பைக்கர் பேப்ஸ்

ந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடானு வெட்டியா பாட்டுப் பாடிக்கிட்டு இருக்காம, ஈசிஆர் பக்கம் போடா! மொத்தம் ஆறு பொண்ணுங்க... அப்பாச்சி, சிபிஆர், பல்ஸர், FZ, புல்லட்னு விதவிதமான பைக்குல... க்ளவுஸ், ஜெர்க்கின்னு ஃபுல் ரைடிங் கியர்ஸோடா சியர்ஸ் சொல்றாங்க! இவங்க பைக் ஓட்டுறதைப் பார்க்கவே ஈசிஆர்ல கூட்டம் கூடுதுடா!''னு நண்பன் ஒருவன் சிரத்தை எடுத்து போன் செய்து அசைன்மென்ட் ஐடியா கொடுக்க, அடுத்த ஞாயிற்றுக்கிழமை கேமராமேனோடு கிழக்குக் கடற்கரைச் சாலை டோல்கேட்டில் காத்திருந்தேன்.  

காலை சரியாக மணி 5.50. நண்பன் சொன்னதுபோலவே விதவிதமான பைக்குகளில் செம ஸ்டைலாக டோல்கேட்டைத் தாண்டி வந்துகொண்டிருந்தது பறக்கும் பெண்கள் படை. பைக்குகளை மடக்கி, ''நாங்க மோட்டார் விகடன்ல....'' என்ற உடனேயே, ''ஹாய் கய்ஸ்... நான் சின்டி!'' என்று ஹெல்மெட்டை ஸ்டைலாகக் கழற்றி விட்டுக் குலுக்கினார் அப்பாச்சியில் பறந்து வந்த சௌந்தர்யா என்கிற சின்டி.

பைக்கர் பேப்ஸ்

''நான் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். வேலை பார்க்கிறது - ஐடி கம்பெனி. கூடவே புரொஃபஷனலா பைக் ரேஸும் ஓட்டிக்கிட்டு இருக்கேன். சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்ல, பைக் ரேஸ் நடக்கும்போது என்னைப் பார்க்கலாம். ரேஸ்னாலே பசங்கதான். அதுவும் பைக் ரேஸுனு வந்துட்டா, பொண்ணுங்களைச் சீண்டவே மாட்டாங்க. ஆனா, எங்களுக்கு பைக் ஓட்டப் பிடிச்சிருக்கு. அதேசமயம், ரேஸ் ஓட்டவும் பிடிச்சிருக்கு. அதனால, என்னைப் போலவே பைக் மேல பேஷன் உள்ள பெண்கள் எல்லாம் சேர்த்து, இந்த 'பைக்கர் பேப்ஸ்’ கேங்கை ஆரம்பிச்சுட்டேன். இந்த க்ரூப்ல இப்ப மொத்தம் ஆறு பேர் இருக்கோம். நாளுக்கு நாள் டீம் வளர்ந்துட்டே போகுது. நிறைய பொண்ணுங்க ஃப்ளைட்டே ஓட்டுறாங்க. பைக் ஓட்டக் கூடாதா என்ன? ஒய் ஷ§ட் பாய்ஸ் ஹேவ் ஆல் த ஃபன்?'' எனச் சீரியஸாகக் கேட்டார் சின்டி.

''எங்க டீமோட டேக்லைனே 'வி ரைடு ஸ்மார்ட் அண்டு சேஃப்’ங்கிறதுதான். பசங்க எல்லோருமே பைக் ஓட்டுறாங்க. ஆனா, அதுல பல பேருக்கு பைக்கை எப்படி ஓட்டுறதுனே தெரியலை. இசிஆர், ஓஎம்ஆர் ரோட்ல கொஞ்ச நேரம் நின்னு பாத்தீங்கன்னா, நான் சொல்றதுல இருக்கிற உண்மை புரியும். பயங்கரமா ராஷ் டிரைவ் பண்றாங்க. எங்ககிட்ட அது மாதிரி எந்த விஷயமும் இருக்காது. க்ளவுஸ், ஜெர்க்கின் இல்லாமல் பைக்கைத் தொடமாட்டோம்!'' என்று சொல்லிவிட்டு டீம் மேட்ஸை அறிமுகப்படுத்தினார் தீப்தி. (ஹெல்மெட், ஜெர்க்கின், கிளவுஸை எல்லாம் கழற்றினால்தான் போட்டோ எடுப்போம் என்று கண்டிஷன் போட்டு, ரொம்ப நேரம் காத்திருந்தபின் எடுத்த படங்கள் இவை.)

''என் பேரு ஷ்வேதா. ரொம்ப தூரம், ரொம்ப நேரம் பைக் ஓட்டுறது எனக்குப் பிடிக்கும்'' என்றார் வெள்ளை வண்ண ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கில் வந்த ஷ்வேதா.

500 சிசி ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் ஸ்டைலாக சென்டர் ஸ்டாண்டு போட்டு இறங்கினார் பிரியங்கா. ''காலேஜுக்கு நானும் வண்டிலதான் வர்றேன்னு பசங்ககிட்ட சொன்னா, 'என்ன வண்டி... ஸ்கூட்டியா, ஆக்டிவாவா?’னு கேப்பாங்க. புல்லட்டுனு பதில் சொன்னதுமே இரண்டு நிமிஷம் கேப் விட்டுட்டு, கொஞ்சம் கவனமாத்தான் பேச ஆரம்பிப்பாங்க. பைக் ஓட்டுறது எங்களுக்கு மிகப் பெரிய கான்ஃபிடன்ஸைக் கொடுக்குது. வீ நோ ஹவ் டு டிரைவ்!'' என்கிற பூஜாவிடம் தன்னம்பிக்கை வார்த்தைகள் கொப்பளிக்கின்றன.

பல்ஸரில் பறந்து வந்தார் பூஜா. ''நாங்க ஒவ்வொரு வாரமும் காலைல ஷார்ப்பா ஆறு மணிக்கு பைக்கோட அட்டென்டன்ஸ் போட்ருவோம். குறைஞ்சது 100 கி.மீ ரைடு போறதுதான் எங்களோட டார்கெட். மகாபலிபுரம், பாண்டிச்சேரி, புழல், தடா அருவி, நாகலாபுரம்னு சுத்திக்கிட்டு இருக்கோம். சீக்கிரத்தில் மாநிலம் தாண்டியும் ரைடு போவோம்!'' என ஸ்மார்ட்போனில் ரூட் மேப்பை செட் செய்துவிட்டு, கியர்களை மாற்றினார் பூஜா!

பைக்கர் பேப்ஸ்

''இந்த ஆர்டிக்கிள் படிக்கிற சில பசங்க, 'ரொம்ப ஓவரா சீன் போடுறாளுங்க’ன்னு எங்களைப் பத்தி நிச்சயம் கமென்ட் அடிப்பாங்க. நாங்க சும்மா ரைடு மட்டும் போகலை பாஸ். ப்ளட் டொனேஷன் கேம்ப் நடத்தி, நாங்க எல்லோருமே ரத்தமும் கொடுத்திருக்கோம். மாசத்துக்கு ஒரு தடவை சென்னையில பராமரிப்பே இல்லாமல் இருக்குற பூங்காக்களைச் சுத்தம் பண்றதும் எங்களோட வேலை. நாங்க ஆறு பேரும் சுத்தம் பண்ண ஆரம்பிச்ச அரைமணி நேரத்துல, அறுபது பேரா மாறிடுவோம். பார்க்குக்கு வாக்கிங் வர்றவங்களும் எங்களோட சேர்ந்து சுத்தம் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. அதேசமயம், நாங்க பைக் மட்டும் ஓட்டிக்கிட்டு இல்லை; காலேஜ்ல படிக்கிறோம்; வேலையும் செய்றோம். ஸோ, நோ ஸ்டொமக் பர்னிங் கைய்ஸ்!'' என்று கண்ணடிக்கிறார் கண்ணாலேயே பேசும் நிரஞ்சனா.

இந்தப் பொண்ணுங்களைப் புரிஞ்சிக்கவே முடியலையே பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு