Published:Updated:

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் இந்த வசதி இன்ஃபினிட்டியில் மட்டும்தான்! | Infinity

இன்ஃபினிட்டி E1 | Infinity
News
இன்ஃபினிட்டி E1 | Infinity

ஓலாவுக்குப் போட்டியாக வருகிறறது பவுன்ஸ் இன்ஃபினிட்டி!

பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்–அப் நிறுவனமான பவுன்ஸ் நிறுவனம், இந்தியாவில் இருக்கும் எலெக்ட்ரிக் மார்க்கெட்டின் தேவையைப் புரிந்து சரியான நேரத்தில் ஒரு ஸ்கூட்டரைக் கொண்டு வந்திருக்கிறது. ஓலாவுக்குக் கடும்போட்டியாக வரவிருக்கிறது இந்த நிறுவனத்தின் இன்ஃபினிட்டி எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.

இப்போதைக்குச் சில எலெக்ட்ரிக் நிறுவனங்கள் செய்யத் தயங்கும் விஷயத்தைக் கையிலெடுத்திருப்பதுதான் டாக் ஆஃப் தி ஏரியா. ஆம், ஸ்வாப்பபிள் பேட்டரி எனும் பேட்டரி எக்ஸ்சேஞ்ச் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அதாவது, உங்கள் ஸ்கூட்டரில் இருக்கும் காலியான பேட்டரியை அப்படியே எக்ஸ்சேஞ்ச் செய்து, ஃபுல் சார்ஜ் ஏறியிருக்கும் பேட்டரியை சட்டென ஸ்வாப் செய்து பறக்கலாம். சார்ஜிங்குக்குக் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதுதான் இந்த பேட்டரி ஸ்வாப்பிங். இதன்மூலம் வெறும் இரண்டு நிமிடங்களில் ஃபுல் ரேஞ்ச் கிமீ–யுடன் பயணிக்கலாம். இதை அங்கங்கே இருக்கும் பவுன்ஸ் சர்வீஸ் ஸ்டேஷன்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த இன்ஃபினிட்டி ஸ்கூட்டரின் ஃபுல் ரேஞ்ச் 85 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது பவுன்ஸ் நிறுவனம். இதுவே ஓலாவில் 150 கிமீ–க்கும் மேல் இருக்கும் என்றாலும், இந்த பேட்டரி ஸ்வாப்பிங் திட்டம் பெரிய வரம். விலையும் அட்டகாசமாக வரவிருக்கிறது இன்ஃபினிட்டி.

இன்ஃபினிட்டி E1
இன்ஃபினிட்டி E1
Battery Swapping
Battery Swapping

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

E1 என்பதுதான் இந்த ஸ்கூட்டரின் வேரியன்ட். பெயர் ஒன்றுதான்; ஆனால் வெர்ஷன்கள் இரண்டு. காரணம், இதில் `Battery as a Service’ என்றொரு ஆப்ஷன் உண்டு. அதாவது, பேட்டரி இல்லாமலே இந்த ஸ்கூட்டரை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ‘பேட்டரி இல்லாத வேரியன்ட்டை வாங்கி என்ன பண்ண’ என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பவுன்ஸ், பேட்டரி ஸ்வாப்பிங் நெட்வொர்க் என்றொரு சிஸ்டத்தை ஆரம்பிக்க இருக்கிறது. அதில் ஃபுல் பேட்டரியை வாங்கிக் கொள்ள வேண்டும். மறுபடியும் காலி செய்து மறுபடியும் ஸ்வாப்பிங். இதற்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும். இந்த ஸ்வாப்பிங்குக்கு எவ்வளவு விலை என்று இப்போதைக்கு பவுன்ஸ் அறிிக்கவில்லை. ஆனால், இதில் வழக்கமான ஸ்கூட்டர்களைவிட 40% பணம் சேமிக்கலாம் என்கிறது பவுன்ஸ். இந்த பேட்டரியில்லா ஸ்கூட்டரின் எக்ஸ் ஷோரூம் விலை 45,099 ரூபாய்தான். குஜராத் மாநிலத்தில் FAME-II மானியத் தொகை அதிகமாகக் கிடைப்பதால், இதன் விலை வெறும் ரூ.36,500தான் வருகிறது. பேட்டரி உள்ள E1 நார்மல் வேரியன்ட்டின் விலை குஜராத்தில் 59,999 ரூபாய்தான். பெங்களூர் மற்றும் டெல்லியில் 68,999 ரூபாய். மஹாராஷ்டிராவில் இதைவிட 1,000 ரூபாய் அதிகம். (69,999). ராஜஸ்தான் மாநிலத்தில் 72,000 ரூபாய். நம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் 79,999 ரூபாய் விலையில் வரவிருக்கிறது இன்ஃபினிட்டி E1.

பவுன்ஸ் இன்ஃபினிட்டியில் – மழையில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாதபடி IP67 ரேட்டிங் கொண்ட 2.0kWh, 48 வோல்ட் கொண்ட பேட்டரி இருக்கிறது. இதன் டாப் ஸ்பீடு 65 கிமீ. 100% சார்ஜிங்குக்கு இது 85 கிமீ வரை போகும் என்கிறது பவுன்ஸ். இதன் பூட் இடவசதி 12 லிட்டர். இவை எல்லாமே ஓலா ஸ்கூட்டரை ஒப்பிடும்போது குறைவுதான். ஆனால், இதில் BLDC ஹப் மோட்டார் கொண்ட ரியர்வீல் டிரைவ் வசதி இருப்பதால், ஓட்டுதல் பெப்பியாக இருக்கலாம். மேலும் இதில் 3 டிரைவிங் மோடுகளும் கொடுத்திருக்கிறார்கள்.

Ip67 ரேட்டிங் கொண்ட 2.0kWh பேட்டரி
Ip67 ரேட்டிங் கொண்ட 2.0kWh பேட்டரி
ரெட்ரோ ஸ்டைல் இன்ஃபினிட்டி E1
ரெட்ரோ ஸ்டைல் இன்ஃபினிட்டி E1

தோற்றத்தில் ரெட்ரோ மாடர்ன் ஸ்டைலில் இருக்கும் இன்ஃபினிட்டி E1, சிறப்பு வசதிகளில் கலக்குகிறது. புளூடூத் கனெக்டிவிட்டி வசதி, ஃபுல் LED புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ரிமோட் ட்ராக்கிங், ஸ்கூட்டரை யாரும் இரவல் எடுத்தால் கண்காணிக்கக் கூடிய ஜியோஃபென்சிங் வசதி, ரிவர்ஸ் மோடு, க்ரூஸ் கன்ட்ரோல், ஆன்ட்டி தெஃப்ட் அலாரம், பஞ்சர் ஆனால் தானாக க்ரீப் ஆகிச் செல்லும் Drag மோடு என இப்போதைக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளும் கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி இதன் ரியல் டைம் ரேஞ்சும், டாப் ஸ்பீடும், ஓட்டுதலும் எப்படி என்பது டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டில்தான் தெரியும்.

ஓலா மாதிரியே 499 ரூபாய்க்கு புக்கிங்கையும் ஆரம்பித்து விட்டது பவுன்ஸ். இதன் டெலிவரி மார்ச் மாதம் தொடங்கலாம். பெர்ஃபாமன்ஸைப் பொருத்தவரை ஓலா ஸ்கூட்டரைவிட இன்ஃபினிட்டி குறைவுதான் என்றாலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் முதன் முறையாக வந்திருக்கும் இந்த ஸ்வாப்பிங் திட்டமே இன்ஃபினிட்டியை எதிர்பார்க்க வைக்கிறது.