Published:Updated:

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

மோட்டார் நியூஸ்

Published:Updated:
மோட்டார் நியூஸ்

இந்தியாவில் தயாரான ஃப்ரீலேண்டர்!

மோட்டார் நியூஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லேண்ட்ரோவர் நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கிய பிறகு, இந்தியாவில்

 ##~##
தொழிற்சாலையை அமைத்தது லேண்ட்ரோவர். இந்த தொழிற்சாலையில் இருந்து முதல் காராக, வரும் மே 27-ம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர். லேண்ட்ரோவரின் இந்த பிளாட்ஃபார்மிலேயே டாடா கார்களையும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

இதற்கிடையே, கடந்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஜாகுவார் கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த மாதம் மட்டும் 75 ஜாகுவார் கார்கள் விற்பனையாகி இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுவதும் 20 ஜாகுவார் டீலர் ஷிப்புகள் துவங்க இருப்பதால், இதன் விற்பனை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது!

சென்னையில் யமஹா தொழிற்சாலை?

மோட்டார் நியூஸ்

ஃபரிதாபாத் மற்றும் சுராஜ்பூரில் தொழிற்சாலை அமைத்திருக்கும் யமஹா, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் மூன்றாவது தொழிற்சாலை அமைக்க பணிகளைத் துவங்க இருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 3 லட்சம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துவரும் யமஹா, 2013-ம் ஆண்டில் இருந்து 10 லட்சம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. ''தற்போது மூன்றாவது தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய தொழிற்சாலை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்'' என்றார் யமஹா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹிரோயூக்கி சுஸ¨கி. ஏற்கெனவே வட இந்தியாவில் இரண்டு தொழிற்சாலைகள் இருப்பதால், மூன்றாவது தொழிற்சாலை சென்னை அல்லது ஹைதராபாத்தில் அமைக்கப்படலாம்!

வெயிட்டிங் பீரியட் அதிகரிக்கிறது!

மோட்டார் நியூஸ்

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரழிவின் காரணமாக, கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது டொயோட்டா நிறுவனம். ஜப்பானில் தயாரிப்புச் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் டொயோட்டாவின் பிரச்னை இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. ஜூன் 4-ம் தேதி வரை பெங்களூரு தொழிற்சாலையில் 70 சதவிகித கார் தயாரிப்பைக் குறைத்திருக்கிறது டொயோட்டா. ஸ்பேர் பார்ட்ஸ்களின் வரத்து குறைந்ததுதான் இதற்குக் காரணம். மாதத்துக்கு 11,000 கார்களை உற்பத்தி செய்து வரும் டொயோட்டா, மே மாதம் வெறும் 7,000 கார்களை மட்டுமே உற்பத்தி செய்ய இருக்கிறது. இதனால், டொயோட்டா நிறுவனத்துக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டு உள்ளது!

மஹிந்திரா புதிய (பழைய) ஷோரூம்!

மோட்டார் நியூஸ்

நம் நாட்டில் புதிய கார்கள் அளவுக்கு, உபயோகப்படுத்தப் பட்ட பழைய கார்களுக்கும் மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது. அதனால்தான், கார் தயாரிக்கும் பெரிய பெரிய ஜாம்பவான்கள்கூட ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்தத் துறையில் கால் பதித்து இருக்கிறார்கள். மஹிந்திரா நிறுவனம் 'மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ்’ என்ற பெயரில், ஃப்ராஞ்சைஸ் மூலம் பழைய கார் மார்க்கெட்டில் களமிறங்கி இருப்பது நாம் அறிந்ததே!

தற்போது, 'மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் வீல்ஸ்’ என்ற பெயரில் நேரடியாக களமிறங்கி இருக்கிறது. சென்னை நெற்குன்றத்தில் தனது முதல் சூப்பர் ஸ்டோரைத் திறக்க, மஹிந்திரா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் வந்திருந்தார்.

''சென்னையில் எங்களது முதலாவது 2-எஸ் ஷோ ரூமினைத் திறந்து வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 2008-ல் இந்தத் துறையில் இறங்கும்போது, புதிய கார்களுக்கு இணையாக பல்வேறு பிராண்டுகளைக் கொண்ட ஷோ ரூம்களை நிர்மாணிக்கும் வர்த்தகச் சூழலை உருவாக்குவதை எங்கள் நோக்கமாகக் கொண்டிருந்தோம். அந்தப் பயணத்தில் எங்களுக்கு இந்த ஷோரூம் மற்றொரு படிநிலை யாகும்'' என்றார். ''இந்த ஷோரூமில் பழைய கார்களை வாங்கவும் விற்கவும் முடியும் என்பதுடன் இங்கேயே சர்வீஸும் செய்து கொள்ளலாம். ஸ்பேர் பார்ட்ஸ், ஆர்.சி புக் பெயர் மாற்றம், இன்ஷூரன்ஸ், நிதியுதவி, வாரன்டி, சாலையோர சர்வீஸ் உதவி என அனைத்து வசதிகளும் கிடைக்கும். ஒரே கூரையின் கீழ் அனைத்து சேவைகளும் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை!'' என்கிறது மஹிந்திரா நிறுவனம்.

ஹார்லியின் 48

மோட்டார் நியூஸ்

இந்தியாவில் 14 மாடல்களைக் களமிறக்கியிருக்கும் ஹார்லி டேவிட்சன், கடந்த மாதம் '48’ என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது. அகலமான டயர், சிங்கிள் சீட், பக்கவாட்டில் அமைந்திருக்கும் பின் பக்க நம்பர் பிளேட் என ஹார்லி டேவிட்சனுக்கே உரிய தோற்றத்துடன் இருக்கிறது ஹார்லி 48. 1202 சிசி திறன் கொண்ட இந்த பைக் அதிகபட்சமாக 3200 க்ஷீஜீனீ-ல் 9.99 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. ஹார்லி டேவிட்சன் 48 பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை 8.50 லட்சம்!

உச்சத்தைத் தொடும் பைக்குகளின் விற்பனை!

மோட்டார் நியூஸ்

ஆட்டோமொபைல் உலகுக்குத் தொடர்ந்து நற்செய்தி சொல்லிக்கொண்டு இருக்கிறது இந்திய பைக் மார்க்கெட். கடந்த மார்ச் மாதமும் இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனை உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஹீரோ ஹோண்டா நிறுவனம் கடந்த மார்ச் மாதம் மட்டும் 5,15,852 மோட்டார் சைக்கிள்கள் செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டு மார்ச் மாத விற்பனையைக் காட்டிலும் 24 சதவிகிதம் அதிகம். பஜாஜ் நிறுவனம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவிகிதம் உயர்ந்து 3,07,738 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறது. டிவிஎஸ் அதிகபட்சமாக கடந்த மார்ச் மாதம் 27 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதன் மார்ச் மாத விற்பனை 1,47,301. யமஹாவைவிட சுஸ¨கி பைக்குகளின் விற்பனை அதிகரித்து விட்டது. யமஹா நிறுவனம் மார்ச் மாதம் 25,784 மோட்டார் சைக்கிள்களையே விற்பனை செய்திருக்கும் நிலையில், சுஸ¨கி 27,361 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism