ஜிக்ஸர் சீரிஸ்... இந்தியாவில் சுஸூகிக்கு மறுவாழ்வு தந்த பைக் இதுதான். 150-160 சிசி செக்மென்ட்டில் பைக் ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்ற ஜிக்ஸர் சீரிஸில், ஃபுல் ஃபேரிங்கொண்ட ஜிக்ஸர் SF பைக்கை மேம்படுத்தியிருக்கிறது சுஸூகி. முந்தைய மாடலைப்போலவே இதுவும் ரைடர்களுக்குக் குதூகலமான அனுபவத்தைத் தருமா?

டிசைன் மற்றும் வசதிகள்

ஜிக்ஸர் 250 பைக்கை நினைவுபடுத்தும் தோற்றத்துடன் இருக்கிறது, புதிய ஜிக்ஸர் SF 155. இதை அருகில் சென்று கவனித்துப் பார்க்கும்போது டூயல் டோன் Gloss கலர்கள், எக்ஸாஸ்ட்டின் க்ரோம் மஃப்ளர், டிஜிட்டல் மீட்டரின் பேக்லிட் எனக் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் தெரிகின்றன. தவிர முந்தைய மாடலில் இருக்கும் அதே அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள், டிஸ்க் பிரேக்ஸ், சிங்கிள் சேனல் ஏபிஎஸ், 12 லிட்டர் பெட்ரோல் டேங்க், சஸ்பென்ஷன், மிரர்கள், ஸ்விட்ச்கள், இண்டிகேட்டர்கள்தாம் இங்கும் இடம் பெயர்ந்திருக்கின்றன. ஆனால், புதிய ஃபுல் பேரிங் - க்ளிப் ஆன் ஹேண்டில்பார் - LED ஹெட்லைட்ஸ் & டெயில் லைட்ஸ் - ஸ்ப்ளிட் சீட் ஆகியவற்றுக்கு ஏற்றபடி ஃபிரேமை மாற்றியமைத்ததில், பழைய பைக்கைவிட புதிய பைக்கின் எடை 6 கிலோ அதிகரித்திருக்கிறது (146 கிலோ). அது ரைடருக்குக் குறையாகத் தெரியாதவிதத்தில் சுஸூகி செமயாக ஸ்கோர் செய்திருக்கிறது. பைக்கின் கட்டுமானத்தரம் மற்றும் ஃபினிஷ் சிறப்பு.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

பழைய மாடலில் இருந்த அதே 154.9சிசி, சிங்கிள் சிலிண்டர், SEP இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்புதான் இங்கேயும். ஆனால், இந்த ஏர் கூல்டு - 2 வால்வ் இன்ஜினின் பவர், 14.8bhp-லிருந்து 14.1bhp ஆகக் குறைந்துவிட்டது. அநேகமாக BS-6 விதிகளுக்கு ஏற்ப இதை மேம்படுத்தியதே இதற்கான காரணமோ? இதனாலேயே இங்கே கார்புரேட்டரின் இடத்தை ஃப்யூல் இன்ஜெக்ஷன் பிடித்துவிட்டது. கிக் லீவரும் மிஸ்ஸிங். இன்ஜின் முன்பைவிட அதிக எடையை இழுக்க வேண்டும் என்ற நேரத்தில், இந்தப் பவர் குறைபாடு மைனஸாக இருக்குமோ என்றே தோன்றியது. ஆனால் இந்த எண்ணம், டெல்லியில் உள்ள புத் ரேஸ் டிராக்கில் பைக்கை ஓட்டியபோது முற்றிலும் தவிடுபொடியானது. முன்பைப்போலவே ஆரம்பகட்ட மற்றும் மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸில் அசத்துகிறது ஜிக்ஸர் SF 155.

ஓட்டுதல் அனுபவம்

`வழக்கமான 150சிசி பைக் ஒன்றை, டெல்லியின் புத் ரேஸ் டிராக்கில் ஓட்டுவது போரடிக்கும்’ என்ற எண்ணம் இருந்தால், அதை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். எப்படி, யமஹாவின் YZF-R15 V3.0 கையாளுமையில் புதிய அத்தியாயத்தை எழுதியதோ, அதைப் பின்தொடர்ந்து வருகிறது ஜிக்ஸர் SF 155.

தடிமனான சென்டர் டியூப் - பலமான ஸ்டீயரிங் பகுதி மற்றும் சஸ்பென்ஷன் மவுன்ட் என ஃபிரேம் முன்னேற்றங்கள், பைக்கின் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்துக்கு வலுச்சேர்க்கின்றன. க்ளிப் ஆன் ஹேண்டில்பார் காரணமாக, ரைடிங் பொசிஷன் கொஞ்சம் ஸ்போர்ட்டி ஆகியிருக்கிறது. ஜிக்ஸர் 250 உடன் ஒப்பிடும்போது இந்த பைக்கின் சஸ்பென்ஷன் செட்-அப் மென்மையாக இருந்தாலும், ரேஸ் டிராக்கில் பைக்கின் கையாளுமை நன்றாகவே இருந்தது. ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட மாடல்போலவே இங்கும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் இருக்கிறது. டிஸ்க் பிரேக்குகளின் ஃபீட்பேக், நெருக்கடிமிக்க நகரச் சாலைகளுக்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால், வேகமான நெடுஞ்சாலைகளில் இன்னும் கொஞ்சம் ஷார்ப்னெஸ் வேண்டும்.

முதல் தீர்ப்பு

புதிய ஜிக்ஸர் SF 155 பைக்கின் எடை மற்றும் வசதிகள் அதிகமாகியிருப்பதைப் போலவே, விலையும் கணிசமாக அதிகரித்து விட்டது. சென்னை எக்ஸ்-ஷோரூம் விலையான 1.11 லட்சம் ரூபாய்க்குக் கிடைக்கும் இது, முன்பைவிட 8,000 ரூபாய் அதிகம்! இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிமுகமான ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 200S பைக்கைவிட இது 11,000 ரூபாய் அதிகம். எனவே என்னதான் முன்பைவிட டிசைன், வசதிகள் ஆகியவற்றில் எகிறியடித்தாலும், அதற்காக ரைடர் கொடுக்க வேண்டிய விலை கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது. ஒருகாலத்தில், `விலை குறைவான ஃபுல் ஃபேரிங் கொண்ட பைக்’ என்ற பெருமையைத் தன்வசம் வைத்திருந்த ஜிக்ஸர் SF 155, அதை ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 200S-இடம் இழந்து நிற்கிறது.

தொகுப்பு: ராகுல் சிவகுரு;