Published:Updated:

பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்...

பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்...

ஃபர்ஸ்ட் ரைடு பெனெல்லி TRK 502 & 502X

பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்...

ஃபர்ஸ்ட் ரைடு பெனெல்லி TRK 502 & 502X

Published:Updated:
பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்...
பிரீமியம் ஸ்டோரி
பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்...

ரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பெனெல்லியில் இருந்து புது பைக் வந்துள்ளது. புதுக் கூட்டாளியுடன் இந்தியாவில் பெனெல்லியின் ரீ-என்ட்ரிக்கு அடித்தளம் போட்டு விற்பனைக்கு வந்துள்ளன TRK 502 மற்றும் TRK 502X. விலையில் கையைக் கடிக்காத ப்ரீமியம் அட்வென்ச்சர் பைக் வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு TRK ட்ரீட்டாக அமையுமா?

டிசைன்

பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்...

TRK 502 மற்றும் 502X இரண்டுமே, 1200சிசி பைக்குகள் என்றால் அப்படியே நம்பிவிடலாம். பெரிய பைக்போலக் காட்சியளிப்பது மட்டுமல்ல, நீளம், உயரம், எடை என செக்மென்ட்டிலேயே பெரிய பைக் இவைதான். இரண்டிலும் 20 லிட்டர் பெட்ரோல் டேங்க், 1,505 மிமீ வீல்பேஸ் மற்றும் 235 கிலோ எடை பொதுவானது. 17 இன்ச் அலாய் வீல், பைரல்லி ஏஞ்சல் ST டயர்கள், இரட்டை முன்பக்க 320 மிமீ டிஸ்க், பின்பக்க 260மிமீ டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ், 50மிமீ USD ஃபோர்க் என  TRK 502 சாஃப்ட் ரோடுக்கான பைக்காக பொசிஷன் செய்யப்பட்டுள்ளது.

X மாடல் ஆஃப் ரோடுக்கானது. முன்பக்கம் 19 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் ஸ்போக் வீல், மெட்ஜிலர் டூரென்ஸ் டயர்கள், அண்டர்பெல்லி எக்ஸாஸ்ட்டுக்குப் பதிலாக நீளமான எக்ஸாஸ்ட் பைப் போன்றவை வருகின்றன. இந்த மாடலில் சாதா டிஸ்க் பிரேக்குக்குப் பதிலாக பெட்டல் டிஸ்க் உண்டு. ஆனால் ரேடியல் மவுண்டட் கேலிப்பர் இல்லை. இரண்டு பைக்கும் ஒரே எடை என்று குறிப்பிட்டுள்ளது பெனெல்லி. X மாடலில் பாகங்கள் அதிகம் என்பதால், எடையை எப்படிக் குறைத்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. எப்படிப்பார்த்தாலும் இந்த TRK பைக்குகளின் எடை, கவாஸாகி வெர்சிஸ் பைக்கைவிட 19 கிலோ எடை அதிகம்.

எர்கானமிக்ஸ்

502-ன் சீட் உயரம் 800 மிமீ, 502X-ன் சீட் உயரம் 840மிமீ. சீட் உயரம் அதிகம் இல்லை. ஆனால் பைக்கின் எடை அதிகம். இதனால்,   ஐந்தே முக்கால் அடி உயரத்துக்குக் குறைவாக இருப்பவர்கள், சில நேரம் சிரமப்பட வேண்டியிருக்கும். பைக்கைச் சுற்றி மெட்டல் ஃப்ரேம் உண்டு. விண்ட் ஸ்க்ரீன், ஃபேரிங் போன்றவை மெட்டல் ஃப்ரேம் மீது பொருத்தப்பட்டுள்ளது. ஃபேரிங் வாஷர் இல்லாமல் பொருத்தப்பட்டிருப்பதால், காலப்போக்கில் தேவையில்லாத சத்தங்கள் ஏற்படலாம். TFT டிஸ்ப்ளே கன்சோல் மிஸ்ஸிங். ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், 2 ட்ரிப் மீட்டர், ஃப்யூல் இண்டிகேட்டர், கடிகாரம், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், இன்ஜின் டெம்ப்ரேச்சர் போன்றவை டிஜிட்டலில் வருகின்றன. டேக்கோமீட்டர் மட்டும் அனலாக். எனவே படிப்பதற்குச் சுலபமாகவும், தரமாகவும் உள்ளது இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர். ஆனால் ப்ரீமியம் தன்மை மிஸ்ஸிங். ஒரு லட்ச ரூபாய் பைக்கில்கூட ஸ்விட்சுகளுக்கு பேக்லிட் வசதி இருக்கும்போது, 6 லட்சம் விலை உள்ள TRK பைக்குகளில் பேக்லிட் ஸ்விட்ச் இல்லாதது மைனஸ். ஏபிஎஸ் ஸ்விட்ச் மிரர் மவுன்ட்டில் பொருத்தப்பட்டிருந்தாலும், விரல்களுக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது. அட்ஜஸ்ட்பிள் பிரேக் லீவர் இருப்பது கூடுதல் ப்ளஸ்.

இன்ஜின் - கியர்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்...

பெனெல்லி என்றாலே,  முதலில் பலரின் நினைவுக்கு வருவது எக்ஸாஸ்ட் சத்தம்தான்! பெனெல்லியால் மட்டும் எப்படி பேரலல் ட்வின் இன்ஜினில் - இன்லைன் 4 சிலிண்டர் இன்ஜினின் சத்தத்தைக் கொண்டுவரமுடிகிறது என்பது தெரியவில்லை. TRK502 சீரிஸ் பைக்கிலும் அட்டகாசமான எக்ஸாஸ்ட் சத்தம். சீட் அகலமாக இருப்பது மட்டுமல்ல, சீட் குஷனும் அருமை. 900 கி.மீ லாங் ரைடு சென்றபோதும், அடுத்த நாள் களைப்பில்லாமல் அலுவலகம் செல்ல முடிந்தது. TRK சீரிஸ் பைக்குகளில் இருக்கும் 500சிசி இன்ஜின், 47.5bhp பவரும் - 4.6Kgm டார்க்கும் வெளிப்படுத்துகிறது. பவர் அக்ரஸிவ்வாக இல்லாமல் மிதமாகவே வெளிப்படுகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் செம ஸ்மூத்தாகவும், கிளட்ச் லீவர் லேசாகவும் உள்ளது. 6000rpm வரை அதிர்வுகள் என்பதே தெரியவில்லை. அதற்குப் பிறகு டேங்க் மற்றும் சீட்டில் அதிர்வுகள் வரத்தொடங்குகின்றன.

அதிக எடை மற்றும் அதிக வீல்பேஸ் இருப்பதால், பைக்கைத் திருப்புவது கஷ்டம் என நினைக்க வேண்டாம். பெனெல்லியின் பொறியாளர்கள் இங்கே திறமையைக் காட்டியுள்ளார்கள். சிறிய இடைவெளியில்கூட சுலபமாகத் திரும்பிவிடுகிறது TRK 502. சஸ்பென்ஷனுக்கு நிச்சயம் ஹார்ட் ஸ்மைலி கொடுக்க வேண்டும். 50 மிமீ USD ஃபோர்க் சாஃப்ட் செட்டப்; ஆனால் ஓவர் சாஃப்ட் இல்லை. பின்பக்க மோனோஷாக்கும் சொகுசான ரைடுக்கு உத்தரவாதம் கொடுக்கிறது. பைக்கை டிராஃபிக்கில் ஓட்டுவதற்கு எந்தச் சிரமமும் இல்லை. ஆனால், அகலமான க்ராஷ் கார்டும், அதைவிட அகலமான பேனியர்களும் பொருத்தப்பட்டிருப்பதால், ஒரு கார் அளவு இடத்தை பைக் எடுத்துக்கொள்கிறது.

வேகமாகப் போகும்போது எதிர்க்காற்று முகத்தில் அறையவில்லை. ஹெட்லைட் இரவுப் பயணங்களுக்கு ஏற்ற வெளிச்சத்தைத் தருகிறது. இதன் சொகுசான சீட், சிரமமில்லாத வேகமான பயணங்களுக்கு நம்மைத் தூண்டுகிறது. 6-வது கியரில் 5000 ஆர்பிஎம்மைத் தொடும்போது 100 கி.மீ வேகம், அதன்பிறகு ஒவ்வொரு 20கி.மீ வேகத்தைத் தொடும்போதும் 2000rpm அதிகரிக்கிறது. அதிகபட்சம் 170 கி.மீ வேகம் வரை இதில் செல்லலாம். டியூக் 390, ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர்கூட இந்த வேகத்தில் போகுமே என்று குறுக்குக்கேள்வி தோன்றாமல் இல்லை. ஆனால், 502-ல் கிடைக்கும் சொகுசான பயணம், மற்ற பைக்குகளில் இல்லை. பில்லியனோடு போக TRKதான் பெஸ்ட் ஆப்ஷன்.

ஆஃப் ரோடு

502 லாங் ரைடு பிரியர்களுக்கு என்றால், 502X ஆஃப் ரோடு பிரியர்களுக்கு. லாக்-டூ-லாக் ஸ்டீயரிங் மூவ்மென்ட் இருப்பதால், மலைப் பாதையில் போகும்போது மிருகங்கள் குறுக்கே வந்தால், யூ-டர்ன் எடுக்கவும் கட் அடிக்கவும் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஸ்டாண்டர்ட் மாடலை விட X-ல் 30 மி.மீ அதிக கிரவுண்டு கிளியரன்ஸ் உள்ளது. ஆஃப்ரோடு பயணங்களின்போது, பெட்ரோல் டேங்க்கை கிரிப்பாகப் பிடித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் பைக்கின் எடையை ஸ்டீயரிங் வைத்து அல்லது கீழே கால் ஊன்றித்தான் சமாளிக்க வேண்டியுள்ளது. ஆஃப் ரோடு செய்ய பைக் ஸ்டேபிலாக இல்லாததால், பல இடங்களில் நம்பிக்கை இழக்கவைக்கிறது. பிரேக்கிங் அருமை என்றாலும், ஃபீட்பேக் போதுமான அளவு இல்லை. ஒவ்வொரு முறை பிரேக் அடிக்கும்போதும் முன்பக்கம் ஜெர்க் கொடுக்கிறது.

தொகுப்பு: ரஞ்சித் ரூஸோ

பெனெல்லியின் அட்வென்ச்சர் இரட்டையர்கள்...

ந்த பைக்குகளில் ஏதாவது ஒன்று தேர்ந்தெடுக்கச் சொன்னால், நான் 40,000 ரூபாய் விலை அதிகமாக இருக்கும் 502X பைக்கைத்தான் தேர்ந்தெடுப்பேன். காரணம், சாலைகளுக்கொன்று மட்டுமல்லாமல் எல்லாவிதமான பயணங்களுக்கும் தயாராக இருக்கிறது 502X. எப்போதுமே காட்டுக்குள்ளும், ஆற்றுக்குள்ளும் ரைடு போகவேண்டிய சூழல் வராது. ஆனால், எப்போதாவது வரும் ஆஃப்ரோடு நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இருக்கும் 502X தான் என்னுடைய சாய்ஸ். நான் வெறும் சாலையில் மட்டும்தான் போகப்போகிறேன், ஆஃப் ரோடு எல்லாம் வேண்டாம் என்று நினைத்தால் TRK 502யைத் தேர்ந்தெடுக்கலாம். ட்ரையம்ப் டைகர், டுகாட்டி மல்ட்டிஸ்ட்ராடா 1260 ஆகிய பைக்குகளை வாங்கவேண்டும் என ஆசை இருந்தால், இந்த பெனெல்லியை ஓட்டிப் பழகிக்கொள்ளுங்கள். உங்கள் அட்வென்ச்சர் பயணங்களை ஆரம்பிக்கச் சிறந்த பைக் இவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism