பைக்கை முதலில் பார்த்ததும், ஏதோ ஒரு ப்ரீமியமான நேக்கட் பைக்போல்தான் தோன்றியது. ஆம்! ஹோண்டாவில் ஃபேரிங் பைக்குகளையே பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு, CB300R பைக்கின் நேக்கட் டிசைன், ஒரு நிமிடம் கண்களை அகலத் திறக்க வைத்துவிட்டது. CBR250R பைக்குக்கு மாற்றாக வந்திருக்கும் புதிய CB300R பைக்குக்கு ஒரு ஹலோ சொல்லலாம்.

படத்தில் பார்ப்பதற்கு ‘ஆண்ட்ரே ரஸல்’ மாதிரி பல்க்காக இருக்கிறதே என்றுதானே நினைத்தீர்கள். நிஜத்தில் இந்த CB300R ‘ஹர்திக் பாண்டியா’ மாதிரி செம காம்பேக்ட்டான பைக். வெறும் 147 கிலோ எடை என்பதுதான் நான் முதலில் ஆச்சரியப்பட்டதற்குக் காரணம். ஆனால், கட்டுமஸ்தான டிசைனில் பார்த்தவுடன் பிரமிக்க வைக்கிறது CB300R.

வட்ட வடிவ ஹெட்லைட்டே ரெட்ரோ டிசைன் என்பதைச் சொல்கிறது. மாடர்ன் டச்சும் உண்டு. அதாவது, LED விளக்குகள். சிலிண்டர் வடிவ இண்டிகேட்டர் LED விளக்குகளும் (பின்பக்கமும்) அதே! ரேடியேட்டர் பகுதியின் அலுமினிய வேலைப்பாடுகள்தான், தூரத்தில் இருந்து பார்க்கும்போது ‘நச்சுனு இருக்குல’ எனச் சொல்ல வைக்கிறது. பல்க்கியான எக்ஸாஸ்ட், ஹப்பா! இடதுபக்கம் எவ்ளோ பெரிய ஸாரி கார்டு! LCD டிஸ்ப்ளேவின் லே-அவுட் அருமை. ஆனால், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் இல்லை. ஹார்னும் இண்டிகேட்டரும் ரைடருக்குக் குழப்பியடிக்கலாம்.

286.01 சிசி இன்ஜின் சத்தம், ஹோண்டாவின் ஃபெமிலியரான சவுண்ட். இன்ஜின் ரிஃபைன்மென்ட் நன்று. ஆனால், 8,000 rpm-க்கு மேலே லேசான அதிர்வுகளை உணர முடிகிறது. 11,000 rpm-ல் சத்தம் இன்னும் அதிகம். இந்த இன்ஜினின் ப்ளஸ் - எல்லா rpm-களிலும் பவர் டெலிவரி அருமை. இதன் பவர் 30.45 bhp. CBR250R-ஐவிட 3.9bhp அதிகம். டார்க்கும்தான் - 4.5kgmஅதிகம்.
(2.74kgm). 250 சிசி பைக்கைவிட 20 கிலோ குறைவு எனும்போது, இந்த பவரும் டார்க்கும் சும்மா தெறிக்க விடுகிறது. 140 கி.மீ வரை எந்த முக்கலும் இல்லாமல் விரட்ட முடிகிறது. CB300R-ல் டாப் ஸ்பீடு 160 வரை பறக்கலாம்.

எடை குறைவு என்பதால், ‘சட் சட்’ என க்விக் ரெஸ்பான்ஸ் இந்த 300 சிசி பைக்கில் அசத்தல். இது 0-100 கி.மீ-யை 7 விநாடிகளில் தொடுகிறது. நகரத்துக்குள் விரட்ட அற்புதமான பைக் இது. எடை மட்டும் இதற்குக் காரணமில்லை; குறைவான டர்னிங் ரேடியஸ், லேசான க்ளட்ச், அவ்வளவாகத் தெரியாத இன்ஜின் சூடு எல்லாமே சிட்டிக்குள் ஜாலியான ரைடிங்காக மாற்றுகிறது.

‘பார்த்தவுடன் பல்க்கி பைக்காக இருக்கே’ என்று நினைத்தீர்களே... அதற்குக் காரணம் - இதன் 41மிமீ தடிமன் கொண்ட USD ஃபோர்க் கொண்ட ட்யூபுலர் டைமண்ட் ஃப்ரேம் செக்ஷன்தான். பின் பக்கம் 7-ஸ்டெப் ப்ரீ-லோடட் அட்ஜஸ்டபிள் ஃபோர்க். சஸ்பென்ஷன் சொகுசு, சூப்பர் லெவலில் இருக்கிறது. ஆனால், பின் பக்கம் கொஞ்சம் சாஃப்ட் செட்-அப் போல் தெரிகிறது. ஸ்மூத்தான மலைச்சாலைகளில் ஹார்டு ரைடிங்கின்போது, பின் பக்கம் கொஞ்சம் அலைகிறது. இதை ப்ரீ-லோட் செட்-அப்பில் நீங்களே அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் ஆப்ஷனும் உண்டு. அதற்கு டூல் கிட்டும், ‘C’ ஸ்பானரும் தேவை.

மிச்சிலின் பைலட் டயர்களின் கிரிப் ஓகே. இரண்டு பக்கமுமே டிஸ்க்தான். 250சிசியில் இருக்கும் அதே 296/220 மிமீ (மு/பி) டிஸ்க் பிரேக்ஸ்தான். இப்போது ரேடியல் மவுன்டட் நிஸின் பிரேக் கேலிப்பர்கள் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் ஷார்ப்னெஸ் வேண்டும் பிரேக்ஸில்.

சூப்பர் பைக்குகளில் இருக்கும் ‘IMU’ (Inertial Measurement Unit) மூலம் ABS பிரேக்ஸைக் கட்டுப்படுத்தும் வசதி கொண்ட இந்த செக்மென்ட்டின் முதல் பைக் CB300R. சூப்பர் பைக்குகள் அளவு அட்வான்ஸ்டாக இல்லை. ஆனால், இதன் பர்ஃபாமென்ஸ் சூப்பர்.

ஃபிட் அண்ட் ஃபினிஷில் அசத்தும் இந்த ப்ரீமியம் பைக்கான CB300R-ல் சில குறைகளும் உண்டு. அந்தக் கறுப்பு வெள்ளை LCD இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, இதன் ப்ரீமியம் லுக்குக்கு ஆப்பு வைக்கிறது. இன்ஜின் கட்-ஆஃப் சிஸ்டம் இல்லை; சைடு ஸ்டாண்டுக்கு பஸ்ஸர்கூட வேண்டாம்... இத்தனை பெரிய பைக்குக்கு வார்னிங் லைட் கூடவா இல்லாமல் இருப்பது? முக்கியமாக அந்த 10 லிட்டர் பெட்ரோல் டேங்க். நகரத்தில் 28 கி.மீ-யும், 37.4 கி.மீ நெடுஞ்சாலையிலும் மைலேஜ் தருகிறது CB300R. 10 லிட்டரை வைத்து டூர் அடித்தால், பங்க்குகளில் நிற்கத்தான் நேரம் சரியாக இருக்கும்.

மற்றபடி, CKD முறையில்தான் வருகிறது CB300R. அதனால், விலை அதிகம் கையைக் கடிக்காது. இதன் எக்ஸ் ஷோரூம் டெல்லி விலை - 2.41 லட்சம். கேடிஎம் 390-யை ஒப்பிடும்போது, மிகவும் ஆசுவாசம் கிடைக்கும். சிட்டிக்குள் ஓட்ட 3 லட்சத்துக்குள் ஒரு ஜாலியான, ப்ரீமியம் ஹோண்டா பைக் ரெடி!

தொகுப்பு: தமிழ்