க்ராஸ் மேக்ஸ் எனும் ஸ்கூட்டர் கான்செப்ட்டை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் வெளியிட்டது ஏப்ரிலியா. இது இந்தியாவில் இந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமாகும்போது, SXR என்ற பெயரில் விற்பனைக்கு வரும்.

125 சிசி & 160சிசி இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரப்போகும் இதன் புக்கிங், ஆகஸ்ட்டில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

நம் நாட்டில் ஏப்ரிலியா விற்பனை செய்த SRV 850 ஸ்கூட்டர் போலவே, மேக்ஸி ஸ்கூட்டர் டிசைனில் இருக்கிறது SXR. பெரிய சீட், அகலமான ஃப்ளோர் போர்டு அதற்கான உதாரணம். எனவே பர்க்மேன் ஸ்ட்ரீட் உடன் SXR 125 போட்டி போடலாம். இத்தாலியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் SXR 160, 4 கலர்களில் கிடைக்கும் (சிவப்பு, வெள்ளை, கறுப்பு, நீலம்). மேலும் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி உடனான டிஜிட்டல் மீட்டர், இரட்டை LED ஹெட்லைட்ஸ், LED டெயில் லைட், USB சார்ஜிங், லைட் வசதியுடன் கூடிய அண்டர்சீட் ஸ்டோரேஜ், 12 இன்ச் வீல்கள், க்ரோம் வேலைப்பாடுகள் என அதிக சிறப்பம்சங்கள் இருப்பது ப்ளஸ்.

நீளமான வீல்பேஸ், ரிலாக்ஸ்டான சஸ்பென்ஷன் என SXR பிராக்டிக்கலான ஸ்கூட்டராக இருக்கிறது. இதனுடன் முன்பக்க டிஸ்க் பிரேக் உடனான ஸ்டார்ம் 125 ஸ்கூட்டரையும் பார்வைக்கு வைத்திருந்தது ஏப்ரிலியா.