2.10.249...

- என்னடா இது.. ஏதோ காலண்டர் தேதி மாதிரி இருக்கேனு நினைக்காதீங்க! இது ரேஸர் ரெஹானா ரியாவின் புது சாதனை. 3.74 கி.மீ தூரம் கொண்ட சென்னை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் டிராக்கைக் கடக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம்தான் இது.

அதாவது, 2 நிமிடம்–10 விநாடி–2 மைக்ரோ விநாடி... இது நம் பெண்கள் ரேஸ் வரலாற்றில் புதிய சாதனை. இந்த நிமிட அளவுக்குள் சென்னை ரேஸ் டிராக்கைக் கடந்த பெண் ரேஸர் – ரெஹானா ரியா. அதோடு, கூடுதல் போனஸ் நியூஸும் இருக்கிறது. இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரிவில் நேஷனல் சாம்பியன்ஷிப் டைட்டிலையும் தட்டியிருக்கிறார் ரெஹானா.

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹோண்டா நடத்திய பெண்கள் ஒன்மேக் ரேஸில் போகிற போக்கில் கலந்து கொண்டு, முதல் ரேஸிலேயே வின்னிங் போடியம் ஏறிய பெண் ரேஸர், ரெஹானாதான். அதற்கப்புறம் சொந்தமாகக் குட்டிக் குட்டி ரேஸ்கள், ஹோண்டா Ten10 அகாடமிக்காக ரேஸ் ஓட்டியது, டிவிஎஸ் ரேஸிங் டீமில் கலக்கியது, வெளிநாடுகளில் நடக்கும் ஏசியன் கப் ஆஃப் ரேஸிங் என்று ரேஸ் வரலாற்றில் ரெஹானாவின் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது.

ஆண்கள் மட்டுமே ஜொலிக்கும் டர்ட் டிராக் ரேஸையும் விட்டு வைக்கவில்லை ரெஹானா. அடிக்கடி மலேஷியா, தாய்லாந்து என்று மோட்டோக்ராஸ் சூட்டிலும் ஸ்டேட்டஸ் போடுகிறார் ரெஹானா. இந்த மூன்று ஆண்டுகளில் ரெஹானா நேஷனல் சாம்பியன்ஷிப்பில் போடியங்கள் ஏறியிருக்கிறார்; ஆனால், டைட்டில் அடிப்பது இதுதான் முதல் முறை. ‘‘ஹலோ நேஷனல் சாம்பியன்... எப்படி ஃபீல் பண்றீங்க?’’ என்றால், அழகாகச் சிரித்தபடி பேசுகிறார் ரெஹானா. ‘‘இவ்வளவு நாளும் போடியம் மட்டும்தான் ஏறியிருக்கேன். இப்போதான் டைட்டில் வின்னர். ரொம்ப ஹேப்பியா இருக்கு. இதுக்காக நான் முதல்ல இருந்தே தயாராகிட்டேன். மொத்தம் 5 ரவுண்ட் நடக்கும் இந்த ரேஸ். ஒவ்வொரு ரவுண்டுக்கும் 6 லேப். ஃபர்ஸ்ட் ரவுண்டில் முதல்ல வந்துடலாம்னு நினைச்சேன். கடைசி லேப்பில் கொஞ்சம் சொதப்பிடுச்சு. அதனால் இரண்டாவது இடம்தான் வர முடிஞ்சது.

ஆனா, அதுக்கப்புறம் 2–வது ரவுண்டில் இருந்து 4–வது ரவுண்டு வரை நான்தான் ஃபர்ஸ்ட். அதனால், பாயின்ட்ஸ் குவிஞ்சிடுச்சு. கடைசி 5–வது ரவுண்டில் ரேஸ் முடிச்சாலே போதும். அதனால், பொறுமையா ஓட்டி 3–வது இடம் வந்தேன். நினைச்சபடியே நான்தான் டைட்டில் வின்னர்!’’ என்று வேகத்துடன் விவேகத்தையும் கலந்துகட்டி ஜெயித்த கதையைப் சொன்னார் ரெஹானா.

இன்னொரு பெருமையும் ரெஹானாவுக்கு உண்டு. Liqui Moly என்றொரு ஜெர்மன் லூப்ரிகன்ட்ஸ் நிறுவனம், முதன் முறையாக ஒரு பெண் ரேஸருக்குத் தானாக முன் வந்து ஸ்பான்ஸர் செய்திருப்பது இவருக்குத்தான்.

பொதுவாக, ஆண்கள் பிரிவில் நேஷனல் சாம்பியன்ஷிப் என்றாலே ஜெகன்தான் போடியம் ஏறுவார். இந்த முறை பைக்கை ஆண்கள் பக்கம் திரும்பினால்... அட.. சரத்குமார். சரத் பற்றித் தெரியும்தானே! இந்தியாவில் முதல் முறையாக மோட்டோ ஜிபி (Moto-3) வரை கலந்து கொண்டு திரும்பிய ஒரே ஜீவன் – சரத்குமார்தான். இந்தோனேஷியாவில் ஒரு இன்டர்நேஷனல் லெவல் ரேஸில் கலந்துகொள்வதற்காகச் சென்றவரை வாட்ஸ்–அப் காலில் பிடித்தேன்.

‘‘இப்போல்லாம் நேஷனல் ரொம்ப டஃப்பா இருக்கு. திறமையான பல ரேஸர்கள் இருக்காங்க. எனக்குக் காயம் வேறு. அதனாலதான் என்னால நேஷனல்ல கான்சென்ட்ரேட் பண்ண முடியாமப் போச்சு. இந்த முறை எப்படியாவது அடிச்சுடணும்னு கொஞ்சம் ஃபோக்கஸ்டு ஆகவே பயிற்சி எடுத்தேன். முதல் ரவுண்டில் ஃபர்ஸ்ட் வந்துட்டேன். அடுத்த ரவுண்டில் பைக் டெக்னிக்கல் பிரச்னை காரணமா, வெளிய போயிட்டேன். கொஞ்சம் நெர்வஸ் ஆயிடுச்சு. அதுக்கப்புறம் வந்த ரவுண்டுகள்ல வெறித்தனம் காட்டினேன். கடைசி ரவுண்டில் ஃபர்ஸ்ட் வந்தால்தான் டைட்டில் தட்ட முடியும். கவனமா ரேஸ் ஓட்டி, டைட்டில் அடிச்சுட்டேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு! இனி நேஷனல் ரவுண்டை விடமாட்டேன்!’’

– அடிபட்ட சிங்கத்தின் கர்ஜனை பயங்கரமாக இருக்கும் என்பதை நிரூபித்திருக்கிறார் சரத். ஏற்கெனவே ஜெகன், யாருமே கிட்ட நெருங்க முடியாத சாம்பியனாக இருக்கிறார். சரத் சொன்னதுபோலவே, இனி நேஷனல் சாம்பியன்ஷிப் இன்னும் கொஞ்சம் டஃப்பாகவே இருக்கும்.

- படம்: ஸ்ரீனிவாசன்