பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்... அதாவது ஹீரோ மோட்டோகார்ப், ஹீரோ ஹோண்டாவாக இருந்த காலம் அது. பெண்களுக்கென பிரத்யேகமாக டிவிஎஸ் அறிமுகப்படுத்திய 87.8 சிசி டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ப்ளஸ்ஸின் அசுர வெற்றியைப் பார்த்து, 2006-ம் ஆண்டில் இந்த நிறுவனம் களமிறக்கிய ஸ்கூட்டர்தான் ப்ளஷர். இதற்கான விளம்பரத்தில் `why should boys have all the fun?’ என பிரியங்கா சோப்ரா நம்மிடம் சிரித்துக் கொண்டே கேட்டது, இன்னும் நினைவில் இருக்கிறது. பிறகு 2014-ம் ஆண்டில் அதே கேள்வியை, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ப்ளஷர் ஸ்கூட்டரில் அமர்ந்து ஆலியா பட் கேட்டார்.

இதற்கிடையே 2013-ம் ஆண்டில் ஆக்டிவா-i ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தது ஹோண்டா. குறைவான எடை, காம்பேக்ட் சைஸ், கச்சிதமான விலை, போதுமான வசதிகள் எனக் கவர்ந்தாலும், காலப்போக்கில் இதன் விற்பனை சரிவைக் கண்டது. நடுவே பெண்களை மையப்படுத்தி வெளிவந்த டியோ, வெஸ்பா, ஃபஸினோ ஆகியவற்றின் சந்தை மதிப்பு வியப்பளிக்கிறது. எனவே, தான் விட்ட இடத்தைப் பிடிக்க புதிய அவதாரத்தில் வந்திருக்கிறது ப்ளஷர் ப்ளஸ். பெயரில் இருக்கும் ப்ளஸ், பெரிய இன்ஜினைக் குறிக்கிறது (110சிசி). டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்டுக்குப் போட்டியாக வந்திருக்கும் இது எப்படி இருக்கிறது?

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்

சிம்பிளாகச் சொல்வதென்றால், ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த வடிவமைப்பே மாறியிருக்கிறது (19மிமீ அதிக நீளம், 46மிமீ அதிக உயரம், 30மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்). ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரை நினைவுபடுத்தும் ஹெட்லைட், பஜாஜ் ஸ்ப்ரிட் ஸ்கூட்டரைப் போன்ற முன்பக்க ஆப்ரான், பஜாஜ் க்ரிஸ்ட்டல் ஸ்கூட்டரைப்போல அமைந்திருக்கும் பக்கவாட்டு மற்றும் பின்பக்கப் பகுதி எனத் தோற்றத்தில் பல ரெஃபரன்ஸ்கள் உள்ளன. என்றாலும் இதுபோன்ற ரெட்ரோ டிசைன் அம்சங்களுடன், ஆங்காங்கே சில்வர் வேலைப்பாடுகளுடன் கவர்கிறது ப்ளஷர் ப்ளஸ்.

முந்தைய ப்ளஷர் போலவே இங்கும் Gloss/Matt என 7 கலர் ஆப்ஷன்கள்! சீட்டில் இருவருக்கான இடவசதி சரியாக இருக்கிறது. ஆனால் சீட்டுக்கு அடியே இருக்கும் பொருள்கள் வைப்பதற்கான இடத்தில், ஒரு ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டை வைக்க முடியவில்லை. விலையை வைத்துப் பார்க்கும்போது, கட்டுமானத் தரம் மற்றும் ஃபிட் அண்டு ஃபினிஷ் ஓகே! பட்ஜெட் ஸ்கூட்டராக இருப்பினும் மொபைல் சார்ஜிங் பாயின்ட், சீட்டுக்கு அடியே LED லைட், பராமரிப்பு தேவையில்லாத பேட்டரி, டியூப்லெஸ் டயர்கள், சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டர் போன்ற பிராக்டிக்கலான வசதிகளுக்கு சபாஷ். ஆனால், பழைய மாடலில் முன்பக்கம் இருந்த க்ளோவ் பாக்ஸ், பூட்டும் வசதியைக் கொண்டிருந்தது. புதிய மாடலில் அது திறந்த நிலையில் இருக்கிறது. அதேபோல சைடு ஸ்டாண்டு இண்டிகேட்டருக்கு பஸ்ஸர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்; H வடிவ டெயில் லைட் பார்க்க அழகாக இருந்தாலும், அது LED இல்லை. மேலும் மேஸ்ட்ரோ எட்ஜ் போலவே, இங்கும் கலர்ஃபுல் இன்டீரியர் பேனல்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

டூயட் (116 கிலோ) மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் (110 கிலோ) ஆகிய ஹீரோவின் 110சிசி ஸ்கூட்டர்களில் இருக்கும் அதே 110.9சிசி இன்ஜின்தான் இந்த ஸ்கூட்டரிலும்! ஆனால் ப்ளஷர் போலவே, ப்ளஷர் ப்ளஸ்ஸின் எடை 101 கிலோதான். அதனால் எதிர்பார்த்தபடியே, இதை ஓட்டுவது பெப்பியாக இருக்கிறது. 40 கி.மீ வேகம் வரை ஸ்மூத்தாக இயங்கும் இன்ஜின், அதன் பிறகு அந்தத் தன்மையைக் சிறிது இழந்துவிடுகிறது. இதனால் வேகம் செல்லச் செல்ல, ஃப்ளோர்போர்டில் அதிர்வுகள் தென்படுகின்றன. இது ஜப்பானிய இன்ஜின்கள் அளவுக்கு ரிஃபைண்டாக இல்லாவிட்டாலும், பர்ஃபாமன்ஸ், மனநிறைவைத் தருகிறது. பழைய மாடல் 75 கி.மீ வேகத்தைத் தாண்டும்போதே சோர்ந்துவிடும், புதிய மாடல் 85 கி.மீ வேகம் வரை செல்கிறது. டெஸ்ட்டினியில் இருந்த ஹீரோவின் டிரேட்மார்க் அம்சமான i3S சிஸ்டம் இங்கே மிஸ்ஸிங்.

ஓட்டுதல் அனுபவம்

ப்ளஷரில் டிசைன் மற்றும் இன்ஜின் மாறியிருந்தாலும், அதன் ஓட்டுதல் அனுபவத்தில் பெரிய மாற்றமில்லை. ஏனெனில் சஸ்பென்ஷன், பிரேக்ஸ், வீல்கள் போன்ற மெக்கானிக்கல் அம்சங்கள் - ப்ளஷர் மற்றும் ப்ளஷர் ப்ளஸ்ஸில் ஒன்றுதான். எனவே காம்பேக்ட் சைஸில் லைட் வெயிட் ஸ்கூட்டர் எனும் பலத்தைக் கொண்டிருக்கும் இது, நெரிசல்மிக்க நகர சாலைகளில் ஓட்டுவதற்கு மகிழ்ச்சியாகவும் சுலபமாகவும் இருக்கிறது. ஆனால் ப்ளஷர் ப்ளஸ்ஸின் சிறிய 10 இன்ச் வீல்கள் மற்றும் குறைவான எடை காரணமாக, அதிக வேகத்தில் செல்லும்போது ஸ்கூட்டரின் நிலைத்தன்மை அவ்வளவு சிறப்பாக இல்லை. மேலும் பாட்டம் லிங்க் - காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் செட்அப், குறைவான வேகத்தில் ஓகே! அதிக வேகத்தில் அதிர்வுகளை ரைடருக்குக் கடத்துகிறது. ஸ்கூட்டி ஜெஸ்ட்போல டெலிஸ்கோபிக் ஃபோர்க்கை ஹீரோ கொடுத்திருக்கலாம்.

முதல் தீர்ப்பு

வழக்கம்போலவே, ப்ளஷர் ப்ளஸ்ஸின் விலை விஷயத்தில் சிக்ஸர் அடித்துவிட்டது ஹீரோ. ஸ்டீல் வீல்கொண்ட மாடலின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 47,300 ரூபாய்; அலாய் வீல்கொண்ட மாடலின் விலை 49,300. இது ப்ளஷரைவிட வெறும் 2,200 ரூபாய் மட்டுமே அதிகம். மேலும் ஸ்கூட்டி ஜெஸ்ட் மற்றும் ஆக்டிவா-i உடன் ஒப்பிடும்போது, ப்ளஷர் ப்ளஸ்ஸின் விலை 3,000 - 4,000 ரூபாய் வரை குறைவு. எனவே விலைக்கேற்ற மதிப்புடன் இருக்கும் ப்ளஷர் ப்ளஸ், பெண்களைத் தாண்டி அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்கூட்டராக மாறலாம்.

- ராகுல் சிவகுரு; படங்கள்: துளசிதரன்