Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... www.vikatan.com

ஸ்டைலா, புதுசா திரும்ப வருது ஆக்டிவா 125

மோட்டார் நியூஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ந்தியாவின் முதல் BS-6 டூவீலர் என்று ஹீரோ தனது ஸ்ப்ளெண்டர் i-ஸ்மார்ட் பைக்கை அறிவித்தவுடன், `நாங்கள்தான் இந்தியாவில் முதல் BS-6 ஸ்கூட்டர்' என்று ஆக்டிவா 125  ஸ்கூட்டரைக் களமிறக்கியுள்ளது ஹோண்டா. இந்தப் புதிய தலைமுறை ஆக்டிவாவில், இதுவரை ஹோண்டா தராத பல வசதிகள் இருக்கின்றன. BS-6 இன்ஜின்கொண்ட இந்த ஸ்கூட்டருக்கு ஹோண்டா 26 காப்புரிமைகளை வாங்கியிருக்கிறதாம்.

தற்போது வரும் ஃபைபர் பேனல் ஸ்கூட்டர்களுக்கு மத்தியில், ஆக்டிவா 125-ல் முழுக்க முழுக்க மெட்டல் பாடி பேனல்கள் உள்ளன. DRL மட்டுமல்ல; ஹெட்லைட்டும் LEDதான். முன்பக்கம் 12 இன்ச் வீல், சத்தமில்லாத செல்ஃப் ஸ்டார்ட்டர், ஹீரோவின் 125சிசி ஸ்கூட்டர்களைப்போல ஸ்டார்ட்-ஸ்டாப் வசதி, பாஸ் லைட் ஸ்விட்ச், சீட்டைத் திறக்கத் தேவையில்லாமல் வெளியிலேயே ஃப்யூல் ஃபில்லர், முன்பக்க க்ளோவ் பாக்ஸ் போன்றவை வருகின்றன. இதன் டிஜிட்டல் -அனலாக் மீட்டரில் சைடு ஸ்டாண்டு, எக்கோ-ஸ்பீடு மற்றும் சர்வீஸ் இண்டிகேட்டர்கள் மட்டுமல்ல, இருக்கும் பெட்ரோலில் எவ்வளவு தூரம் போக முடியும் எனக் காட்டும் டிஸ்டன்ஸ் டு எம்ப்டி மீட்டரும் உண்டு. சைடு ஸ்டாண்டு இன்ஹிபிட்டர் இருப்பதால், சைடு ஸ்டாண்டு எடுத்தால் மட்டுமே ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகும். இதன் இன்ஜினில் Fi சிஸ்டம் வருகிறது. ஹோண்டாவின் HET தொழில்நுட்பத்துடன் புதிதாக eSP (enhanced smart power) என்ற புதிய தொழில்நுட்பத்தையும் இணைத்துள்ளார்கள். இன்ஜின் கம்பஷன் சேம்பரை, டம்புள்ஸ்போல அமைத்திருக்கிறார்கள். இவை எல்லாம் ஒன்றுசேர்வதால் பழைய ஸ்கூட்டரைவிட இது 10-15% மைலேஜ் அதிகம் தருமாம்.  புதிய ஆக்டிவாவின் அறிமுகம் மட்டுமே நடந்துள்ளது. இது வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் ஆன்ரோடு விலை 80,000 ரூபாய்க்கும் அதிகமாகவே இருக்கும்.

ஹார்லியின் புது பார்ட்னர்

மோட்டார் நியூஸ்

மெரிக்க பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்ஸன், ஆசியச் சந்தைக்காக சிறிய பைக்குகளைச் செய்ய புதிய பார்ட்னரைக் கண்டுபிடித்துவிட்டார்கள். சீன நிறுவனமான `ஸீய்ஜாங் குவின்ஜேங்' மோட்டார் சைக்கிள்தான் ஹார்லியின் புதுக் கூட்டாளிகள்.

இது புதிய நிறுவனம் இல்லை; தற்போது பெனெல்லி பைக்குகளை உருவாக்கும் நிறுவனம் இதுதான். சீன பைக் சந்தையில் இந்த இரண்டு நிறுவனமும் சேர்ந்து, 338சிசி பைக் ஒன்றைத் தயாரித்து 2020-க்குள் விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளார்கள். பைக்கை ஹார்லி டேவிட்ஸன்தான் டிசைன் செய்யப்போகிறது. ஆனால், இந்த பைக்குக்கான உதிரிபாகங்களை வாங்கி, அதைத் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்து, பைக்கை சீனாவில் விற்பனை செய்வதற்கான வேலைகளை எல்லாம் ஸீய்ஜாங் குவின்ஜேங் நிறுவனம்தான் செய்யப் போகிறது. சீனாவைத் தொடர்ந்து பெனெல்லி இருக்கும் மற்ற சந்தைகளிலும் இந்த பைக்கைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாம்.

மோட்டார் நியூஸ்