Published:Updated:

கோல்டுவிங்கில் ஒரு கோல்டன் பயணம்! - சிங்கப்பூர் to தஞ்சாவூர் - 13,000 கி.மீ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோல்டுவிங்கில் ஒரு கோல்டன் பயணம்! - சிங்கப்பூர் to தஞ்சாவூர் - 13,000 கி.மீ!
கோல்டுவிங்கில் ஒரு கோல்டன் பயணம்! - சிங்கப்பூர் to தஞ்சாவூர் - 13,000 கி.மீ!

பயணம்: ஹோண்டா கோல்டுவிங்

பிரீமியம் ஸ்டோரி

ங்காள விரிகுடாவுக்குக் கிழக்காக மலேசிய தீபகற்பத்தின் பாதத்தின் அருகே இருக்கும் ஒரு சிறிய தீவு, `சிங்கப்பூர்’ என்று உருவெடுத்து 200 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும்விதமாக, சிங்கப்பூரில் இருந்து தஞ்சாவூர் வரை 13,000 கி.மீ தூரம் பைக்கில் பயணம் செய்திருக்கிறார்கள் மூன்று நண்பர்கள்.

கோல்டுவிங்கில் ஒரு கோல்டன் பயணம்! - சிங்கப்பூர் to தஞ்சாவூர் - 13,000 கி.மீ!

பயணம் முழுக்க `டாக் ஆஃப் தி டவுன்' ஹோண்டா கோல்டுவிங் பைக்தான். பயணத்தை சென்னையில் முடித்துவிட்டு சிங்கப்பூர் செல்ல, பைக்கைக் கப்பலில் ஏற்றிய கையோடு விமானத்துக்காகக் காத்திருந்த பாலச்சந்திரன், பன்னீர்செல்வம் மற்றும் அருணகிரி மூவரையும் சந்தித்தேன்.

``சிங்கப்பூரை 1819-ல கண்டுபிடிச்சாங்க. இந்தச் சின்னத் தீவுக்கு 200 வருஷ முக்கிய வரலாறு இருக்கு. நம்ம இந்த வருஷத்தைப் பெருசா கொண்டாடணும்னு எங்க நாட்டுப் பிரதமர் கேட்டார். அதனால, நாமதான் கோல்டுவிங் வெச்சிருக்கோமே, பக்கத்துல இருக்கும் நாடுகளைச் சுற்றி வந்தா எப்படி இருக்கும்னு ஒரு ஐடியா யோசிச்சோம். மூணு மாசம் பிளான் போட்டு, செஞ்சி முடிச்சுட்டோம்!’’ என்று பயணம் தொடங்கிய கதையைச் சொல்ல ஆரம்பித்தார் பாலச்சந்திரன்.

கோல்டுவிங்கில் ஒரு கோல்டன் பயணம்! - சிங்கப்பூர் to தஞ்சாவூர் - 13,000 கி.மீ!

``கோல்டுவிங் ஒரு லக்ஸூரி பைக். காரோடு ஒப்பிட்டா, இது ஒரு ரோல்ஸ்ராய்ஸ். இந்த டூரர் பைக்ல யாரும் காடு, மலைனு பயணம் போயிருக்க மாட்டாங்க. நாங்கதான் முதல் ஆளா இருப்போம்னு நினைக்கிறேன். மார்ச் 26, 2019 இந்த ட்ரிப்பை ஆரம்பிச்சோம். முழுப் பயணமும் ரோடு வழியாதான். சிங்கப்பூர்ல இருந்து மலேசியா, தாய்லாந்து, மியான்மார், கெளஹாதி, பூட்டான், பங்களாதேஷ் வழியா நேபாளம் போய், அங்கிருந்து ஜனக்பூர், காட்மாண்டு வழியா திபெத் போனோம். அப்படியே எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் தங்கிட்டு சோனாலி, கோரக்பூர், வாரணாசி வழியா கோவா. அங்கிருந்து கொச்சின் அப்படியே கன்னியாகுமரி. தமிழ்நாட்டுக்கு வந்துட்டு தஞ்சை பெரியகோயில் பார்க்காமப் போக முடியாதே! அதனாலதான் தஞ்சாவூர் வந்தோம். இலங்கைக்குப் போற ஒரு பிளான் இருந்தது. குண்டு வெடிப்பு நடந்ததால, அதை கேன்சல் பண்ணிட்டு பைக்கை சென்னையில கப்பல்ல ஏத்திட்டோம்!’’
 என்று `வ்வ்ர்ர்ரூம்' எனப் பேசினார் அருணகிரி.

மியான்மரில் முதன்முதலாக நுழைந்த ஹோண்டா கோல்டுவிங் இவர்களுடையதுதான். `வித்தியாசமாக இருக்கிறதே' என இந்த பைக்கை மியான்மர் மிலிட்டரியில் செக் செய்தார்களாம். கோல்டுவிங் பைக்கைப் பார்த்துவிட்டு, `இந்த பைக் முதன்முதலாக எங்கள் நாட்டுக்கு வருவதால், உங்களுக்கு வரிவிலக்கு தருகிறோம்’ என்று பூட்டான் அரசு வரி விலக்கு கொடுத்ததாம். நேபாளம், பங்களாதேஷில் நுழைந்த முதல் கோல்டுவிங்கும் இதுதானாம்.

கோல்டுவிங்கில் ஒரு கோல்டன் பயணம்! - சிங்கப்பூர் to தஞ்சாவூர் - 13,000 கி.மீ!

``எவரெஸ்ட் கேம்ப்ல மைனஸ் 3 டிகிரி குளிரையும், ஆக்ராவில் 51 டிகிரி வெயிலையும் இந்தப் பயணத்துல பார்த்துட்டோம். ஒரு இடத்துலகூட மழையைப் பார்க்கல!’’ என்றார் பாலச்சந்திரன்.

``இந்தப் பயணத்துல எங்களுக்குப் பிடிச்ச இடம், பூட்டான். ரொம்ப அமைதியான இடம், லஞ்சம் இல்லை, ஹார்ன்கூட யாரும் அடிக்கிறதில்லை. எல்லோரும் ரொம்பப் பொறுப்பு உணர்ச்சியோடு இருக்காங்க. இந்தப் பயணத்துக்கு, மொத்தம் 15,000 சிங்கப்பூர் டாலர் செலவாச்சு. ஸ்பான்சர் எல்லாம் எதுவுமில்லை. எங்க சொந்த காசுதான். இதுபோல ஒரு அனுபவத்துக்கு எவ்வளவு செலவு செஞ்சா என்ன?’’ என்கிறார் பாலச்சந்திரன்.

``ஒருமுறை மட்டுமே ஆயில் மாற்றினோம். மற்றபடி பைக்கில் வேறு எதையுமே செய்யலை. அப்படியே ஸ்டாக் கண்டிஷனில்தான் கொண்டு வந்தோம். அப்படியேதான் கொண்டு போகிறோம்’’ என்கிறார்கள்.

`பைக்கில் ஒரு சின்னப் பிரச்னைகூட இல்லாமல்... 7 நாடுகள், இந்தியாவில் 18 மாநிலங்கள் என்று இப்படி ஒரு ட்ரிப் எப்படிச் சாத்தியமாச்சு?’ என்று ஹோண்டாவைத் தயாரித்த ஜப்பான்காரர்களே வந்து கேட்டாலும் ஆச்சர்யமில்லை.

- ரஞ்சித் ரூஸோ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு