கார்ஸ்
மோட்டார் நியூஸ்
Published:Updated:

SPY PHOTO - ரகசிய கேமரா: ராயல் என்ஃபீல்டின் புது க்ளாஸிக் & தண்டர்பேர்டு!

SPY PHOTO - ரகசிய கேமரா: ராயல் என்ஃபீல்டின் புது க்ளாஸிக் & தண்டர்பேர்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
SPY PHOTO - ரகசிய கேமரா: ராயல் என்ஃபீல்டின் புது க்ளாஸிக் & தண்டர்பேர்டு!

SPY PHOTO - ரகசிய கேமரா: ராயல் என்ஃபீல்டின் புது க்ளாஸிக் & தண்டர்பேர்டு!

ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் சீரிஸ்.... சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த நிறுவனத்தின் பைக் விற்பனையை, 2009-ம் ஆண்டு முதலாகத் தூக்கி நிறுத்திய பைக். புதிய கலர் ஆப்ஷன்கள், ஸ்பெஷல் எடிஷன்கள், பின்பக்க டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ஏபிஎஸ் எனச் சின்னச் சின்ன அப்டேட்கள் வந்தாலும், ஒரு முழுமையான மாற்றம் க்ளாஸிக் சீரிஸுக்கு நிச்சயம் தேவைப்படவே செய்கிறது. எனவே, இதன் பேஸ்லிஃப்ட் மாடலைத் தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்நிலையில் சென்னையில் புதிய க்ளாஸிக் மற்றும் தண்டர்பேர்டு பைக்குகள் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது படம் பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த நாகா.

SPY PHOTO - ரகசிய கேமரா: ராயல் என்ஃபீல்டின் புது க்ளாஸிக் & தண்டர்பேர்டு!

இந்த பைக்குகளின் டிசைன் தவிர மெக்கானிக்கல் அம்சங்களிலும் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது. இடதுபக்கத்தில் செயின் ஸ்ப்ராக்கெட் மற்றும் வலதுபக்கத்தில் Bybre டிஸ்க் பிரேக்ஸ் இருப்பதே முதல் சான்று. எக்ஸாஸ்ட் பைப்பின் அளவு மட்டும் முன்பைவிடக் கொஞ்சம் சிறிதாகியிருக்கிறது. ஹிமாலயன்/650 ட்வின்ஸ் பைக்குகளைப் போலவே, இவற்றிலும் கிக் லீவர் வழங்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியம் அதிகம்! தற்போதைய மாடலில் ட்வின் கேஸ் ஷாக் அப்ஸார்பர் இருக்கும் நிலையில், புதிய மாடலில் ஹைட்ராலிக் ஷாக் அப்ஸார்பர்கள் பொருத்தப்படலாம். தண்டர்பேர்டு பைக்கில் இருப்பதுபோன்ற அலாய் பேக்ரெஸ்ட் வழங்கப்பட்டிருப்பது ப்ளஸ். அனலாக் ஸ்பீடோ மீட்டரில், புதிதாக டிஜிட்டல் ஸ்க்ரீனைப் பார்க்க முடிகிறது. தண்டர்பேர்டு பைக்கில் கூடுதலாக அதன் மாடர்ன் டிசைனுக்கு ஏற்ப Y-Spoke அலாய் வீல்கள், சிறிய ஃபெண்டர்கள், மாற்றியமைக்கப்பட்ட டெயில் பகுதி, 20 லிட்டர் பெட்ரோல் டேங்க்கின் நடுப்பகுதிக்கு வந்திருக்கும் மூடி, மெட்டல் கிராப் ரெயில், ஸ்ப்ளிட் சீட்கள் என புதிய விஷயங்கள் இருந்தாலும், அலாய் பேக்ரெஸ்ட் மிஸ்ஸிங்.

 ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் பைக்கைப் படம் எடுத்து அனுப்பிய வாசகர் நாகாவுக்கு, ஓர் அற்புதமான பரிசு காத்திருக்கிறது.

அடையாளங்களை மறைத்து உங்கள் ஊரில் இப்படி ஏதாவது கார் அல்லது பைக் டெஸ்ட் செய்யப்படுகிறதா? அதை அப்படியே உங்கள் கேமராவில் பதிவுசெய்து எங்களுக்கு அனுப்புங்கள்! அனுப்ப வேண்டிய முகவரி:  ரகசிய கேமரா, மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002.  email: motor@vikatan.com