Published:Updated:

பியாஜியை நெருங்கும் மெலாண்ட்ரி!

பியாஜியை நெருங்கும் மெலாண்ட்ரி!

பியாஜியை நெருங்கும் மெலாண்ட்ரி!

பியாஜியை நெருங்கும் மெலாண்ட்ரி!

Published:Updated:
பியாஜியை நெருங்கும் மெலாண்ட்ரி!
 ##~##

ன்னும் இரண்டு ரேஸ்களே மீதம் இருக்கும் நிலையில், பரபரப்பான திருப்பங்களை நோக்கி வேகம் எடுத்திருக்கிறது வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ். ஏப்ரில்லாவின் மேக்ஸ் பியாஜி, பிஎம்டபிள்யூவின் மார்க்கோ மெலாண்ட்ரி, கவாஸாகியின் டாம் சைக்ஸ் என சாம்பியன் பட்டத்துக்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாஸ்கோ

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் 11-வது சுற்று ஆகஸ்ட் 26-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற டுகாட்டியின் கார்லோஸ் செக்கா, முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார். கவாஸாகியின் டாம் சைக்ஸ் இரண்டாவது இடத்தில் இருந்தும், ஏப்ரில்லாவின் யூஜின் லாவெர்ட்டி மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள். ஏப்ரில்லாவின் மேக்ஸ் பியாஜி ஏழாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

ரேஸ்-1

ரேஸ் துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக மழை பெய்ததால், ஈரமான தரையிலேயே ரேஸ் துவங்கியது. ரேஸ் ஆரம்பித்ததுமே லீட் எடுத்து முன்னோக்கிப் பறந்தார் கவாஸாகியின் டாம் சைக்ஸ். ஆக்ரோஷமாக ரேஸ் ஓட்டிய டாம் சைக்ஸுடன் யாராலும் போட்டி போட முடியவில்லை. இதற்கிடையே, பின்னால் வந்த பலரும் விபத்தில் சிக்கி ரேஸை விட்டு வெளியேறிக்கொண்டே இருந்தனர். முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய கார்லோஸ் செக்கா, மூன்றாவது லேப்பில் ஜோனத்தன் ரியாவின் பைக்கில் மோத... இருவருமே ரேஸில் இருந்து வெளியேறினர். இதற்கிடையே 25 லேப்புகள் கொண்ட இந்த ரேஸை, எந்தவித போட்டியும் இன்றி முதல் இடத்தில் முடித்தார் டாம் சைக்ஸ். மார்க்கோ மெலாண்ட்ரி இரண்டாம் இடத்தையும், மேக்ஸ் பியாஜி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

பியாஜியை நெருங்கும் மெலாண்ட்ரி!

ரேஸ்-2

இரண்டாவது ரேஸிலும் டாம் சைக்ஸ் ஆக்ரோஷமாகப் பறக்க, அவருக்கு முட்டுக்கட்டை போட்டார் மார்க்கோ மெலாண்ட்ரி. முதல் இரண்டு இடங்களுக்குக் கடுமையான போட்டி இருக்க, பத்தாவது லேப்பின்போது மூன்றாவது இடத்தில் இருந்த மேக்ஸ் பியாஜிக்கும், லியான் ஹஸ்லாமுக்கும் முட்டிக் கொண்டது. இருவரின் பைக்கும் ஒன்றோடு ஒன்று மோத... ரேஸில் இருந்து இருவருமே வெளியேறினர். 13-வது லேப்பின்போது சைக்ஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்துக்கு முன்னேறிவிட்டார் மார்க்கோ மெலாண்ட்ரி. அதன் பிறகு டாம் சைக்ஸ் எவ்வளவோ முயன்றும் மெலாண்ட்ரியை முந்த முடியவில்லை. மெலாண்ட்ரி வெற்றி பெற, டாம் சைக்ஸ் இரண்டாவது இடத்தையும், டேவியஸ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ஜெர்மனி!

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் 12-வது சுற்று, ஜெர்மனியின் நர்பர்கிரிங் ரேஸ் மைதானத்தில் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கினார் ஏப்ரில்லா அணியின் மேக்ஸ் பியாஜி. கவாஸாகியின் டாம் சைக்ஸ் இரண்டாவது இடத்தில் இருந்தும், மார்க்கோ மெலாண்ட்ரி மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

பியாஜியை நெருங்கும் மெலாண்ட்ரி!

ரேஸ்-1

முதலிடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய மேக்ஸ் பியாஜி எல்லோருக்கும் தண்ணி காட்டினார். ஆரம்பம் முதலி சீறிப் பறந்த பியாஜியின் ஏப்ரில்லா. கவாஸாகியின் டாம் சைக்ஸின் வேகம் நர்பர்கிரிங்கில் எடுபடவில்லை. மொத்தம் 20 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில், மேக்ஸ் பியாஜி இரண்டாம் இடத்தில் வந்த யூஜின் லாவெர்ட்டியை 3 விநாடிகளில் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றார். சாஸ் டேவியஸ் மூன்றாவது இடம் பிடித்தார்.

ரேஸ்-2

பார்க்கிங்கே எம்டிசி ரேஸிங் அணியைச் சேர்ந்த சாஸ் டேவியஸ், தனது ஏப்ரில்லா ஆர்விஎஸ்வி-4 பைக்கின் மூலம் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார். தனியார் அணியைச் சேர்ந்த டேவியஸ், ஃபேக்டரி அணிகளுக்கே சவால்விட்டு இரண்டாவது ரேஸில் வெற்றி பெற்றார். மேக்ஸ் பியாஜி, விபத்தின் காரணமாக கடைசி இடங்களுக்குப் பின்தங்கிவிட, டாம் சைக்ஸின் கவாஸாகியும் போட்டிப் போடாமல் ஒதுங்கிவிட... வெற்றி பெற்றார் சாஸ் டேவியஸ். ஏப்ரில்லா ஃபேக்டரி அணியின் யூஜின் லாவெர்ட்டி இரண்டாவது இடத்தையும், கிரெஸெண்ட் சுஸ¨கி அணியின் லியான் கேமியர் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பியாஜியை நெருங்கும் மெலாண்ட்ரி!

இன்னும் இரண்டு ரேஸ்களே மீதம் இருக்கும் நிலையில், மேக்ஸ் பியாஜி 318 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். மார்க்கோ மெலாண்ட்ரி 308.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், டாம் சைக்ஸ் 291.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன், செப்டம்பர் 23-ம் தேதி போர்ச்சுகலில் அடுத்த ரேஸ் நடந்து முடிந்திருக்கும்!

> சார்லஸ்