Published:Updated:

`ஏத்தர் ஸ்கூட்டரும் எரிஞ்சிடுச்சு!' வாட்டர்வாஷ் செய்யும்போது தண்ணீர் பேட்டரிக்குள் புகுந்தது காரணமா?

ஏத்தர் ஸ்கூட்டர்

ஒரு ஏத்தர் வாடிக்கையாளர்கூட பேட்டரி ரீப்ளேஸ்மென்ட்டுக்கோ… பேட்டரியில் பிரச்னை என்றோ வரவில்லையாம். இப்போது ஏத்தர் ஸ்கூட்டரும் தீக்கிரையாகி, ஏத்தர் நிறுவனமும் செய்திக்கு இரையாகி விட்டது.

`ஏத்தர் ஸ்கூட்டரும் எரிஞ்சிடுச்சு!' வாட்டர்வாஷ் செய்யும்போது தண்ணீர் பேட்டரிக்குள் புகுந்தது காரணமா?

ஒரு ஏத்தர் வாடிக்கையாளர்கூட பேட்டரி ரீப்ளேஸ்மென்ட்டுக்கோ… பேட்டரியில் பிரச்னை என்றோ வரவில்லையாம். இப்போது ஏத்தர் ஸ்கூட்டரும் தீக்கிரையாகி, ஏத்தர் நிறுவனமும் செய்திக்கு இரையாகி விட்டது.

Published:Updated:
ஏத்தர் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீ விபத்தில் எல்லா நிறுவனங்களுமே பாதிக்கப்பட்டு விட்டன. ஓலா, ஒக்கினாவா, ப்யூர், பூம் மோட்டார்ஸ், ஹீரோ, ஆம்பியர் என்று எல்லாமே தீ விபத்துச் செய்திகளில் இடம் பெற்றுவிட்டன. ஏத்தர் ஸ்கூட்டர்தான் இதுவரை அந்தச் செய்தியில் சிக்காமல் இருந்தது. காரணம், ஏத்தரில் உள்ள தரமான IP67 ரேட்டிங் பேட்டரியைப் பற்றி எல்லோருமே சிலாகித்துக் கொண்டிருந்தனர்.

உண்மைதான்; இதுவரை ஏத்தரிலிருந்து விற்கப்பட்ட ஸ்கூட்டர்கள், சுமார் 150 மில்லியன் கிமீ–கள் ஓடிவிட்டனவாம். ஒரு ஏத்தர் வாடிக்கையாளர்கூட பேட்டரி ரீப்ளேஸ்மென்ட்டுக்கோ… பேட்டரியில் பிரச்னை என்றோ வரவில்லையாம். இப்போது ஏத்தர் ஸ்கூட்டரும் தீக்கிரையாகி, ஏத்தர் நிறுவனமும் செய்திக்கு இரையாகி விட்டது.

Ather Fire incident
Ather Fire incident

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் உள்ள ஏத்தர் டீலர்ஷிப்பில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஏத்தர் 450x ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிய… பதறிப் போன ஷோரூம் ஆட்கள். தீ விபத்துத் துறையினரை வைத்துத் தீயை அணைத்து விட்டனர். நல்லவேளையாக, இதில் மற்ற ஸ்கூட்டர்களுக்கோ, வேறு ஆட்களுக்கோ ஆபத்தில்லை. ஏத்தர் இதை மூடி மறைக்க விரும்பாமல் தானே தன் வலைதளத்தில் ஸ்கூட்டரின் தீ விபத்தைப் பற்றிப் பதிவிட்டு, உடனே நடவடிக்கையில் இறங்கி, அதற்கு என்ன காரணம் என்பதையும் விலாவரியாக ஒரு பக்க அளவுக்குச் சொல்லியிருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த ஏத்தர் 450X ஸ்கூட்டர் பல ஆயிரம் கிமீ–கள் ஓடிய ஸ்கூட்டர். கிட்டத்தட்ட பல சர்வீஸ்கள் கண்ட ஸ்கூட்டர். கடைசியாக அந்த ஸ்கூட்டர் சர்வீஸுக்காக அந்த ஷோரூமுக்கு வந்தபோதுதான் விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தை மேற்பார்வையிட்ட சர்வீஸ் டெக்னீஷியன்கள், அந்த ஸ்கூட்டரில் பல ஆஃப்டர் மார்க்கெட் விஷயங்கள் இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். முக்கியமாக, பேட்டரியில் பொருத்தப்பட்டிருந்த அந்த ஸ்க்ரூக்கள். அதன் நீளம்/அகலம் முதல் டைமென்ஷன்கள் வரை எல்லாமே கம்பெனி விதிகளுக்கு முரணாக இருந்திருக்கின்றன. இதனால், பேட்டரிக்கு அது ஸ்ட்ரெஸ் லெவலைக் கூட்டி விட்டிருக்கிறது.

Ather Statement
Ather Statement

கூடவே, மழையில் நனைந்தோ… வாட்டர் வாஷ் செய்தபோதோ – அது துருப்பிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். மேலும் விபத்து ஒன்றில் வாகனம் கீழே விழுந்து அதன் பேட்டரி பேக்கில் விரிசல் விழுந்திருக்கிறது. பிறகு அதிக அழுத்தத்தில் வாட்டர் வாஷ் செய்தபோது, அதற்குள் தண்ணீர் போய் ஷார்ட் ஷர்க்யூட் ஆகியிருக்கிறது என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் ஏத்தர் தனது ஸ்டேட்மென்ட்டில் கூறியிருக்கிறது.

ஏத்தரின் பேட்டரி தரத்தைப் பற்றி இதுவரை யாருமே புகார் சொல்லாத நிலையில், இது எல்லோருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. எனவே, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வைத்திருப்பவர்கள் ஆஃப்டர் மார்க்கெட்டில் சர்வீஸுக்குக் கொண்டு போய் பேட்டரியில் கை வைப்பதைத் தவிர்க்கலாமே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism