Published:Updated:

புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா?

புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா?
பிரீமியம் ஸ்டோரி
புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா?

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட் - பஜாஜ் டொமினார் D400

புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா?

ஃபர்ஸ்ட் ரைடு ரிப்போர்ட் - பஜாஜ் டொமினார் D400

Published:Updated:
புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா?
பிரீமியம் ஸ்டோரி
புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா?

டொமினார் D400... 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் CS400 கான்செப்ட்டாக அறிமுகமானது. 2016-ம் ஆண்டின் இறுதியில் அசத்தலான விலையில் களமிறங்கிய இந்த பவர் க்ரூஸர் பைக், இரவுநேர ஹைப்பர் ரைடிங்கை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக விற்பனையில் இருக்கும் டொமினார் D400, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. டியூக் 390 பைக்கின் இன்ஜின், LED லைட்டிங், டூயல் சேனல் ஏபிஎஸ், பெரிமீட்டர் ஃப்ரேம், ரேடியல் டயர்கள், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன், லிக்விட் கூலிங், ஸ்லிப்பர் க்ளட்ச் என ஒரு டூரர் பைக்குக்கான டெக்னிக்கல் விஷயங்களுடன் மிரட்டிய இந்த பைக், ஏனோ நிஜத்தில் அப்படி பொசிஷன் ஆகவில்லை. ப்ரீமியம் பைக்குகளுக்கான சந்தை விரிவடைவதைத் தொடர்ந்து, தேவையான முன்னேற்றங்களுடன் கூடிய டொமினார் D400 பைக்கைத் தயாரித்துள்ளது பஜாஜ். பைக் இன்னும் வெளிவரவில்லை என்பதால், விலை விபரங்கள் இப்போது இல்லை!

புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா?

டிசைன் மற்றும் வசதிகள்

ஏற்கெனவே சிறப்பான டிசைனைக் கொண்டிருந்ததால், டொமினாரின் தோற்றத்தில் பெரிதும் மெனக்கெடவில்லை பஜாஜ். பாடி பேனல்களில் ஆங்காங்கே மேட் பிளாக் ஃபினிஷ், மெட்டல் வேலைப்பாடுகளுடன் கூடிய அலாய் வீல், புதிய ரியர்வியூ மிரர்கள், டபுள் பேரல் எக்ஸாஸ்ட், USD ஃபோர்க் எனப் புதிய அம்சங்களைப் பைக்கில் பார்க்க முடிகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, டூரர் பைக்குக்கான வசதிகளை D400 பைக்கில் ஆப்ஷனலாகவாவது பஜாஜ் வழங்கியிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஆனால் பின் பக்க சீட்டுக்கு அடியில் டூர் போகும்போது, பைகளைக் கட்டிக்கொள்ள வசதியாக 4 நைலான் கயிறுகள் வழங்கப்பட்டிருப்பது ஆறுதல். முந்தைய மாடலைப் போலவே இதில் இரட்டை டிஜிட்டல் டிஸ்ப்ளே இருந்தாலும், அதிகத் தகவல்கள் வழங்கப்பட்டிருப்பது ப்ளஸ். டைனமிக் மற்றும் ஆவரேஜ் மைலேஜ், ஆவரேஜ் மற்றும் டைனமிக் ஸ்பீடு, ஃப்யூல் ரேஞ்ச் மீட்டர் மற்றும் ட்ரிப் டைம் ஆகியவை தவிர கியர் இண்டிகேட்டரும் உள்ளது. ஆனால் இதில் சில பெட்ரோல் டேங்க்கில் இருக்கும் டிஸ்ப்ளேவில் இருப்பதால், அது பைக்கை ஓட்டும்போது தெளிவாகத் தெரியவில்லை. பின்பக்க சீட்டில் இருக்கும் D400 பிராண்டிங், LED  ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டின் டீட்டெய்லிங், பேக்லிட் ஸ்விட்ச்கள் எனக் குட்டி குட்டி டிசைன் அம்சங்கள் கவர்கின்றன. கவாஸாகியை நினைவுபடுத்தும் பச்சை நிறம் புதுசு.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா?

கேடிஎம் டியூக் 390 பைக்கின் 373.2சிசி இன்ஜின்தான் என்றாலும், SOHC - 3 ஸ்பார்க் ப்ளக் - 35bhp மற்றும் 3.5kgm எனக் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை டொமினாரில் செய்திருந்தது பஜாஜ். இது ஆன் ரோட்டில் வேகமான பைக்காக இருந்தாலும், அதிர்வுகள் மற்றும் ரிஃபைன்மென்ட் விஷயத்தில் இன்ஜின் கொஞ்சம் பின்தங்கியிருந்தது.  புது டொமினாரில் 40bhp@8,650rpm பவர் மற்றும் 3.5kgm@7,000rpm டார்க்கை வெளிப்படுத்தும் விதத்தில் இன்ஜினை ரீ-ரியூன் செய்திருக்கிறது பஜாஜ். முந்தைய மாடலைவிட அதிக கம்ப்ரஷன் ரேஷியோ (12.1:1) மற்றும் அதிக ரெட்லைன் (10,000 ஆர்பிஎம்) இதற்கான காரணங்களில் ஒன்று. DOHC அமைப்பு மற்றும் பேலன்சர் ஷாஃப்ட்டில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களால், அதிர்வுகள் பெருமளவில் கட்டுப்படுத்தப் பட்டிருக்கின்றன. ஸ்மூத்தாக இயங்கும் இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜினில், 8,000 ஆர்பிஎம்மைத் தாண்டும்போதுதான் சீட் மற்றும் ஃபுட் பெக்ஸில் அதிர்வுகள் எட்டிப் பார்க்கிறது.

செயல்திறன் அதிகரித்திருப்பதால், முந்தைய மாடலைவிட இது நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் க்ரூஸ் செய்வதற்கு ஏற்ற பைக்காக மாறியிருக்கிறது. த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருப்பதுடன், மிட் ரேஞ்ச் பெர்பாமென்ஸ் அதிரடியாக உள்ளது. அதிக டார்க் மற்றும் துல்லியமான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் போனஸ். ஆனால் முன்னே சொன்ன மாற்றங்களால், பழைய மாடலைவிடப் புதிய மாடலின் இன்ஜின் கொஞ்சம் ஹாட்டாக இருக்கும் எனத் தோன்றுகிறது. மேலும் மைலேஜிலும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம். முன்பைவிட டொமினார் D400 பைக்கின் எடை 2.5 கிலோ அதிகமாகியிருந்தாலும், பவர் டு வெயிட் ரேஷியோ 217.4bhp/Ton ஆக அதிகரித்திருக்கிறது. சிம்பிளாகச் சொல்வதென்றால், மாற்றம் முன்னேற்றம் செம!

ஓட்டுதல் அனுபவம்

புது டொமினார் இவ்வளவு மாறியிருக்கா?

கச்சிதமான எர்கானமிக்ஸ் மற்றும் சிறப்பான சீட்கள் இருந்தாலும், இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப் டொமினார் D400 பைக்கின் மைனஸாக இருந்தது. பைக் ஆர்வலர்களின் தவிப்பிற்கான தீர்வாக, CS400 கான்செப்ட்டில் இருந்த எண்ட்யூரன்ஸ் நிறுவனத்தின் 43மிமீ USD போர்க்கை இதில் பொருத்தியுள்ளது பஜாஜ். இதனால் பைக்கின் முன்பக்கம் கொஞ்சம் கனமாக இருப்பதுபோலத் தோன்றினாலும், பின்பக்க நைட்ராக்ஸ் மோனோஷாக் கொஞ்சம் மென்மையான செட்-அப்புக்கு மாறியிருக்கிறது. முன்பக்க போர்க், கேடிஎம்மைவிடக் குறைவான இறுக்கத்துடனே உள்ளது. எனவே இது ஒன்று சேரும்போது, சிறப்பான ஓட்டுதல் அனுபவம் கிடைத்துவிடுகிறது. அதிக வேகத்தில் பைக்கின் நிலைத்தன்மை நன்று; நம் ஊர் சாலைக்கேற்ற செட்-அப் 'நச்' எனலாம்.

முதல் தீர்ப்பு

முதலில் டொமினார் D400 வெளிவந்தபோது, இதை ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்குப் போட்டியாக பொசிஷன் செய்தது பஜாஜ். அது எதிர்பார்த்த பலனைத் தராதநிலையில், ப்ரீமியம் பைக் செக்மென்ட்டுக்கு ஏற்ப துரிதமாகச் செயல்பட்டு, தனது பவர் க்ரூஸரைப் பக்காவான பேக்கேஜாக இந்த நிறுவனம் மேம்படுத்தியிருக்கிறது. தற்போதைய மாடலின் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை 1.63 லட்சமாக இருக்கும் நிலையில், புதிய மாடலின் விலை 1.8 லட்சமாக இருக்கலாம். இது கேட்கக் கொஞ்சம் அதிகமாக இருப்பதுபோலத் தோன்றினாலும் அப்பாச்சி RR310, பிஎம்டபிள்யூ G310R, ஹோண்டா CB300R, கேடிஎம் டியூக் 250/390 ஆகியவற்றைவிட இது நிச்சயம் குறைவுதான்! முன்பைவிடக் கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பைக்காக மாறியிருக்கும் டொமினார் D400, பஜாஜின் விலை அதிகமான பைக்காகத் திகழும்.

தொகுப்பு: ராகுல் சிவகுரு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism