Published:Updated:

மைசூரிலிருந்து 387 கிமீ சென்ற புது ராயல் என்ஃபீல்டு புல்லட்... திடீரென தீப்பிடித்து வெடித்த சம்பவம்!

தீப்பிடித்த புல்லட்

மைசூரிலிருந்து ஆந்திராவிற்கு 387 கிலோமீட்டர் சென்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரிலிருந்து 387 கிமீ சென்ற புது ராயல் என்ஃபீல்டு புல்லட்... திடீரென தீப்பிடித்து வெடித்த சம்பவம்!

மைசூரிலிருந்து ஆந்திராவிற்கு 387 கிலோமீட்டர் சென்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:
தீப்பிடித்த புல்லட்
கொஞ்ச நாள்களுக்கு முன்பு ஹாட் டாப்பிக் – மாநிலங்கள் முழுக்க எலெக்ட்ரிக் பைக்குகள் பரபரவெனத் தீப்பிடித்ததுதான். ‘எலெக்ட்ரிக் பைக்குகள்தான் எரியுதா’ என்று பார்த்தால்… எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எரிந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த சம்பவம் நடந்திருக்கிறது. இந்த முறை எரிந்தது – எலெக்ட்ரிக் பைக் இல்லை; ஒரு பெட்ரோல் பைக். அதுவும் அனைவரும் விரும்பும் ராயல் என்ஃபீல்டு புல்லட்.

மைசூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், ஒரு புல்லட் பிரியர். சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு புல்லட் ஒன்றை ஆசையாக வாங்கினார். அந்த புல்லட்டிலேயே ஆந்திரா மாநிலம் குண்டக்கல்லுக்கு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட முடிவு செய்தார். இதற்காக பக்திமயமாக அவர் தனது புல்லட்டை ரெடி செய்து ‘தட் தட் தட்’ எனப் பயணமும் கிளம்பிவிட்டார். கோயிலுக்குச் செல்லும் வரை எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோயில் வளாகத்தில் புல்லட்டை நிறுத்திவிட்டு ரவிச்சந்திரன் சாமி கும்பிடச் செல்லும்போதுதான் அந்தச் சம்பவம்… தான் நிறுத்தி வைத்திருந்த புல்லட், திடீரென பகபகவெனத் தீக்கு இரையாகிக் கொண்டிருந்ததைப் பார்த்து விக்கித்துப் போனார் ரவிச்சந்திரன்.

கொஞ்ச நேரத்தில், ‘டமார்’ என ஒரு பெரிய சத்தம். இம்முறை பெட்ரோல் டேங்க் வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், தண்ணீர் எடுத்து ஊற்றி தீயை அணைத்தனர். இத்தீவிபத்துச் சம்பவத்தை வீடியோ எடுத்த சிலர், அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வர, அந்த வீடியோதான் இப்போது வைரல்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதற்கு முன்பு 2018–ல் கர்நாடகாவில் ஒரு பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்ததில், அந்த பைக் உரிமையாளர் உயிரோடு எரிந்து போனதாக ஒரு சம்பவம் சோஷியல் மீடியாக்களில் வைரலாகப் போனது. ஆனால், அது உண்மையா என்று தெரியவில்லை. அது, பெட்ரோல் டேங்க்கை தழும்பத் தழும்ப நிரப்பியதால் ஏற்பட்ட கசிவு என்று காரணம் சொன்னார்கள். ஆனால், இங்கே நிறுத்தி வைத்திருந்த புல்லட் திடீரென ஏன் எரிந்தது என்று எந்தக் காரணங்களும் புலப்படவில்லை. நல்லவேளையாக – இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் இல்லை.

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்
ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்
மாதிரிப் படம்

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தயாரிக்கப்பட்ட Pure EV எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சென்னை அருகே தீப்பிடித்து எரிந்தது. இதேபோன்று கடந்த மாதம் 28–ம் தேதி புனேயிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. வேலூர் ஒக்கினாவா சம்பவத்தில், தந்தையும் மகளும் பலியானது மிகவும் துயரமான ஒரு நிகழ்வு.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், இப்போது சுட்டெரிக்கும் இந்த வெயிலுக்கு பெட்ரோல் பைக்குகளையும் நம்ப முடியவில்லை என்பதுதான் திகிலாக இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism