தொழில்நுட்பம்
Published:Updated:

யுனோ.. யூ நோ?

யுனோ.. யூ நோ?

>>  மோ.அருண் ரூப பிரசாந்த் 

சுற்றுலாவுக்காக சீனா சென்று வந்தால், அங்குள்ள டிராஃபிக் மற்றும் புகை மாசு போன்றவற்றைக் காணும் ஒருவர் என்னவெல்லாம் செய்வார்? கனடாவைச் சேர்ந்த பெஞ்சமின் குலாகு என்பவர், சீனாவுக்குச் சுற்றுப் பயணம் சென்றுவிட்டு ஊர் திரும்பியதும் அவர் செய்த முதல் வேலை... எல்லா சந்து பொந்துகளிலும் வளைந்து செல்லவும், முக்கியமாக மாசு ஏற்படுத்தாத ஜீரோ எமிஷன் தன்மை கொண்ட பைக்கை உருவாக்கியதுதான்! இதுதான் 'யுனோ’ என்ற பைக் பிறந்த கதை!

யுனோ.. யூ நோ?
யுனோ.. யூ நோ?
 ##~##

ஒரு நிமிடம்... நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த யுனோ பைக்கைத் தயாரித்தபோது, பெஞ்சமினுக்கு வயது 17. அவர் யுனோவை தனது பன்னிரண்டாம் வகுப்பு சயின்ஸ் புராஜெக்ட்டுக்காகத் தயாரித்திருந்தார் என்பதை இங்கே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!

அது என்ன யுனோ?

இரண்டு பேரல்ஸ் ரியர் டயர்களும், ஒரு ஃப்ரன்ட் டயரும் கொண்டுள்ள யுனோவில், குறுகலான சந்து பொந்துகளில் செல்லும்போது இரண்டு ரியர் டயர்களுக்கு நடுவில்  ஃப்ரன்ட் டயரை மடக்கி இழுத்துக் கொள்ளலாம். 'டிரான்ஸ்ஃபார்மர்’ என்ற ஹாலிவுட் படத்தில் யுனோவின் சாகசங்களைப் பார்த்து பிரமிப்பில் துள்ளிக் குதிக்கின்றனர் அமெரிக்க இளசுகள்.

தனது கண்டுபிடிப்புக்குக் கிடைத்த அமோக வரவேற்பைப் பார்த்து, பிஜிபி மோட்டார்ஸ் (BGP MOTORS) என்ற பெயரில் தனி கம்பெனி ஆரம்பித்து 'யுனோ-3’ (UNO III)தயாரிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார் பெஞ்சமின்.

யுனோ-3 பைக்கின் சிறப்பம்சம், அதன் கைரோஸ்கோபிக் கன்ட்ரோல் சிஸ்டம்தான் (Gyroscopic control system) இதிலுள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆகும். மைலேஜ் 56.3 கி.மீ! நார்மல் மோடில் அதிகபட்சமாக 48 கி.மீ வேகம் செல்லும் இதன் விலை 7500 டாலர்கள். நம்மூர் மதிப்புக்கு சுமார்

யுனோ.. யூ நோ?

3,37,000 ரூபாய் ஆகிறது. நம் நாட்டுக்கு இந்த பைக் விற்பனைக்கு வந்தால், சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு இன்னும் வசதியாகத்தானே இருக்கும்?!