>>கே.பி.ஓவியா

ஃபீனிக்ஸ் க்ரூஸர்... இது சென்னையின் புதிய புல்லட் பைக் கேங். ராயல் என்ஃபீல்டு பைக்

. வைத்திருக்கும் இந்த கிளப்பின் உறுப்பினர்கள், விடுமுறை நாளில் சென்னையில் தங்குவது இல்லை. ஊர் ஊராகப் பறந்து விடுகின்றன இந்த ஃபீனிக்ஸ் பறவைகள். சென்னையில் பைக் கிளப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. ஞாயிறுகளில் பெசன்ட் நகர் பீச், ஈசிஆர் என எங்கு பார்த்தாலும் பைக்குகள் குரூப் குரூப்பாகத் திரியும். ஆனால், அதிலிருந்து மிகவும் வித்தியாசமாகச் செயல்படுகிறது இந்த கிளப்! ஃபீனிக்ஸ் க்ரூஸர் கிளப்பைச் சேர்ந்த வெங்கட்ராமனிடம் பேசினோம். ''என் நண்பர் ராம்குமார் கொல்லப்பனும் நானும் இந்த குரூப்பை கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கினோம். இந்த குரூப்பின் முக்கிய நோக்கமே ரைடிங் கல்ச்சரை ஊக்குவிப்பதுதான்..
பெரிய ரைடர், சின்ன ரைடர் என்ற எந்த பேதமும் இல்லாமல், ராயல் என்ஃபீல்டு பைக் வைத்திருக்கும் எவரும் இந்த கிளப்பில் இணையலாம். 'எனக்கு புல்லட் பைக்கை அந்தளவுக்குக் கையாளத் தெரியாது’

என்பவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் தாராளமாக இதில் சேரலாம். எங்கள் கிளப்பின் சீனியர்கள், அவர்களுக்குத் தேவையான விஷயங்களைக் கற்றுத் தருவார்கள். சுதந்திரமாக தன்னந்தனியே பைக்கில் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் அதற்கான வழிமுறை, திட்டமிடுதல், சர்வீஸ் போன்ற விஷயங்களை நினைத்து மலைத்துப் போய் கைவிட்டு விடுவார்கள். அந்தக் கவலை இல்லாமல் சுதந்திரமாக பயணத்தை அனுபவிக்க எங்கள் கிளப் உதவும்'' என்றார்.

''உங்கள் கிளப்பில் புதிதாக இணைய நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டபோது, ''அது மிகவும் சுலபம். ஃபேஸ் புக்கில் 'ஃபீனிக்ஸ் க்ரூஸர்’ என்ற பெயரில் வலைப் பக்கம் இருக்கிறது. அதில் பதிவு செய்தால் போதுமானது. அதில், அடுத்த பயணத் திட்டம் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் கலந்தாலோசித்துத் தான் இறுதி முடிவு எடுப்போம். பெரும்பாலும், மாதத்தின் கடைசி வாரத்தின் விடுமுறை நாளைத் தான் பயணத்துக்குத் தேர்ந்தெடுக்கிறோம். அதேபோல், ஒருநாள் அல்லது இரண்டு நாளாகத்தான் பயணம் இருக்கும். காரணம், வேலையில் இருப்பவர்களுக்கு அதற்குமேல் அதிக நாட்கள் விடுமுறை கிடைப்பது கடினம். அதை ஒட்டியே எங்கள் பயணத் திட்டத்தை அமைத்துக் கொள்கிறோம். குடும்பத்தினரை அழைத்து வருபவர்களும் தாராளமாக வரலாம். அதற்கேற்ற வசதிகளையும் செய்து கொடுத்து விடுவோம்'' என்றவரிடம், ''இதுவரை எங்கெல்லாம் சென்றிருக்கிறீர்கள்?'' என்றபோது, ''இதுவரை ஏற்காடு, ஒக்கேனக்கல் ஆந்திராவில் உள்ள ஹார்ஸ்லி ஹில்ஸ் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்துளோம். கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சென்னையில் இருந்து ஈசிஆரில் மகாபலிபுரம் வரை சென்று திரும்பினோம். இதில் விசேஷம் என்னவென்றால், சுமார் 150 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் கலந்து கொண்டதுதான். அத்தனை பைக்குகளும் வரிசை கட்டி ஈசிஆரில் டுப்..டுப்... டுப்...டுப் சத்தத்தில் பறந்த அனுபவம் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது!''

''கிளப்பின் அடுத்த திட்டம் என்ன?'' என்றபோது, ''எங்கள் கிளப்பில் இதுவரை 85 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில் 60 பேர் வரை ரெகுலராக பயணத்தில் கலந்து கொள்பவர்கள். அடுத்து ஊட்டி, மசினகுடி அல்லது மூணார் பயணத்துக்குத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம். சென்னை வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு மட்டுமல்ல... தன்னுடைய அன்றாட வேலைப் பளுவிலிருந்து தற்காலிகமாக விடுபட்டு, உற்சாகம் பெற இது போன்ற பயணம் பைக் ரைடர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமில்லையா?'' என்கிறார் வெங்கட்ராமன்.