மோட்டோ ஜீபி, WSBK, ஃபார்முலா-1 என்று எந்த உலகப் புகழ்பெற்ற ரேஸ்களாக இருந்தாலும் சரி... இந்திய ரேஸர்கள் மிகவும் அரிதாகத்தான் இருப்பார்கள். ஃபார்முலா ரேஸ்களில் கலந்து கொண்ட இந்தியர்கள் என்றால் நரேன் கார்த்திகேயன், கரூண் சந்தோக், அர்மான் இப்ராஹிம், ஆதித்யா பட்டேல், அஷ்வின் சுந்தர் போன்ற சிலர் மட்டும்தான் சட்டென நினைவுக்கு வருகிறார்கள். அஜித்குமார்கூட ஒருமுறை ஃபார்முலா-2 ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார். இன்னும் சில இந்திய/தமிழ்நாட்டு வீரர்களும் உண்டு. அவர்கள் வருத்தப்பட வேண்டாம். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், நம் ஊரில் குறைந்த அளவு ரேஸர்கள்தான் பெரிய ரேஸ்களில் கலந்து கொள்கிறார்கள் என்பதுதான் எனது வருத்தம்.

இதற்குக் காரணம், நமக்குத் திறமை இல்லாமல் இல்லை. நமக்கு அந்த அளவுக்கு இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சரும், பைக் வசதியும், டிராக் அவெய்லபிலிட்டியும், பெற்றோர்கள் சப்போர்ட்டும் இல்லை என்பதுதான்.

வெளிநாடுகளில் சிறு வயதில் இருந்தே ரேஸர் அவதாரம் எடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். நடக்கப் பழகும்போதே பைக்கையும் கையில் கொடுத்து விடுகிறார்கள். அதனால், 5 அல்லது 6 வயதிலேயே எக்ஸ்பெர்ட் ரேஸர்களாக உருவாகி விடுகிறார்கள் சிறுவர்கள். நம்மிடமும் திறமை மிக்க சிறுவர்கள் இருக்கிறார்கள். என்னிடம் பயிலும் ரோஹித், வினித் என்ற இரண்டு சிறுவர்கள், வெளிநாட்டு ரேஸர்களைவிட 3 விநாடிதான் பின்தங்கியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், திறமையைத் தாண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. அது, பைக். ஒரு நல்ல ஹேண்ட்லிங் கொண்ட பைக்கும் திறமையும் சேரும்போதுதான் சாம்பியன்கள் உருவாகுகிறார்கள்.

இந்த மாதம் தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா சென்றிருந்தேன். தாய்லாந்தில் MSX என்று ஒரு 125 சிசி பைக் இருக்கிறது. இது நம் ஊர் CBR, R15 பைக்குகளுடன் ஒப்பிடும்போது, பவரும் சில டெக்னிக்கல் விஷயங்களும் குறைவுதான். ஆனால், இதன் ஹேண்ட்லிங் அற்புதமாக இருக்கும். இது ஒரு பாக்கெட் பைக் மாதிரிதான். ஆனால் பார்ப்பதற்கு பெரியவர்கள் ஓட்டும் பைக் போலத்தான் தெரியும். இதை 4 வயது சிறுவர்கள்கூட அற்புதமாகக் கையாள முடியும். அதை நம் நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்பதற்காகத்தான் இந்தப் பயணம்.

பேங்காக்கில், நம் ஊர் ஜிபி ரோடு மாதிரி ரேஸ் பைக்குகளுக்கு என்று ஒரு கடைவீதியே இருக்கிறது. உள்ளே சென்றால், எங்கும் பைக்குகளின் ஸ்பேர்பார்ட்ஸ் வாசம்தான். அங்கே நான் பார்த்த பலரும் 5 அல்லது 6 வயதுக்குக் கீழே உள்ள வாண்டுகள் தான். அவர்கள், ‘அப்பா, இந்த ஆக்ஸிலரேட்டர் கேபிள்தான் என் பைக்குக்கு சூட் ஆகும். அம்மா, எனக்கு இந்த டயர்தான் வேணும்’ என்று அடம்பிடிக்கிறார்கள்.

அதைவிட ஓர் ஆச்சரியம் - ‘இந்த பைக்கெல்லாம் எப்படி மாடிஃபை செய்வீர்கள். உங்கள் மெக்கானிக் எங்கே’ என்று கேட்டபோது, ‘என் டாடிதான் மாடிஃபை பண்ணித் தருவார். அவர்தான் எனக்கு மெக்கானிக்!’ என்று தன் தந்தைகளைக் கைகாட்டுகிறார்கள் சிறுவர்கள்.

ஆம்! அங்கே இதுபோன்ற சிறுவர்களின் அப்பாக்களுக்கு எல்லாம் மெக்கானிக் தொழில் தெரிந்திருக்கிறது. ரேஸில் ஆக்ஸிலரேட்டர் கேபிள் மாட்டுவது, டயர் ஃபிக்ஸ் செய்வது, பைக்கை ரெடி செய்வது என்று எல்லாமே அப்பாக்கள்தான். சூட் மாட்டி விடுவது, லேப்புகளில் ரெஃப்ரெஷ்மென்ட் வேலைக்கு - அம்மாக்கள்.

‘‘உனக்குப் படிப்பு வேண்டுமா, ஸ்போர்ட்ஸ் வேண்டுமா?’’ என்று அங்கே ஒவ்வொரு சிறுவர்களிடமும் கேட்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸைத் தேர்ந்தெடுக்கும் சிறுவர்களுக்கு, படிப்பு பார்ட் டைம்தானாம். தினமும் காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ரேஸ் டிராக்கில்தான் இருக்கிறார்கள். அவர்கள் தினமும் இரண்டு மணி நேரம் புத்தகத்தைத் தொட்டால் போதும். பணமெல்லாம் இங்கே ரேஸில் விளையாடவில்லை. மிடில் க்ளாஸ் குடும்பத்தில் இருந்து சாம்பியன் ஆகிக்கொண்டே இருக்கிறார்கள். நம் ஊரை ஒப்பிடும்போது டிராக்கின் வாடகையும் மிகவும் குறைவு.

நம் ஊரில் 13 வயதுக்கு மேல்தான் பைக்கைக் கையாளும் வித்தையும் வழியும் தெரிய ஆரம்பிக்கிறது. இவர்கள் பைக்கைத் தொட ஆரம்பிக்கும்போது, அவர்கள் 10 வருட அனுபவத்தில் பறக்கிறார்கள்.

அவர்களுடன் மோத இவர்கள் போராட வேண்டியிருக்கிறது. 23 வயதில் இவர்கள் நேஷனல் சாம்பியன் ஆகும்போது, அவர்கள் 20 வயதில் உலக சாம்பியன் ஆகிவிடுகிறார்கள். இது மாற வேண்டும் என்பதே எனது ஆசை!

- (வ்வ்ர்ர்ரூம்)

(தொகுப்பு: தமிழ்)