Published:Updated:

முதல் Fi ஸ்கூட்டர்!

முதல் Fi ஸ்கூட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
முதல் Fi ஸ்கூட்டர்!

ஃபர்ஸ்ட் ரைடு - ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

முதல் Fi ஸ்கூட்டர்!

ஃபர்ஸ்ட் ரைடு - ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ்

Published:Updated:
முதல் Fi ஸ்கூட்டர்!
பிரீமியம் ஸ்டோரி
முதல் Fi ஸ்கூட்டர்!

ந்தியாவில் அதிக டூ-வீலர்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ஹீரோ மோட்டோகார்ப், புதிய மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டருடன் 125சிசி செக்மென்ட்டில் மீண்டும் நுழைந்துள்ளது. `இந்தியாவின் முதல் ஸ்டார்ட் - ஸ்டாப் ஸ்கூட்டர்’ என்ற அடையாளத்துடன் எப்படி கடந்த ஆண்டில் டெஸ்ட்டினி களமிறங்கியதோ, அதேபோல ‘ஃப்யூல் இன்ஜெக்ஷன் கொண்ட முதல் ஸ்கூட்டர்’ என்ற தனி முத்திரையுடன் வெளிவந்திருக்கிறது மேஸ்ட்ரோ எட்ஜ் 125. இளைஞர்களுக்கான ஸ்கூட்டராக வெளிவந்திருக்கும் மேஸ்ட்ரோ எட்ஜில் என்ன ஸ்பெஷல்?

முதல் Fi ஸ்கூட்டர்!

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்
பெரிய 125சிசி இன்ஜின் மற்றும் புதிய எக்ஸாஸ்ட் பைப் காரணமாக, 110சிசி மாடலைவிட 125சிசி மாடலின் அகலம் 23மிமீ அதிகரித்திருக்கிறது. ஸ்கூட்டரின் மற்ற அளவுகளில் பெரிய வித்தியாசமில்லை. 110சிசி மாடலில் ஹெட்லைட்டுக்கு மேலே கறுப்பு நிற வைஸர், சில்வர் ஃபினிஷ் கொண்ட மிரர்கள், மேட் க்ரோம் கலரில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இருந்தது. 125சிசி மாடலில் பாடி கலரில் வைஸர், கறுப்பு நிற மிரர்கள், தங்க நிற டெலிஸ்கோபிக் ஃபோர்க் என இவை மாறியிருக்கின்றன. 110சிசி மாடலில் ஸ்கூட்டர் முழுவதும் கிராஃபிக்ஸ் வியாபித்திருந்த நிலையில், 125சிசி மாடலில் அது முன்பக்கத்தில் மட்டுமே உள்ளது. கூடவே சிறிய Fi பேட்ஜும், டைமண்ட் கட் அலாய் வீல்களுக்கு ரிம் ஸ்ட்ரிப்பும் இடம்பெற்றிருக்கிறது.

முதல் Fi ஸ்கூட்டர்!

தவிர பவர்ஃபுல் மாடல் என்பதை வெளிக்காட்டும் விதமாக, முன்பக்க ஆப்ரானில் LED DRL - முன்பக்க டிஸ்க் பிரேக் - டூயல் டோன் இன்டீரியர் பேனல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதுவும் கறுப்பு நிற ஸ்கூட்டரில் இருக்கும் சிவப்பு நிற பேனல், பார்க்க ஸ்போர்ட்டியாக உள்ளது. 110சிசி மாடலுடன் ஒப்பிடும்போது, டிஜிட்டல் அனலாக் மீட்டரின் ஃபான்ட் மாறியிருப்பதுடன், பின்பக்கத்தில் LED டெயில் லைட்டுக்கு இடையே கறுப்பு நிற வேலைப்பாடு இருக்கிறது. டெஸ்ட்டினி போலவே மேஸ்ட்ரோ எட்ஜின் கார்புரேட்டர் மாடலில் i3S வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் 110சிசி மாடலில் இருக்கும் அனைத்து வசதிகளுமே, 125சிசி மாடலில் இருப்பது ப்ளஸ். ஆனால் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பாக்கும்போது, LED டே டைம் ரன்னிங் விளக்குகளுக்குப் பதிலாக LED ஹெட்லைட்ஸ் இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. ப்ரீமியமாக இருக்கும் பின்பக்கத்தில், பெரிய 12 இன்ச் வீலைப் பொருத்தியிருக்கலாம். 4 ஆண்டுகள் பழைய டிசைனாக இருந்தாலும், அழகாக இருக்கிறது மேஸ்ட்ரோ எட்ஜ் 125.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் டிசைன் மற்றும் வசதிகள் எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல பர்ஃபாமன்ஸும் அவசியம். நான் ஓட்டிய ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மாடல் 9.1bhp@7,000rpm பவரையும் - 1.02kgm@5,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இது கார்புரேட்டர் மாடலைவிட 0.4bhp பவர் அதிகம் என்பதுடன், 110சிசி மாடலைவிட 1.1bhp பவர் மற்றும் 0.15kgm டார்க் அதிகம். எனவே இந்த ஏரியாவில், எதிர்பார்த்தபடியே கணிசமான முன்னேற்றம் தெரிகிறது. 110சிசி மாடல் போல இதிலும் ஆரம்பகட்ட பர்ஃபாமன்ஸ் டல்லாக இருந்தாலும், 30-40 கி.மீ வேகத்தைத் தாண்டிய பிறகு பவர் டெலிவரி நன்றாக இருக்கிறது. ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் என்பதால், அதிகபட்ச வேகத்திலும் (95 கி.மீ) இன்ஜின் அதிக சத்தமில்லாமல் இயங்குகிறது. ஆனால் 110சிசி மாடல் போலவே இங்கும் ஃப்ளோர்போர்டில் அதிர்வுகள் தென்படுவது மைனஸ்.

முதல் Fi ஸ்கூட்டர்!

ஓட்டுதல் அனுபவம்

 IBS உடனான முன்பக்க டிஸ்க் பிரேக்கைத் தவிர, மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இல்லை. எனவே 110சிசி மாடல் போலவே, 125சிசி மாடலும் மனநிறைவான ஓட்டுதல் அனுபவம் தருகிறது. 110 கிலோ எடையும் MRF டயர்களும் அதற்குத் துணை நிற்கின்றன. சஸ்பென்ஷன் செட்அப் கொஞ்சம் இறுக்கமாக இருப்பதால், பின்பக்கத்தில் 12 இன்ச் வீல் இருந்திருந்தால், அது கூடுதல் ரோடு கிரிப் மற்றும் சஸ்பென்ஷனின் செயல் திறனுக்கு உதவியிருக்கும். இரட்டை டெக்ஸ்ச்சர் கவர் கொண்ட சீட்டில், இருவர் சொகுசாக உட்கார முடிகிறது. 190மிமீ டிஸ்க்/130மிமீ டிரம் பிரேக் காம்போ, ரைடருக்குத் தேவையான ஃபீட்பேக்கைத் தருகிறது. மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் கார்புரேட்டர் மாடலில் 5.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கும் நிலையில், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மாடலின் டேங்க் அளவு 5 லிட்டர்தான்!

முதல் தீர்ப்பு


டிரம்-கார்புரேட்டர், டிஸ்க்-கார்புரேட்டர், டிஸ்க்-ஃப்யூல் இன் ஜெக்‌ஷன் என 3 வேரியன்ட்கள் - 6 நிறங்களில் விற்பனைக்கு வந்திருக்கிறது மேஸ்ட்ரோ எட்ஜ் 125. இவற்றின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே 58,500 - 60,000 - 62,700 ரூபாய். போட்டியாளர்களை ஒப்பிடும்போது கிராஸியாவின் விலை 60,723-65,095 ரூபாயாக உள்ளது. இதை விடக் குறைவான விலையில் கிடைப்பதால் என்டார்க்தான், இப்போது 125சிசி ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ‘ரூட் தல’யாகவும் இருக்கிறது. போட்டியாளர்களைப் பார்த்தால், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரின் விலை அதிகம் போலத் தோன்றலாம். ஆனால், i3S சிஸ்டம் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் எனச் சில தனித்துவமான வசதிகள் அதற்குக்  கைகொடுக்கலாம்.
 

-  ராகுல் சிவகுரு, படங்கள்:  துளசிதரன்