கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஏப்ரிலியா SXR 160 விலை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. என்றாலும், SXR 160-ன் புக்கிங் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது. இந்த இத்தாலிய நிறுவனத்தின் SXR 160 - ஒரு ஸ்கூட்டரைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இதில் இருக்கும் இரட்டை ஹெட்லைட்கள், RS 660 ஸ்போர்ட்ஸ் பைக்கை நினைவுபடுத்துகின்றன.

வசதியான Foot Board மற்றும் சீட் இருப்பது சூப்பர். ஸ்கூட்டரின் பின்பக்கம், ஸ்போர்ட்ஸ் பைக்போல ஷார்ப்பாக அமைந்திருக்கிறது. கட்டுமஸ்தான பாடி பேனல்கள், ஸ்கூட்டரின் தோற்றத்துக்கு அழகு சேர்க்கின்றன. நீலம், கறுப்பு, வெள்ளை, சிவப்பு எனும் 4 கலர்களில் கிடைக்கும் இந்த மேக்ஸி ஸ்கூட்டரில் இருப்பது, SR160 ஸ்கூட்டரில் உள்ள அதே 160.03சிசி BS-6 இன்ஜின்தான். இந்த Long Stroke - 3 வால்வ் Fi இன்ஜின், 11bhp@7,100rpm பவர் மற்றும் 1.16kgm@6,000rpm டார்க்கையும் தருகிறது. தற்போது விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் பெரிய பெட்ரோல் டேங்க் உடன் வரும் SXR 160 (7 லிட்டர்), பைக்குகளுக்கு இணையாக 1,353மிமீ வீல்பேஸுடன் வருகிறது. இதற்கு ரிலாக்ஸ்டான ஸ்டீயரிங் Rake Angle முக்கிய காரணம்.

மற்றபடி 30மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - அட்ஜஸ்டபிள் மோனோஷாக், 220மிமீ டிஸ்க் - 140மிமீ டிரம் (சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உண்டு) என SR 160-ன் அதே மெக்கானிக்கல் பாகங்களே இந்த மேக்ஸி ஸ்கூட்டரிலும் இருக்கின்றன. ஆனால் SR 160-ல் 14 இன்ச் வீல்கள் இருந்த நிலையில், SXR 160-ல் இருப்பது 12 இன்ச் டியூப்லெஸ் டயர்கள்தான் (120/70). இதனால் இந்த ஸ்கூட்டரின் மைலேஜ், அதைவிட பெட்டராக இருக்கலாம். மேலும் SR 160-ல் அனலாக் - டிஜிட்டல் மீட்டர் இருந்த நிலையில், SXR 160-ல் Full டிஜிட்டல் LCD மீட்டர் இருப்பது ப்ளஸ். இதில் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி இருப்பது செம! இந்த மேக்ஸி ஸ்கூட்டரின் சஸ்பென்ஷன் செட்-அப், நம் ஊர்ச் சாலைகளுக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது, அதனை ஓட்டிப் பார்க்கும்போதுதான் தெரியும். விலையைப் பொறுத்தவரை, வெஸ்பா மற்றும் SR ரேஞ்ச்சுக்கு இடையே அது பொசிஷன் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலையே,1.26 லட்சம். SXR சீரிஸில் 125சிசி மாடல் வருமா என்பது, போகப் போகத்தான் தெரியும்.