Published:Updated:

20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எப்படி எரிந்தன? சுட்டெரிக்கும் வெயில்தான் காரணமா அல்லது பேட்டரியா?

EV Scooters catch up in fire

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பதில் பேட்டரிகளின் பங்கும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. தரம் குறைந்த லித்தியம் அயன் பேட்டரிகள், BMS சிஸ்டம், FRP எனும் பேட்டரி பாக்ஸ் சீட்கள், Kapton டேப்கள் என்று பேட்டரியிலும் இவ்வளவு விஷயம் இருக்கா!

20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எப்படி எரிந்தன? சுட்டெரிக்கும் வெயில்தான் காரணமா அல்லது பேட்டரியா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பதில் பேட்டரிகளின் பங்கும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. தரம் குறைந்த லித்தியம் அயன் பேட்டரிகள், BMS சிஸ்டம், FRP எனும் பேட்டரி பாக்ஸ் சீட்கள், Kapton டேப்கள் என்று பேட்டரியிலும் இவ்வளவு விஷயம் இருக்கா!

Published:Updated:
EV Scooters catch up in fire
அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கலாமா என்கிற பெரிய கேள்விக்குறியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தன. இந்த மாதத்தில் சென்னை, புனே, வேலூர் என்று இதுவரை மொத்தம் 5 சம்பவங்கள் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். இப்போது புனேவில் நாசிக்கில் ஏற்பட்டிருக்கும் சம்பவம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மேல் ஒரு விரக்தியான பயத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

ஜிதேந்திரா இவி எனும் நிறுவனம், இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் முக்கியமான மொபிலிட்டி நிறுவனங்களில் ஒன்று. குறைந்த விலை ஸ்கூட்டர்களைத் தயாரிப்பதில் ஜிதேந்திரா எலெக்ட்ரிக் பெயர் போன நிறுவனம். நாஸிக்கில் உள்ள இந்த நிறுவனத்தின் தயாரிப்புத் தொழிற்சாலையில் இருந்து மொத்தம் 40 ஸ்கூட்டர்களை ஒரு ட்ரக்கில் ஏற்றியிருக்கிறார்கள். அது பெங்களூருவுக்குச் செல்ல வேண்டிய கன்டெய்னர் ட்ரக். இதன் அப்பர் டெக்கில் 20 ஸ்கூட்டர்களும்; லோயர் டெக்கில் 20 ஸ்கூட்டர்களும் ஏற்றபட்டிருந்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு மதிய நேரத்தில் திடீரென அந்த ட்ரக்கில் உள்ள ஸ்கூட்டர்கள் ‘டமார் டமார்’ என வெடித்து மளமளவெனத் தீப்பிடிக்க ஆரம்பிக்க… அந்த ஏரியாவே களேபரமானது. உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தபோது, அப்பர் டெக்கில் உள்ள 20 ஸ்கூட்டர்களும் எரிந்து போயிருந்தன. கீழே உள்ள ஸ்கூட்டர்களுக்கு நல்லவேளையாக தீ பரவவில்லை என்பது ஆறுதல். அதைவிட ஆறுதல், இதில் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதுதான்.

‘எப்படி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்து போகின்றன’ என்ற மத்திய அரசின் கேள்விக்கு ஏற்கெனவே ஓலா, ஒக்கினாவா, ப்யூர் போன்ற நிறுவனங்கள் இன்னும் பதில் தேடிக் கொண்டிருக்கின்றன.

சென்ற மாதம் வேலூரில் நடந்த ஒக்கினாவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்தின்போது தந்தை - மகள் பலியான துயரச் சம்பவம் தொடர்பாக இப்படிச் சொல்லியிருந்தது ஒக்கினாவா. ‘‘எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள், தரமான பேட்டரி தயாரிப்பை ஸ்கூட்டரில் பொருத்துவதைக் கடைப்பிடித்து வருகிறோம். இருந்தாலும், இவி ஸ்கூட்டர்களின் சார்ஜிங் கைடுலைன்கள் மற்றும் சரியான பயன்பாடு போன்றவற்றில் மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும்!’’ என்று தனது ஸ்டேட்மென்ட்டில் விளக்கம் அளித்திருந்தது.

புனேவில் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த ஓலா ஸ்கூட்டர் எரிந்து போனது தொடர்பாக, ஓலா இன்னும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அதேபோன்று ப்யூர் மொபிலிட்டி நிறுவனமும் தனது ஸ்கூட்டர் எரிந்ததற்கான பின்புலத்தை இன்னும் சொல்லாத நிலையில், ஓலா மற்றும் ஒக்கினாவா போன்ற நிறுவனங்களின் டெக்னிக்கல் குழுவுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்த முடிவெடுத்துள்ளது. ‘‘எங்களது 20 ஸ்கூட்டர்கள் எப்படித் தீப்பிடித்தன; இதற்கான மூலகாரணம் என்ன என்பதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்’’ என்று சொல்லியிருக்கிறார் ஜிதேந்திரா நிறுவனத்தின் தொடர்பு அதிகாரி.

தரம் வாய்ந்த LFP பேட்டரிகள்
தரம் வாய்ந்த LFP பேட்டரிகள்

எரிந்து கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சம்பவங்கள் தொடர்பாக லோக் சபாவிலும் சூடான விவாதமாகப் போய்க் கொண்டிருக்கின்றன.

‘‘இது மிகவும் சீரியஸான விஷயம். புனே, திருச்சி, சென்னை, வேலூர் போன்ற ஒவ்வொரு விபத்துகளின் பின்னணியையும் அறிந்து கொள்ள தனித்தனி விசாரணை நடக்க வேண்டும். மேலும், சுட்டெரிக்கும் இந்த வெயில்தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பதற்குக் காரணமா அல்லது தரம் குறைந்த பேட்டரிகள்தான் இதற்குக் காரணமா என்பதையும் ஆராய்ந்து அதற்கேற்ற தீர்வை எடுக்க வேண்டும்!’’
மத்தியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெயில், பேட்டரி என்று இரண்டையும் இந்தச் சம்பவங்களில் காரணமாகச் சொல்லலாம். காரணம், நம் ஊர்களில் தயாரிக்கப்படும் ஸ்கூட்டர்களில் லித்தியம் அயன் பேட்டரிதான் பயன்படுத்துகிறார்கள். இதில் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் NMC (Nickel Manganese Cobalt) எனும் பேட்டரி செல் கலவையைப் பயன்படுத்துகிறார்கள். இவை 150 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரைதான் தாங்கக் கூடிய சக்தி கொண்டவை. ‘எந்திரன்’ படத்தில் ரோபோ ரஜினி ஒரு தீ விபத்தில் எரிவாரே… அதே தன்மை என்று வைத்துக் கொள்ளலாம். அதாவது, சில குறிப்பிட்ட டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாண்டும்போது, அதிலுள்ள ஆசிட்களில் லீக்கேஜ் ஏற்படும்போது, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன. நம் ஊரில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தாலும், தொடர்ந்து அவை வெயிலில் நிறுத்தப்படும்போது, வெப்பநிலையைத் தாங்க முடியாமல் வெடிக்கின்றன. கடுமையான வெப்பநிலையைத் தாங்குவதற்காகவே டெஸ்லா போன்ற நிறுவனங்கள், LFP அல்லது LiFePO4 (Lithium Ion Phosphate) என்று சொல்லக்கூடிய காஸ்ட்லி பேட்டரி செல்களைப் பயன்படுத்துகின்றன. இவை 250 டிகிரிக்கும் மேற்பட்ட செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கக் கூடியவை.

EV scooter Fire
EV scooter Fire

லித்தியம் அயன் பேட்டரிகளைவிட விலை குறைந்தவை லெட் ஆசிட் பேட்டரிகள். இன்னும் ஹீரோ போன்ற நிறுவனங்களின் குறைந்த விலை மாடல் ஸ்கூட்டர்களில் லெட் ஆசிட் பேட்டரிகள்தான் இருக்கின்றன. இவற்றின் சார்ஜிங் சைக்கிள் என்று சொல்லக்கூடிய காலம் 900; அதாவது, 900 முறை சார்ஜ் போட்டுப் பயன்படுத்தலாம். இதுவே லித்தியம் அயன் பேட்டரிகளின் சார்ஜிங் சைக்கிள் –1,200 தடவை. இதுவே லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரிகள் 2,000 சார்ஜிங் சைக்கிள் கொண்டவை. இதில் 100 சதவிகிதம் பாதுகாப்பு கொண்டவை LFP பேட்டரிகள். இதில் சில தரம் வாய்ந்த Super B Lithium Ion Phosphate போன்ற பேட்டரிகள் 5,000 சார்ஜிங் சர்க்கிள்கள் கொண்டவை.

நம் ஊர் லித்தியம் அயன் பேட்டரிகளின் 'Battery Management System' என்று சொல்லக்கூடிய BMS–களின் தரக்கட்டுப்பாட்டு அளவும் குறைவாகவே இருப்பதாகச் சொல்கிறார்கள் எக்ஸ்பெர்ட்கள். மேலும் பேட்டரிகளின் FRP எனும் பேட்டரி பாக்ஸ் சீட்கள், Kapton எனும் லித்தியம் அயனுக்கான டேப்கள் போன்றவற்றிலும் நமது பேட்டரித் தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்தாததும் முக்கியமான காரணம் என்கிறார்கள்.

என்னதான் சார்ஜிங் கைடுலைன்கள், பயன்பாடு என்று மக்களின் விழிப்புணர்வைக் காரணம் சொன்னாலும், பேட்டரித் தயாரிப்பாளர்களின் தரமும் விபத்துகளைத் தடுப்பதில் முக்கியப் பங்காற்றுகிறதுதானே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism