்ற குணம் இல்லை.

த்ரில் ஹேண்ட்லிங்


ஒரு சிறந்த அட்வென்ச்சர் டூரருக்கு இன்ஜின் மட்டும் போதாது. எர்கானாமிக்ஸ், சஸ்பென்ஷன் மற்றும் ஹேண்ட்லிங் ரொம்பவே முக்கியமானது.

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

ராயல் என்ஃபீல்டு: ஹிமாலயனின் சீட் செம சொகுசு. வெர்சிஸுக்குப் பிறகு பில்லியனுக்கு ஏற்ற பைக் இதுதான். சஸ்பென்ஷன் எல்லா சாலைகளுக்கும் வளைந்து கொடுக்கிறது. 191 கிலோ எடை, பைக்கின் கார்னரிங்கைப் பாதிக்கிறது. 1,465 மிமீ உடன் பெரிய வீல்பேஸ் கொண்ட பைக்காக இருக்கிறது. மூன்று இலக்கு வேகங்களுக்குப் போகாதவரை ஹிமாலயன் சிறந்த பைக். அதேபோல, வேகமான கார்னர்களுக்கு மட்டும் 'நோ' சொல்லிவிடுங்கள். த்ரில் எதிர்பார்க்காமல் பைக்கில் அதிக நேரம் உட்கார்ந்து, சாலையை என்ஜாய் செய்ய விரும்புபவர்களுக்கானது ஹிமாலயன்.

பிஎம்டபிள்யூ: G310GS-ன் ரைடர் சீட் ஓகே. பெரிய லக்கேஜ் ரேக் கொடுத்து, பில்லியன் சீட்டில் கைவைத்து விட்டார்கள். தட்டையான ஹேண்டில்பார் இருப்பதால், பெரிய ஜம்ப்புகளுக்கு பைக்கை லிஃப்ட் செய்ய முடியவில்லை. ஆனால், இதே ஹேண்டில்பார் புழுதிச் சாலையில் டிரிஃப்ட் அடிப்பதற்கு உதவுகிறது. எடை வெறும் 169.5 கிலோ என்பதால், திருப்பங்களில் செம ஷார்ப். 1,420 மி.மீ சின்ன வீல்பேஸ், க்விக்கான திருப்பங்களுக்கு உதவுகிறது. பெரிய மேடு-பள்ளங்களை பைக் தாண்டிப் போகும் எனப் பார்த்தால், இதன் சஸ்பென்ஷன் அல்ட்ரா சாஃப்ட்டாக இருக்கிறது. எனவே கொஞ்சம் தரை தட்டுகிறது. சஸ்பென்ஷனில் இன்ஜினீயர்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை பார்த்திருக்கலாம். இந்த சாஃப்ட் சஸ்பென்ஷன், சிட்டிக்கு மட்டும் ஓகே.

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

கவாஸாகி: வெர்சிஸ் X-300 பைக்கின் ரைடிங் பொசிஷன் ஓட்டத் தூண்டினாலும், சீட் சாஃப்ட்டாக இல்லாததால், வெகுநேர ரைடிங் முடியவில்லை. விண்ட் ஸ்க்ரீனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் ஒரே பைக் இதுதான். அதிக வேகங்களில் விண்டு பிளாஸ்ட் தெரியவில்லை. நாம் எந்தச் சாலையில் செல்ல நினைத்தாலும், அதற்குத் தலையசைக்கிறது சஸ்பென்ஷன். 184 கிலோ எடை, பைக்கை ஓட்டும்போது தெரியாது. 1,450 மிமீ வீல்பேஸ் ஸ்டெபிலிட்டியை மட்டுமல்ல, நல்ல கார்னரிங்கையும் சேர்த்துக் கொடுக்கிறது. பெரிய அட்வென்ச்சர் பைக் ஓட்டும் உணர்வைத் தருகிறது வெர்சிஸ்.

மூன்று பைக்குகளிலும் 60 கி.மீ வலம்வந்த பிறகு, `நெடுஞ்சாலைகளுக்கு ஹிமாலயன்தான் தேவை!’ எனத் தோன்றியது. ஆன் ரோடு பெர்ஃபாமென்ஸில் மட்டும் இது இன்னும் முன்னேற வேண்டும்.

ஆஃப்-ரோடு

ஆஃப் ரோடில் ஒரு சின்ன ரைடு முடித்துவிட்டு, பீச் பக்கம் போவதுதான் இரண்டாம் நாள் டாஸ்க். 

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

ராயல் என்ஃபீல்டு: நின்றுகொண்டு ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது ஹிமாலயனின் ரைடிங் பொசிஷன். வழவழப்பான பாதையில் சறுக்கி விளையாட செமயான பைக். இன்ஜினில் டார்க் அதிகம் இருப்பதால், ஆக்ஸிலரேட்டரை முறுக்கிக் கொண்டு பைக்கின் திசையையே மாற்ற முடியும். ஆனால், இன்ஜின் சீக்கிரமே ரெட்லைனைத் தொட்டுவிடுகிறது. ஆஃப் ரோட்டில், குறைந்த வேகத்தில் பவர் இல்லாமல் தத்தளிக்கும் நிலைமை வரவே வராது. பிரேக்குகள் தனுஷ்போல ஷார்ப்பாக `பன்ச்' பேசும் எனப் பார்த்தால், சாய் பல்லவி போல பஞ்சு மனசாக இருக்கிறது. டூயல் சேனல் ஏபிஎஸ்-ஐ ஆஃப் செய்யும் ஆப்ஷன் கொடுத்திருக்கலாம். முன்பக்கம் 21 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் இருக்கும் சியட் Block Pattern டயர்கள், சாலையில் சுமாராக இருந்தாலும் ஆஃப் ரோடு கிரிப் சூப்பர். 

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

பிஎம்டபிள்யூ: G310GS-ல் முதல் சவாலே இதில் ஏறி உட்காருவதுதான். சீட் உயரம் 835மிமீ என்பதால், 5'10 இன்ச்சுக்குக் குறைவான உயரம் கொண்ட ரைடர்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும். எடை குறைவான பைக் என்பதால், கீழே விழுந்தாலும் பிரச்னை இல்லை. டக்கென ஏறி உட்கார்ந்து கொள்ளலாம். ஹேண்டில் பாரும் அதற்கேற்ப அகலமாகவே உள்ளது. பிஎம்டபிள்யூ-வின் இன்ஜின் செம சுறுசுறுப்பு. புழுதியைப் பறக்கவிட்டு லைக்ஸ் வாங்கி விடலாம். ஆனால், சீக்கிரமே ரெட்லைன் தொட்டுவிடுவதால், சில நேரத்தில் தேவையில்லாத இன்ஜின் சத்தத்தைக் குறைக்க, அவ்வப்போது கியர் மாற்ற வேண்டியுள்ளது.

சாஃப்ட் சஸ்பென்ஷன் அவ்வப்போது தரைதட்டிவிடுகிறது. பைக் பஞ்சர் ஆகிவிடுமோ என்ற பயம் வரும். ஆனால், டியூப்லெஸ் டயர்கள் இருப்பது ப்ளஸ். உயரம் குறைவான தட்டையான ஹேண்டில்பார்,  நின்றுகொண்டு பைக் ஓட்டுவதற்கு நம்பிக்கை கொடுக்கவில்லை. நிற்கும்போது டேங்க்கில் கிரிப் கிடைப்பதற்கு அதிகம் பழகவேண்டும். பிரேக்கின் பன்ச் மற்றும் ஃபீட்பேக் அருமை. 19 இன்ச் முன் பக்கமும், 17 இன்ச் பின்பக்கமும் கொண்ட Metzeler டயர்கள், ஆன்ரோடு மட்டுமல்ல; ஆஃப் ரோடுக்கும் நம்பிக்கை தருகிறது. நான்கு திசைகளிலும் புகுந்து விளையாடலாம். 

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

கவாஸாகி: வெர்சிஸ் X-300 பார்க்க அட்வென்ச்சருக்காகவே செய்துவைத்தது போல  இருக்கிறது. நல்ல ரைடிங் பொசிஷன், பெரிய பைக் ஃபீல் எல்லாம்தான் முதல் அட்வென்ச்சர் பைக் வாங்குபவர்களை ஈர்க்கும். ஆனால், எண்ட்யூரன்ஸ் ஸ்டைல் ஃபுட் பெக் இல்லாத ஒரே அட்வென்ச்சர் பைக் இதுதான். சேற்றிலும் மழையிலும் ஓட்டினால் கடுப்புதான் மிஞ்சும். இன்ஜினின் மொத்த பவர் 11,500rpm-ல்/டார்க் 10,000rpm-ல் கிடைப்பதால், குறைந்த வேகத்தில் இன்ஜினில் பன்ச் போதவில்லை. சாலையில் ஒரு கண் இருந்தால் போதாது... பைக் கீழேயும் ஒரு கண் வேண்டும். கீழ்ப்பக்கம் எந்த கார்டும் இல்லாமல் இன்ஜின் பாதுகாப்பற்றுக் கிடக்கிறது. இந்த பைக்கை டெஸ்ட் செய்யும்போது, சைடு ஸ்டாண்டு சென்சார் செத்துப்போன அனுபவம் உண்டு என்பதால், இந்த முறை உஷாராக வயர்களில் எக்ஸ்ட்ரா டேப் அடித்துக் கொண்டேன்.

கடினமான சாலைகளில் வெர்சிஸ் X-300ன் மோனோஷாக் ரொம்பவே பிடித்திருந்தது. IRC டயர்கள், தார்ச்சாலை போல  ஆஃப் ரோடில் கிரிப் தரவில்லை. 19/17 இன்ச் வீல்கள், பைக்கை நம் விருப்பம்போல கன்ட்ரோல் செய்ய உதவின. எர்கானாமிக்ஸில் இந்த பைக்கில் எந்தக் குறையுமில்லை.

தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ

பட்... பட்... பட்... பட்ஜெட் அட்வென்ச்சருக்கு ரெடியா?

ந்த மூன்று பைக்குகளில், எதன் மீதும் அளவு கடந்த காதல் வரவில்லை. ஒவ்வொரு பைக்குக்கும் ஒவ்வொரு குறை இருக்கிறது. பழைய புராணங்களும், காஸ்ட்லியான பைக் என்கிற பெயரும், கவர்ச்சியான டெக்னாலஜியும் கவாஸாகி மற்றும் பிஎம்டபிள்யூ பைக்குகளுக்கு இங்கு உதவவில்லை. இந்தப் போட்டியில் குறைவான கவனம் எடுத்துக்கொண்டது ஹிமாலயன் மீது மட்டுமே! ஹிமாலயனின் ஆன் ரோடு விலை மட்டுமில்லை, இதன் பராமரிப்புச் செலவும், ஸ்பேர் பார்ட்ஸ் விலையும் மற்ற பைக்குகளைவிடக் குறைவு.

பவரை அதிகப்படுத்திக் கொடுத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். மற்ற இரண்டையும் ஒப்பிடும்போது ஹிமாலயன்தான் இந்தப் போட்டியின் வின்னர். அடுத்த ஆண்டு கேடிஎம் 390 அட்வென்ச்சர் டூரர் வருகிறது. அப்போது நிலைமை மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதுவரை காத்திருப்பவர்கள் காத்திருக்கலாம். `இப்பவே எனக்கு பைக்கில் அட்வென்ச்சர் பண்ண ஆசையா இருக்கு’ என்றால் ஹிமாலயனை டிக் அடிக்கலாம்.