சார்லஸ் > என்.விவேக்

சென்னையைப் பொறுத்தவரை அண்ணா நகரில் இருக்கும் அமீனின் 'மோட்டோ 46’ வொர்க் ஷாப்தான்

சூப்பர் பைக் வாடிக்கையாளர்களின் புனித ஸ்தலம். இந்தியா முழுவதும் இருந்தும் ஆர்-1, ஹோண்டா சிபிஆர், எம்வி அகுஸ்ட்டா என அத்தனை பைக்குகளும் இங்கேதான் சர்வீஸ் செய்யப்படுகின்றன. நடிகர் அஜீத், டிடிகே குழுமத்தின் டி.டி.வரதராஜன் முதல் பல்வேறு சூப்பர் பைக் உரிமையாளர்களும் 'மோட்டோ 46’ வாடிக்கையாளர்கள்.

லேப் டாப்பை யமஹா ஆர்-1 பைக்குடன் இணைத்து பைக்கை ட்யூன் செய்து கொண்டு இருந்தார் ஹை-டெக் ட்யூனர் அமீன். ''எந்த சூப்பர் பைக்காக இருந்தாலும் உங்களிடம்தான் சர்வீஸுக்கு வருகிறது. நீங்கள் சூப்பர் பைக் ட்யூனரானது எப்படி?'' என்கிற கேள்வியை லேப் டாப்பைத் தட்டியபடியே எதிர்கொண்டார் அமீன்.

''என்னுடைய அப்பா எழும்பூர் ஹால்ஸ் ரோட்டுல சர்வீஸ் சென்டர் வெச்சிருந்தார். நான், காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருக்கும்போதே சர்வீஸுக்கு வர்ற பைக்குகளை எல்லாம் எடுத்து வேலை செய்வேன். முதல் தடவையா நான் சர்வீஸ் செய்த பைக் யமஹா ஆர்எக்ஸ்-100.

எண்பது தொண்ணூறுகளில் ரேஸ் ஓட்டி இருக்கேன். அப்போது யமஹா ஆர்டி-350 பைக்தான் செம ஃபேமஸ்! அதுல ஓட்டி பல ரேஸ்ல ஜெயிச்சவன். ஆர்டி-350 பைக்ல ரேஸ் ஓட்டியதுனாலதான் அந்த பைக்கோட அத்தனை விஷயங்களும் அத்துப்படி ஆச்சு. படிப்படியா சூப்பர் பைக்குகளும் சென்னைக்கு வர... நானும் அதோட தொழில்நுட்பத்தைக் தெரிஞ்சுகிட்டு வேலை பார்த்தேன். நான் முதல்ல சர்வீஸ் செஞ்ச பைக் சுஸ¨கி கட்டானா. 750 சிசி இன்ஜின் இருக்கிற இந்த பைக்தான் நான் சர்வீஸ் செஞ்ச முதல் சூப்பர் பைக்!''

''இப்போது யமஹா சர்வீஸ் சென்டர் சென்னையிலேயே இருக்கிறது. வாடிக்கையாளர்கள் அங்கே செல்லாமல் உங்களைத் தேடி வருவது ஏன்?''

''சூப்பர் பைக்குகளோட விலை 12 முதல் 15 லட்சம் ரூபாய் வரை ஆகுது. இந்த பைக்குகளை வாங்குறவங்க நிச்சயம் பெரிய அந்தஸ்தில் இருக்குறவங்கதான். அவங்களுக்கு, சர்வீஸ் சென்டரில் இருக்கிற இன்ஜினீயரைவிட நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கும். பைக்கில என்னென்ன பிரச்னை, எதையெல்லாம் மாத்தணும்னு அவங்களே சொல்லிடுவாங்க. அதில்லாம, தன்னோட பைக்கில என்னனென்ன வேலை செய்றாங்கங்கிறதை நேரடியாகப் பார்க்கணும்னு நினைப்பாங்க. அந்த சுதந்திரம் கம்பெனி சர்வீஸ் சென்டர்ல கிடைக்காது!''

''சூப்பர் பைக்குகளை சர்வீஸ் செய்ய எவ்வளவு ரூபாய் செலவாகும்?''

''அது வேலையைப் பொறுத்தது. ஆயில் மாற்றி, ஜெனரல் சர்வீஸ் செய்ய நான் ஐந்தாயிரம் ரூபாய் வாங்குறேன். ஸ்பேர் பார்ட்ஸ் மாத்தி, ட்யூனிங்கெல்லாம் செய்யணும்னா கூடுதலா செலவாகும்!''

''வாடிக்கையாளர்களை எப்படித் தக்க வைத்துக் கொள்கிறீர்கள்?''

''சூப்பர் பைக் கஸ்டமர்களைப் பொறுத்த வரைக்கும் அவங்களை ஏமாத்த முடியாது; பொய்

சொல்லவும் முடியாது. நாம என்ன வேலை செய்றோம்; எந்த வேலைக்கு எவ்வளவு செலவாகும்னு எல்லாமே அவங்களுக்குத் தெரியும். இந்தத் தொழிலில் முக்கியமே வெளிப்படையான அணுகுமுறைதான். இங்கே ஒளிச்சு வைக்க ஒண்ணுமில்லை. 'இதுதான் வேலை. இதுதான் சர்வீஸ் சார்ஜ்’ அப்படின்னு வெளிப்படையா சொல்லி, நாணயமாக இருந்தாலே போதும்; தேடி வருவாங்க.

சூப்பர் பைக் வெச்சிருக்குறவங்க பெரும்பாலும் பைக் ஆர்வலர்களாக இருப்பாங்க. நமக்கே நிறைய விஷயங்களை அவங்க கத்துத் தருவாங்க. பெரும்பாலான சமயங்களில ட்யூனர் - கஸ்டமர் ரெண்டு பேரும் சேர்ந்து வேலை பார்ப்போம். ஈகோ எல்லாம் கிடையாது.

நடிகர் அஜீத் பைக் வெச்சிருந்தப்போ, ராத்திரி முழுக்க சர்வீஸ் சென்டர்ல உட்கார்ந்து பைக்கை ரெடி செஞ்சுட்டுத்தான் கிளம்புவார். பல சமயங்கள்ல அவர் மெக்கானிக் ஷெட்டிலேயே படுத்துத் தூங்கியும் இருக்கிறார். அவருக்கு பைக் அவ்வளவு பிடிக்கும். இது மாதிரியான பைக் காதலர்கள்தான் என்னோட கஸ்டமர்கள். அதனால, டியூனர் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாகவே போகுது!''