Published:Updated:

160 கிமீக்கு மேல் பறக்கும் பைக்ஸ்!

160 கிமீ வேகத்தை அடையும் பைக்
பிரீமியம் ஸ்டோரி
160 கிமீ வேகத்தை அடையும் பைக்

இந்த மாத ‘டாப்-5’-ல், குறைந்த பட்ஜெட்டில் 160 கிமீ வேகத்தை அடையும் பைக்குகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

160 கிமீக்கு மேல் பறக்கும் பைக்ஸ்!

இந்த மாத ‘டாப்-5’-ல், குறைந்த பட்ஜெட்டில் 160 கிமீ வேகத்தை அடையும் பைக்குகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

Published:Updated:
160 கிமீ வேகத்தை அடையும் பைக்
பிரீமியம் ஸ்டோரி
160 கிமீ வேகத்தை அடையும் பைக்

கிரிக்கெட்டில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும், இன்றளவும் பாகிஸ்தானின் சோயப் அக்தரை நாம் நினைவு கொள்ளக் காரணம், அவர் தொடர்ந்து மணிக்கு 100 மைல் வேகத்தில் பந்து வீசியதால்தான். 100mph வேகம் என்பது கிமீ-க்கு வருகையில் 160 km/h ஆகிறது. எனவே இந்த மாத ‘டாப்-5’-ல், குறைந்த பட்ஜெட்டில் 160 கிமீ வேகத்தை அடையும் பைக்குகளைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

பஜாஜ் டொமினார் 400
பஜாஜ் டொமினார் 400

பஜாஜ் டொமினார் 400

(2.59 லட்சம்*)

கொடுக்கும் காசுக்கு மதிப்பைத் தருவதில் பஜாஜை அடிச்சிக்க முடியாது. அந்த வகையில் இந்த லிஸ்ட்டிலும் விலை குறைவான பைக்காக உள்ளது பஜாஜின் டொமினார் 400. ராயல் என்ஃபீல்டின் க்ளாஸிக்குக்குப் போட்டியாக இந்த பவர் க்ரூஸர், நெடுஞ்சாலையில் 165kmph வேகத்தை அடைகிறது. BS-6 மாடலில் புதிய அம்சங்கள், 2022 மாடலில் டூரிங் கிட் எனத் தொடர்ந்து டொமினரை அப்டேட்டாகவே வைத்துள்ளது பஜாஜ்.

ப்ளஸ்: வசதியான ரைடிங் பொசிஷன், விலை

மைனஸ்: நேக்கட் என்பதால் காற்று அறைந்து கொண்டே இருக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி RR 310
டிவிஎஸ் அப்பாச்சி RR 310

டிவிஎஸ் அப்பாச்சி RR 310

(2.99 லட்சம்*)

ஜெர்மனியின் BMW உடன் கூட்டணி வைத்து உருவாக்கப்பட்ட 312 cc இன்ஜின் கொண்ட பைக்தான் அப்பாச்சி RR 310. இதே இன்ஜின் தான் ஓசூரில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ஏற்றுமதியாகும் BMW 310 பைக்குகளிலும் இருப்பது கூடுதல் சிறப்பு. 160 km டாப் ஸ்பீடை அடையும் RR 310, டிராக் ரேஸிங் மற்றும் ரோடு டூரிங் என இரண்டுக்கும் ஏற்றதாக உள்ளது. தனது ஃபிளாக்ஷிப் பைக் என்பதால், ரைடிங் மோடு, அட்ஜஸ்ட்டபிள் சஸ்பென்ஷன் மற்றும் பல அம்சங்களைச் சேர்த்து RR 310-ஐ அப்டேட்டாக வைத்துள்ளது டிவிஎஸ்.

ப்ளஸ்: டிசைன், விலை

மைனஸ்: ஆஃப்டர் சேல்ஸ் சர்வீஸ்

KTM RC 390 ஜென் 1
KTM RC 390 ஜென் 1

KTM RC 390 ஜென் 1

(3.28 லட்சம்*)

2014 - ல் அறிமுகப்படுத்தப்பட்ட KTM RC390 தான், இந்த லிஸ்ட்டில் மிகவும் பழைய பைக். இதன் 373 சிசி இன்ஜின் 169 கிமீ டாப் ஸ்பீடை அடைவதால், இன்றளவும் RC-க்கு எனத் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 2017-ல் BS-4-க்கு அப்டேட் செய்யும்போது ஸ்லிப்பர் கிளட்ச், ரைட் - பை - ஒயர் சிஸ்டம் ஆகியவற்றைச் சேர்த்து 2.25 லட்சம் என்னும் எக்ஸ்-ஷோரூம் விலைக்கு இதை விற்பனைக்குக் கொண்டு வந்தது KTM. அதன் பின்னர் பெரிய மாற்றங்கள் இல்லாத போதிலும், தற்போது 2.77 லட்சதை எட்டியுள்ளது. இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் 2022 மாடல் வெளியாகும்போது, அது ஜென் 1 மாடலை விட சுமார் 20,000 ரூபாய் விலை அதிகமாக இருக்கும். எனவே, ரேஸ் டிராக்கில் பயன்படுத்தக்கூடிய வகையில் அதிக பவர் கொண்ட பைக் வேண்டும் என்பவர்கள், KTM டீலர்ஷிப்புக்கு விரைந்திடுங்கள்.

ப்ளஸ்: டிசைன், பவர்

மைனஸ்: இன்ஜின் சூடு, ஸ்டிஃப் சஸ்பென்ஷன்

KTM டியூக் 390
KTM டியூக் 390

KTM டியூக் 390

(3.38 லட்சம்*)

விலை சற்றே அதிகமாக இருந்தாலும், இந்த லிஸ்ட்டில் எடை குறைந்த பைக் டியூக் 390 தான். 44bhp இன்ஜின், 167 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 271.7 bhp / டன் என்ற அளவில் செக்மென்ட்டிலேயே சிறந்த power to weight ratio-வைப் பெறுகிறது. எனவே 167 கிமீ டாப் ஸ்பீடை அடைய, லிஸ்ட்டின் மற்ற பைக்குகளை விட குறைந்த நேரமே எடுத்துக் கொள்கிறது.

ப்ளஸ்: பவர், சிறப்பம்சங்கள்

மைனஸ்: விலை

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650

(3.36 லட்சம்*)

இந்த லிஸ்ட்டில் ட்வின் சிலிண்டர் இன்ஜினைக் கொண்டிருக்கும் ஒரே பைக்கான ராயல் என்ஃபீல்டின் இன்டர்செப்டர் 650 தான், இந்தியாவின் விலை குறைவான ட்வின் சிலிண்டர் பைக். இதன் 648 சிசி ஆயில் கூல்டு என்ஜின் வெளிப்படுத்தும் 52 Nm டார்க், அதிகபட்சமாக 170 km/h வேகத்தை அடைய உதவுகிறது.

ப்ளஸ்: ட்வின் சிலிண்டர், ட்வின் எக்ஸாஸ்ட் பீட்

மைனஸ்: மிஸ்ஸிங் சிறப்பம்சங்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism