Published:Updated:

நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 7

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 7
நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 7

ஸ்ட்ரீட் ரேஸ் வேண்டாம்... சாம்பியனே ஆகலாம்!சுதாகர்

பிரீமியம் ஸ்டோரி

சென்ற மாதம், கிட்டத்தட்ட 110-க்கும் மேற்பட்ட ஸ்ட்ரீட் ரேஸர்களைக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. அவர்கள் அனைவருக்குமே 20 வயது நிறைவடையவில்லை. இன்னும் அதிர்ச்சியான விஷயம், அவர்களில் சிலருக்கு லைசென்ஸ் எடுக்கும் வயதுகூட இல்லை. அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பைக்குகள் எல்லாமே மாடிஃபை செய்யப்பட்டவை.

நீங்களும் ரேஸர் ஆகலாம்! - தொடர் - 7

இந்த ஸ்ட்ரீட் ரேஸர்கள் எப்படி உருவாகிறார்கள்?

பள்ளி வயதிலேயே பைக் ஓட்டும் மாணவர்கள் செட் சேர்ந்துவிடுகிறார்கள். இதில் தப்பில்லை. ஆனால் இவர்கள் கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கும் முன்பே ``மச்சி, யார் ஃபர்ஸ்ட் வீட்டுக்குப் போறாங்கன்னு பாப்போமா?’’ என்று சொல்லி சாலைகளில் வேகமாக பைக் ஓட்டத் துவங்குகிறார்கள். இங்கே தொடங்குகிறது இவர்களின் ஸ்ட்ரீட் ரேஸ் ஆர்வம்.

. `ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ்’ படங்களில் வருவதுபோல், இவர்களாக ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்து ரேஸ் நடத்துகிறார்கள். இதில் டிராஃபிக், ஆள் நடமாட்டம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அதையெல்லாம் தாண்டி வெற்றி பெறுவதில்தான் இவர்களுக்கு கிக்!

ECR, பெசன்ட் நகர் சாலை, OMR, மெரினா போன்ற இடங்கள்தான் இவர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பவை. இவர்களில் சிக்கிய ஸ்ட்ரீட் ரேஸர்களில் ஒருவரின் வாக்குமூலத்தைக் கேட்டு நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்.

``சார், என் ஆளுக்கு பைக் ஓட்டுறதுன்னா ரொம்பப் பிடிக்கும். இந்த ரேஸ்ல ஜெயிச்சாதான் என்னை லவ்  பண்ணுவேன்னு சொல்லிட்டா! அதான் இதுல கலந்துக்கிட்டேன்’’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் ஒரு இளைஞன். சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு பைக் மீது ஆர்வம் வந்தால் அந்த ஆர்வத்தை சரியான திசையில் மடைமாற்ற வேண்டும். சிறு வயதிலேயே பைக் ஓட்டுவது திறமைதான். ஆனால், அது சட்டப்படி தவறு. எனக்குத் தெரிந்தே சிலர் தங்கள் குழந்தைகள் சாலை களில் கார் ஓட்டுவதாகப் பெருமை அடித்துக் கொள்வதைக் கேட்டிருக்கிறேன். மற்றவர்களுக்குத் தொந்தரவு தரக்கூடிய எந்த விஷயமும் ஆபத்தான, சட்டத்துக்குப் புறம்பான விஷயமேயன்றி பெருமைப்படக்கூடியதல்ல.

என்ன செய்ய வேண்டும்?


எல்லோருக்குள்ளும் ஒரு ரேஸர் இருப்பான். எல்லோருக்கும் வேகம் பிடிக்கும். ஆனால், அதை எங்கே வெளிப்படுத்தவேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. ஆர்வமுள்ளவர்களை வளத்தெடுக்கத்தான் ஒவ்வொரு பைக் நிறுவனமும் சின்னச் சின்ன ரேஸ்களை நடத்துகிறார்கள். ரேஸ் தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் ஈவென்ட்டுகளையும் சில கம்பெனிகள் நடத்துகின்றன.

கேடிஎம் நடத்தும் `ஆரஞ்சு டே’ (www.ktm.com), பஜாஜ் நிறுவனம் நடத்தும் `ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு’ (https://www.bajajauto.com/rides-and-events#festival-of-speed), டிவிஎஸ் நடத்தும் அப்பாச்சி ரேஸிங் எக்ஸ்பீரியன்ஸ் (https://www.tvsracing.com/tvs-apache-racing-experience.aspx), யமஹா நடத்தும் `Call of the Blue’ (https://www.yamaha-motor-india.com/thecalloftheblue-campaign.html) இவையெல்லாம் சரியான ஆப்ஷன்கள். இதற்கு உங்களிடம் பணமோ, வேறு வசதிகளோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

`ஆரஞ்சு டே’ என்றால், உங்களிடம் ஒரு கேடிஎம் பைக்கும், டிரைவிங் லைசென்ஸும் இருந்தால் போதும். ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடுக்கு, ஒரு பல்ஸர் பைக்குக்கு உரிமையாளராக இருந்தால் போதும். டிவிஎஸ் ரேஸுக்கு, அப்பாச்சி பைக் போதும். இவையெல்லாம் ரேஸ் டிராக்கில் இல்லாமல் தனியாக ஒரு டிராக்கில், மைதானத்தில் நடத்தப்படும் அங்கீகரிக்கப்பட்ட ரேஸ்கள். இதுபோக, JK டயர் நடத்தும் `டிராக் மீட்’, MMSC நடத்தும் 200 மீட்டர் ஸ்ட்ரெய்ட் ரேஸ் இவற்றிலும் முயற்சி செய்யலாம். இதற்கு மட்டும் FMSCI லைசென்ஸ் அவசியம்.

இதற்கான வலைதளங்களில் சென்று உங்கள் பெயரைப் பதிவுசெய்து, அதிகம் செலவில்லாமல் உங்கள் ரேஸ் ஆர்வத்தைத் தணித்துக் கொள்ளலாம். எனக்குத் தெரிந்து சில ஸ்ட்ரீட் ரேஸர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து, இப்போது ரேஸிங் சாம்பியன்களாகவே வலம்வருகிறார்கள். ஸ்ட்ரீட் ரேஸ் பிரியர்களை மீட்டெடுப்பது, ஒருவகையில் குடிப்பழக்கத்திலிருந்து குடிகாரர்களை மீட்டெடுப்பது போன்ற ரிஸ்க்கான டாஸ்க்தான். ஆனால், அதற்கான வழிகள் இல்லாமல் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

- (வ்வ்ர்ர்ரூம்)

(தொகுப்பு: தமிழ்);  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு