>>சார்லஸ், சுரேன்

த்ரில்லிங் ரேஸாக நடந்து முடிந்திருக்கிறது வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ். பரபரப்புக்கு பாப்புலரான

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் முதல் சுற்று, கடந்த பிப்ரவரி 27-ம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள ஃபிலிப் தீவில் நடைபெற்றது. முதல் ரேஸில் கார்லோஸ் செக்காதான் சூப்பர் ஹீரோ! அன்று நடைபெற்ற இரண்டு ரேஸ்களிலும் செக்கா வென்று 'டபுள்’ பட்டம் பெற்றதோடு, டுகாட்டி பைக்கை வைத்து ரேஸ் டிராக்கில் அனல் மூட்டினார்.

ஃபிலிப் தீவு (27-2-2011)

அல்தியா ரேஸ் அணியைச் சேர்ந்த செக்கா, தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று ரேஸை முதலிடத்தில் இருந்து துவக்கினார். நடப்பு சாம்பியனும், ஏப்ரில்லா அணி வீரருமான மேக்ஸ் பியாஜி இரண்டாம் இடத்தில் இருந்தும், லிபர்டி அணியின் சில்வியோ குண்டோலி மூன்றாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்க தகுதி பெற்றனர். கடந்த ஆண்டு சுஸ¨கி அணியில் இருந்து இந்த ஆண்டு பிஎம்டபிள்யூ அணிக்குத் தாவியிருக்கும் லியான் ஹஸ்லாம், நான்காவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.

ரேஸ் -1

மொத்தம் 22 லேப்புகள் கொண்ட இந்த ரேஸ் போட்டியில், ஆரம்பத்தில் இருந்தே சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் பறந்தார் கார்லோஸ் செக்கா. ஆரம்பத்தில் செக்காவுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தினார் நடப்பு சாம்பியன் மேக்ஸ் பியாஜி. ஆனால், நான்கு ஐந்து லேப்புகளைக் கடந்த பிறகு, பியாஜியால் செக்காவை முந்த முடியவில்லை. செக்கா முதலிடத்தில் பறக்க... பியாஜி அவரைவிட 3 விநாடிகள் பின்னால் வந்துகொண்டு இருந்தார். இதற்கிடையே மூன்றாவது இடத்துக்கான போட்டி கடுமையானது. யமஹாவின் லாவர்ட்டியும், பிஎம்டபிள்யூவின் லியான் ஹஸ்லாமும் முரட்டு வேகத்துடன் மூன்றாவது இடத்துக்கு மோதிக் கொண்டு இருந்தனர். 6-வது லேப்பின்போது லாவர்ட்டியை முந்திச் சென்று மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார் ஹஸ்லாம். லாவர்ட்டி, மார்க்கோ மெலாண்ட்ரி, ஃபெப்ரிஸியோ, ஜோனத்தன் ரியா ஆகியோர் அடுத்தடுத்த இடத்துக்கான போட்டியில் சீறிக் கொண்டு இருந்தனர்.

இறுதியில் மொத்தம் 98 கி.மீ கொண்ட பந்தய தூரத்தை, 34 நிமிடங்கள் 16 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார் செக்கா. பியாஜி இரண்டாவது இடத்தையும், ஹஸ்லாம் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

ரேஸ் 2

முதல் ரேஸைவிட இரண்டாவது ரேஸ் ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பான ரேஸாக அமைந்தது.

முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கிய கார்லோஸ் செக்கா, முதல் லேப்பிலேயே தடுமாற, 11-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். ஆனால், டுகாட்டி 1098ஆர்- பைக்கின் முழு வேகத்தையும் பயன்படுத்தி ரேஸ் ஓட்டிய செக்கா, 21-வது லேப்பின்போது நான்காவது இடத்துக்கு முன்னேறி விட்டார். ரேஸ் முடிய கடைசி ஒரே ஒரு லேப் இருக்கும் நிலையில், வெற்றி பெறப் போவது ஹஸ்லாமின் பிஎம்டபிள்யூவா, ஃபெப்ரிஸியோவின் டுகாட்டியா, சுஸ¨கியின் குண்ட்டோலியா என்ற பரபரப்பு நிலவியது. ஆனால், தனது பைக்கின் வேகத்தையும், தனது அனுபவத்தையும் பயன்படுத்தி திறமையாக ரேஸ் ஓட்டிய செக்கா, குண்ட்டோலி, ஃபெப்ரிஸியோ, ஹஸ்லாம் ஆகியோரை முந்திச் சென்று முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். இவர் பந்தய தூரத்தை 34 நிமிடங்கள் 16.4 விநாடிகளில் கடந்து வெற்றி பெற... ஹஸ்லாம் வெறும் 0.3 மைக்ரோ விநாடிகளில் வெற்றியை நழுவ விட்டார்.

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸின் முதல் சுற்று முடிவடைந்திருக்கும் நிலையில், அல்தியா அணியின் கார்லோஸ் செக்கா இரண்டு ரேஸ்களிலும் வென்றிருப்பதன் மூலம் 50 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்திருக்கிறார். நடப்பு சாம்பியன் மேக்ஸ் பியாஜி 40 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், யமஹாவின் மார்க்கோ மெலாண்ட்ரி 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். பிஎம்டபிள்யூவின் ஹஸ்லாம் 27 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

வேர்ல்டு சூப்பர் பைக் ரேஸ் பந்தயத்தின் இரண்டாவது சுற்று, இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் முன் மார்ச் 27-ம் தேதி இங்கிலாந்தில் உள்ள டானிங்டன் பார்க் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கும்!