Published:Updated:

ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!

ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!

நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 4

ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!

நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 4

Published:Updated:
ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!

சுலபமான ஒரு விஷயத்தைச் செய்துவிட்டு, கஷ்டமானதைச் செய்யச் சொன்னால் திணறிப் போவோம்தானே? இதுவே கஷ்டமான ஒரு டாஸ்க்கைச் செய்துவிட்டால், அடுத்து வரும் எல்லாமே சுலபமாக முடியும். அப்படிப்பட்ட கஷ்டமான ஒரு டாஸ்க்தான் - மோட்டோக்ராஸ். அதாவது, இங்கே சுலபமான டாஸ்க் என்பது சாதாரண சிமென்ட் ட்ராக்கில் பைக் ஓட்டுவது. மோட்டோக்ராஸ் என்பது சாலையைத் தவிர எல்லா பாதைகளிலும் பைக் ஓட்டுவது.

சாதாரண சாலையில் பைக் ஓட்டும்போது பெரிதாக என்ன சிக்கல்கள் வரும்? கார்னரிங், பிரேக்கிங், குறுக்கீடுகள். இதுவே சாலையே இல்லாத பாதைகளில் பைக் ஓட்டிப்பாருங்கள். ஏகப்பட்ட டாஸ்க்குகள் வரும். திறமைகளும் வளரும். புரியும்படி சொன்னால், கார்களில் செய்யும் ஆப்ரோடு சாகசங்களை பைக்கில் செய்தால், அதுதான் மோட்டோக்ராஸ். மோட்டோக்ராஸ் பைக்குகளில் நடக்கும் ரேஸ்களுக்கு `டர்ட் ட்ராக் ரேஸ்’ என்று இன்னொரு பெயரும் உண்டு.

ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!

ரேஸராக விரும்பும் இளசுகள், மோட்டோக்ராஸ் பைக்குகளில் பயிற்சி எடுத்தால், அபாரமான திறமை வளரும் என்பதுதான் உண்மை. ரேஸ் ஆசையைத் தீர்த்துக்கொள்ள சாலைகளில் `வ்வ்ர்ர்ரூம்’ எனப் பறப்பது, ஸ்ட்ரீட் ரேஸ்களில் கலந்து கொள்வது எனத் தவறான முடிவெடுக்கும் இளைஞர்கள், மோட்டோக்ராஸ் பக்கம்கூட தங்கள் கவனத்தைச் செலுத்தலாம். காரணம், இதனால் உங்களைத் தவிர யாருக்கும் ஆபத்து நேராது.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஒரே ஒரு மோட்டோக்ராஸ் பைக், ஹீரோ இம்பல்ஸ். இதுதவிர, ராயல் என்ஃபீல்டில் ஹிமாலயன் பைக் இருந்தாலும், இதன் 182 கிலோ எடை என்பது புதிதாகப் பழகுபவர்களுக்குச் சரிப்பட்டு வராது. எனவே, சொந்தமாக இம்பல்ஸ் பைக் வாங்கி, அதில்கூட பயிற்சி எடுக்கலாம்.

இம்பல்ஸ் பைக் தவிர, மோட்டோக்ராஸ் பைக்குகளை அசெம்பிள் செய்தும் ஓட்டலாம். சில லைட் வெயிட் பிளாஸ்டிக்குகள்கொண்டு, இதற்கெனவே பிரத்யேகமாக பைக்கை ரெடிசெய்து தரும் கேரேஜ்களும் சென்னையில் இருக்கின்றன. `மோட்டோமேனியா’, `VR59 இந்தியன் ரேஸிங் பிரதர்ஸ்’ போன்றவை இதற்கான ஸ்பெஷலிஸ்ட்கள். சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை 50,000 முதல் 5 லட்சம் வரை பைக் அசெம்பிள் செய்து தருகிறார்கள்.

மோட்டோக்ராஸ் பைக்கைப் பொறுத்தவரை இன்னொரு ப்ளஸ், டிராக் ரேஸ்களைப்போன்று இதற்கென ரேஸ் டிராக்கில்தான் பயிற்சி பெற வேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் வீட்டுத் தோட்டம், நண்பர்களின் காலி இடம், பீச் மணல், விளையாட்டு மைதானம் என, கிடைக்கும் இடங்களை டிராக்காக மாற்றி பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். `பீச் மணல்லயா?’ என்று அதிர வேண்டாம். சாதாரண டிராக் ரேஸில், வேகம் போகப் போகத்தான் கிக் கிடைக்கும். மோட்டோக்ராஸ் பைக்குகளில் டார்க் அதிகம் என்பதால், இதைக் கிளப்பும்போதே ஒரு கிக் கிடைக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ட்ரீட் ரேஸ் எதுக்கு... மோட்டோக்ராஸ் இருக்கு!

சாதாரண ரோடு ரேஸ்களில் வேகம்தான் பிரதானம். மோட்டோக்ராஸ் ரேஸ்களில், பைக்கின் சீட்டில் அவ்வளவாக உட்கார்ந்து கூட ஓட்ட முடியாது. சில ரேஸ்கள், நின்றுகொண்டே ஓட்டும் அளவுக்குக்கூட இருக்கும். அந்தளவுக்கு மேடு-பள்ளங்களையும், ஆப்ரோடும் செய்ய வேண்டும் என்பதுதான் இதன் ஸ்பெஷலே! இதனால் பைக்கைக் கையாளும் திறனும் விவேகமும் அதிகரிக்கும்.

மோட்டோக்ராஸ் ரேஸ் பயிற்சிக்கென்றே ஒரே ஒரு டிராக், திருமுல்லைவாயலில் இருந்தது. இப்போது இல்லை. அதனால்தான் சென்னையில் மோட்டோக்ராஸ் ரேஸ்கள் பெரிதாக சோபிக்கவில்லை. சில மைதானங்களை மேடு-பள்ளங்களாக்கி, சென்னை பச்சையப்பன் கல்லூரி, ஈ.சி.ஆர்-ல் சில டர்ட் பைக் ரேஸ்கள் எப்போதாவது நடக்கும். ஆனால், இதற்கான நேஷனல் சாம்பியன்ஷிப் ரேஸ் - கோவை, பெங்களூரு, கோவா மற்றும் புனே போன்ற நகரங்களில் நடக்கிறது.

பெங்களூரில் இதற்கான பயிற்சி மையங்கள் உண்டு. மோட்டோக்ராஸ் ரைடர் சி.எஸ்.சந்தோஷின் பயிற்சி மையத்தில், டர்ட் பைக் ரேஸ்களுக்கான பயிற்சி கொடுக்கப் படுகிறது. சர்க்யூட் ரேஸ் சாம்பியனும் மோட்டோக்ராஸ் பயிற்சியாளருமான டி.கே.விஷ்வா என்பவரும், மோட்டோ க்ராஸுக்கான பயிற்சி கொடுத்து இளம் ரேஸர்களை ஊக்கப்படுத்திவருகிறார்.

சாதாரண ரேஸ்கள்போல், இதற்கும் வயது வரம்பு 12-ல் இருந்துதான் தொடங்குகிறது. 12 வயது மோட்டோக்ராஸ் சாம்பியன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சாதாரண டிராக் ரேஸ் லைசென்ஸுக்கும் மோட்டோக்ராஸ் லைசென்ஸுக்கும் வித்தியாசம் உண்டு. ஹோண்டாவின் Ten10 அகாடமியில் இருந்த ரோடு ரேஸ் வீரர் மதனாகுமார்கூட, திருச்சியில் தனக்குச் சொந்தமான நிலம் ஒன்றில் இப்போது மோட்டோக்ராஸ் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ``மோட்டோக்ராஸ் பைக் ஓட்டிட்டோம்னா ரோடு ரேஸில் இன்னும் தன்னம்பிக்கை வரும்’’ என்பது அவரது வாதம். இளம்பெண் ரேஸரான ரெஹானா ரியாவின் செல்போன் ஸ்டேட்டஸ்களில்கூட மோட்டோக்ராஸ் பயிற்சியையும் ரேஸ்களையும் பார்க்க முடிகிறது.

மண் தரை, சேறு சகதியில் ஓட்டப்படும் மோட்டோக்ராஸ் பைக்குகளைக் கையாண்டு விட்டால், டிராக் ரேஸ்களை அசால்ட் பண்ணலாம் என்பதுதான் உண்மை.

(வ்வ்ர்ர்ர்ரூம்)

தொகுப்பு: தமிழ்

- சுதாகர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism