Published:Updated:

அதெல்லாம் சரி... ஆனால் விலை?

அதெல்லாம் சரி... ஆனால் விலை?
பிரீமியம் ஸ்டோரி
அதெல்லாம் சரி... ஆனால் விலை?

ஃபர்ஸ்ட் ரைடு யமஹா MT-15

அதெல்லாம் சரி... ஆனால் விலை?

ஃபர்ஸ்ட் ரைடு யமஹா MT-15

Published:Updated:
அதெல்லாம் சரி... ஆனால் விலை?
பிரீமியம் ஸ்டோரி
அதெல்லாம் சரி... ஆனால் விலை?

மஹா பைக்குகள், ஒரு வகையில் யானை மாதிரி... இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன். RD350, RX100, RX-Z, R15, லேட்டஸ்ட்டாக R3 - இப்படி எந்த யமஹா பைக்குகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்... எல்லாமே காலம் கடந்தும் ஹைப்பை ஏற்றக்கூடியவை. இப்போதும் RX சீரிஸ் பைக்குகள், 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாவதைப் பார்க்கிறோம்தானே!

 ஓகே, விஷயத்துக்கு வரலாம். யமஹாவின் MT-09 சூப்பர் பைக் பற்றிக் கேள்விப்பட்டவர்களுக்கு, இது இனிமையான செய்தி. ஆம், MT-09 சூப்பர் பைக்கைத் தழுவி டிசைன் செய்யப்பட்ட, அதன் தம்பி யான MT-15 பைக்கைக் களத்தில் இறக்கிவிட்டது யமஹா. முந்தைய பைக்குகள் மாதிரி MT-15 பைக்கும் வரலாற்றில் இடம்பிடிக்குமா?

அதெல்லாம் சரி... ஆனால் விலை?

அழகா... மிரட்டலா?

பைக்கை ஒரு தடவை முழுதாகச் சுற்றிப்பாருங்கள். `வாவ்... எவ்வளவு அழகு!’ என்று சொன்னால், அது ஒரு பக்கா பொய். நிச்சயம் MT-15 பைக், அழகெல்லாம் இல்லை. ஆனால் பார்த்தவுடன் மனதை உறைய வைக்கும் ஒரு ஸ்டன்னிங் டிசைன்தான் MT-15-ன் ஸ்பெஷல். முன்பக்க ஒற்றை ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். இதன் LED டே டைம் ரன்னிங் லைட்ஸ் ஸோம்பிக்களின் கண்கள்போல பயமுறுத்துகின்றன. இதை அழகு என வர்ணிக்க முடியாது. ஆனால், நிச்சயம் மிரளவைக்கும். ஆனால் இது நிறையபேருக்குப் பிடிக்குமா எனத் தெரியவில்லை.

அதேபோலதான் கிராப் ரெயிலும். பெரிய மெட்டல் ராடு மாதிரி கொடுத்திருக்கிறார்கள். இதில் ஹெல்மெட்டை லாக் செய்ய முடியாது. ஆனால், நீண்ட தூரப் பயணங்களுக்கு லக்கேஜை கட்டிக் கொள்ளலாம். நேக்கட் பைக் என்பதாலோ என்னவோ, சிங்கிள் பீஸ் சீட் மாடல்தான்; நல்ல ஸ்போர்ட்டி ஃபீல் கிடைக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதெல்லாம் சரி... ஆனால் விலை?

ட்ரெண்டிங்!

பார்ப்பதற்கு பல்க்கியாக இருந்தாலும், ஏறி அமர்ந்தால் லைட் வெயிட்டாய் காற்றில் பறக்கலாம். R15 பைக்கைவிட 4 கிலோ இதன் எடை குறைவு. அதாவது 138 கிலோதான். காற்றில் பறப்பதற்கு ஏற்றபடி, MT-15 ஜியோமெட்ரிக் டிசைனில் கலக்குகிறது. 10 லிட்டர் பெட்ரோல் டேங்க், தொடைகளுக்கு நல்ல கிரிப். சீட் உயரம் 810 மிமீ. கொஞ்சம் பல்க்கியானவர்கள் உட்கார்ந்தால், மினியேச்சர் பைக்போல் தெரிகிறது MT-15. இதன் அலாய் வீல்கள் R15 V3.0 பைக்கிலிருந்து எடுத்திருக்கிறார்கள். நெகட்டிவ் பாணியிலான டிஸ்பிளே சூப்பர். லைட்களில் LED மயம் என்றால், டிஸ்பிளேவில் டிஜிட்டல் மயம். ஆனால் அந்த ஸ்விட்ச்கள் மட்டும் மாறவே மாறாதா யமஹா?

அதெல்லாம் சரி... ஆனால் விலை?

ரெடி... ஆக்‌ஷன்... கோ!

இன்ஜினைப் பொறுத்தவரையும் R15-ல் இருக்கும் அதே 155 சிசி - சிங்கிள் சிலிண்டர், SOHC - 4 வால்வ் இன்ஜின்தான். லிக்விட் கூல்டு என்பதால், பராமரிப்புச் செலவு எக்ஸ்ட்ரா ஆகலாம். 19.3 bhp பவர், சாலைகளில் அதகளம் செய்கிறது. யமஹாவின் பேவரைட்டான VVA (வேரியபிள் வால்வ் ஆக்சுவேஷன்) என்பதால், பவர் டெலிவரி `வாவ்’ ரகம். VVA பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். சிட்டிக்குள்ளும் சரி; நெடுஞ்சாலையிலும் சரி - ஓட்டும்போது பன்ச் தெரிக்கிறது. டெல்லி BIC-ல் பைக்கை விரட்டிப்பார்த்தேன். 105 கி.மீ வரை ஈஸியாகப் பறந்தது MT-15. இன்ஜின் ரிபைன்மென்ட்டும் பக்கா! கியர்பாக்ஸ், செம ஸ்மூத். இன்ஜின் மட்டுமல்ல, கியர்பாக்ஸின் ரிபைன்மென்ட்டிலும் வர வர அசத்துகிறது யமஹா. லைட் வெயிட் க்ளட்ச் லீவர், பயன்படுத்த சுலபம். அதிலும் ஸ்லிப் அண்ட் அசிஸ்ட் வசதி போனஸ்... டிராபிக்கில் ஆனந்தமாய் இருக்கும். ஸ்பீடு பிரேக்கர்களில் கியரைக் குறைக்க வேண்டியதில்லை. 8,000 rpm-க்குமேலே மட்டும் ஹேண்ட்பாரில், புட்பெக்ஸில் கொஞ்சம் அதிர்வுகள்... கடுப்பேற்றவில்லை. ஏற்றுக்கொள்ள முடிகிறது.

அதெல்லாம் சரி... ஆனால் விலை?

திருப்புமுனை

பொதுவாகவே யமஹா பைக்குகள் ஹேண்ட்லிங்குக்குப் பெயர்பெற்றவை. MT-15 அந்தப் பெயரைக் காப்பாற்றுகிறது. ரேஸ் டிராக்கில் 17 இன்ச் MRF ஜேப்பர் ட்யூப்லெஸ் டயர்கள், நல்ல கிரிப் கொடுத்தன. வீல்பேஸ் 1,335 மிமீ என்பதால், சட்டென வளைத்து நெளித்து ஓட்ட முடிகிறது. கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 155 மிமீ. யமஹா இன்னும் வேலைசெய்யவேண்டிய விஷயம் பிரேக்குகளில்தான். 282/220 மிமீ என இரண்டு பக்கமும் டிஸ்க்தான் என்றாலும், பிரேக்கிங் ஃபீட்பேக் ஓகே ரகம்தான். ஏபிஎஸ் இருக்கிறது. ஆனால், சிங்கிள் சேனல்தான். அதாவது, முன்பக்க வீலுக்கு மட்டுமே ஏபிஎஸ். இதுவே R15, FZ-25-ல் டூயல் சேனல்!

வாங்கலாமா?

சிட்டிக்குள் ஓட்ட, வளைத்து நெளித்துப் பறக்க MT-15 அருமையாக இருக்கிறது. ஹைவேஸிலும் அட்டகாசமான நிலைத்தன்மை. அதிர்வுகள் அவ்வளவாக இல்லை; இன்ஜின் ரிபைன்மென்ட்டில் திருப்தியளிக்காமல் இல்லை; பெர்ஃபா மென்ஸிலும் சோடைபோகவில்லை. ஆனால் இதற்காகவெல்லாம் இந்தச் சிறிய 150 சிசி பைக்குக்கு, 250 சிசி பைக்குகளைப்போல கிட்டத்தட்ட 1.56 லட்சம் செலவழிக்கத் தயாராய் இருப்பீர்களா? இதைவிடப் பவர்ஃபுல்லான NS200, RTR200 போன்றவை கண்முன் வந்துபோகத்தான் செய்கின்றன!

தொகுப்பு: தமிழ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism