Published:Updated:

ராஸி ... 80-வது வெற்றி!

ராஸி ... 80-வது வெற்றி!

ராஸி ... 80-வது வெற்றி!

ராஸி ... 80-வது வெற்றி!

Published:Updated:
 ##~##

பைக் ரேஸ் உலகுக்கு அடுத்த நம்பிக்கை நாயகன் கிடைத்துவிட்டான்’ எனக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். 20 வயதே ஆன ஹோண்டா அணியின் மார்க் மார்க்யூஸ்தான் இப்போது ரேஸ் உலகின் சூப்பர் ஸ்டார். வாலன்டினோ ராஸி, நடப்பு சாம்பியன் ஜார்ஜ் லாரன்சோ, டேனி பெட்ரோஸா ஆகிய எல்லாருக்குமே தண்ணி காட்டும் மார்க்யூஸ், இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 

நெதர்லாந்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோட்டோ ஜீபியின் ஏழாவது சுற்று, நெதர்லாந்தில் உள்ள அசென் ரேஸ் மைதானத்தில் ஜூன் 29-ம் தேதி நடைபெற்றது. எல்லா ரேஸுமே ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் நடக்கும். ஆனால், அசென் ரேஸுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. 1949-ம் ஆண்டு முதல் இங்கே சனிக்கிழமைகளில்தான் ரேஸ் நடக்கும். நெதர்லாந்தின் உள்ளூர்த் திருவிழாவின் ஒரு அங்கமாக, மோட்டோ ஜீபி ரேஸை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் கடைசி சனிக்கிழமையில் நடத்துகிறது நெதர்லாந்து ரேஸ் சங்கம்.

ராஸி ... 80-வது வெற்றி!

ரேஸுக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில், யமஹா மான்ஸ்ட்டர் அணியின் கால் க்ரட்ச்லோ வெற்றி பெற்று, ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கத் தகுதி பெற்றார். ஹோண்டா அணி வீரர்கள் மார்க்யூஸ் இரண்டாம் இடத்தில் இருந்தும், ஸ்டீஃபன் பிராடில் மூன்றாவது இடத்தில் இருந்தும், யமஹா அணியின் வாலன்டினோ ராஸி நான்காவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். நடப்பு சாம்பியன் லாரன்சோ 12-வது இடத்தில் இருந்தே ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார்.

ரேஸ் துவங்கிய சில விநாடிகளில், ஐந்தாவது இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு முன்னேறினார் டேனி பெட்ரோஸா. இதற்கிடையே, நான்காவது லேப்பின்போது மார்க்யூஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இரண்டாம் இடம் பிடித்தார் ராஸி. டேனி பெட்ரோஸாவும், ராஸியும் முதல் இடத்துக்குப் போட்டி போட, மார்க்யூஸ் ராஸியை முந்த தருணம் பார்த்துக்கொண்டு இருந்தார். அடுத்த லேப்பிலேயே பெட்ரோஸாவை முந்திய ராஸியை, அதன் பிறகு யாராலும் பிடிக்க முடியவில்லை. மோட்டோ ஜீபி வரலாற்றில் 80-வது வெற்றியைப் பெற்று அசத்தினார் வாலன்டினோ ராஸி. 2010-ம் ஆண்டு மலேசிய ரேஸில் வெற்றி பெற்ற பின்பு, ராஸி பெறும் முதல் வெற்றி இது.

ராஸி ... 80-வது வெற்றி!

ஜெர்மனி

ஜெர்மனியின் ஷாஸன்ரிங் ரேஸ் மைதானத்தில், மோட்டோ ஜீபியின் எட்டாவது சுற்று ஜூலை 14-ம் தேதி நடைபெற்றது. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற ஹோண்டா அணியின் மார்க் மார்க்யூஸ், முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்க, யமஹா அணியின் கால் க்ரட்ச்லோ இரண்டாவது இடத்தில் இருந்தும், வாலன்டினோ ராஸி மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர்.

ராஸி ... 80-வது வெற்றி!

யாருமே எதிர்பார்க்காத வகையில், ஆறாவது இடத்தில் இருந்த டுகாட்டி அணியின் நிக்கி ஹேடன் முதல் இடத்துக்கு முன்னேறினார். ஐந்து லேப்புகள் வரை முன்னணியில் இருந்த ஹேடனை, ஆறாவது லேப்பில் முந்தினார் மார்க்யூஸ். அதன் பின்பு ஹேடனை ராஸி முந்த, அடுத்து வந்த கால் க்ரட்ச்லோவும் ஹேடனை முந்தினார். மொத்தம் 30 லேப்புகள்கொண்ட இந்த ரேஸின் 15-வது லேப்பின்போது, ராஸியை முந்தினார் கால் க்ரட்ச்லோ. இறுதியில் மார்க்யூஸ் வெற்றி பெற, க்ரட்ச்லோ இரண்டாம் இடமும், ராஸி மூன்றாம் இடமும் பிடித்தனர்.

இதுவரை எட்டு சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், ஹோண்டா அணியின் மார்க் மார்க்யூஸ் 138 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஹோண்டா அணியின் மற்றொரு வீரர் டேனி பெட்ரோஸா 136 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், யமஹா வீரர்கள் லாரன்சோ 127 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், க்ரட்ச்லோ 107 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ராஸி 101 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போது, மோட்டோ ஜீபியின் அடுத்த சுற்று அமெரிக்காவில் நடந்து முடிந்திருக்கும்.

-சார்லஸ்