இந்த 'Naked Street bike' செக்மென்ட்டில் எவ்வளவோ பைக்குகள் இருந்தாலும் இந்த MT15-ன் மைலேஜ்தான் இதன் பெரிய பிளஸ் பாயின்ட்!
இந்த 'Naked Street bike' செக்மண்ட்டில் ஏகப்பட்ட பைக்குகள் இருந்தாலும் MT15க்கென ஒரு தனி இடம் உள்ளது. அதற்குக் காரணம் இதன் மைலேஜ். இது 150சிசி மோட்டார் பைக்காக இருந்தாலும் இதன் மைலேஜ் 45-50 kmph. ஹைவேயில் 55-50 kmph மைலேஜ் கூட கிடைக்கிறது. இதற்காகவே இந்த பைக் நிறைய பேரின் சாய்ஸாக இருக்கிறது. இது ஏற்கெனவே மார்க்கெட்டில் இருந்தாலும் யமஹா, இந்த MT 15 V2-வில் இப்போது நிறைய அப்கிரேடுகளைக் கொண்டு வந்துள்ளது.
இது ஒரு ஜாப்பனீஸ் சாமுராய் டிசைன். சாமுராயின் கத்தியைப் போல ஷார்ப்பாக உள்ள இதன் டிசைன் காண்போரின் இதயங்களைச் சட்டெனக் கவர்ந்து விடுகிறது. 'Multifunctional Negative LCD' இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டர் இதில் உள்ளது. இதன் மூலம் போன் கால்ஸ், இ-மெயில் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன், பேட்டரி லெவல் போன்றவற்றை பைக்கிலேயேப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் ரிசென்ட் பைக் பார்க்கிங், எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம், இதுவரை சென்ற டாப் ஸ்பீடு என்ன, போன்றவற்றை ஸ்மார்ட்போனிலேயே பார்க்கும் வசதி உள்ளது. இந்த 'Naked Street bike' செக்மென்ட்டில் எவ்வளவோ பைக்குகள் இருந்தாலும் இந்த MT15-ன் மைலேஜ்தான் இதன் பெரிய பிளஸ் பாயின்ட்!