இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக, எலெக்ட்ரிக் வாகனங்களை வாகனத் தயாரிப்பாளர்கள் களமிறக்கி வருகின்றனர். அந்த வரிசையில் வெஸ்பாவும் இணைய இருக்கிறது. சர்வதேசச் சந்தைகளில் இந்த நிறுவனம் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக்கா ஸ்கூட்டரை, டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் பார்வைக்கு வைத்திருந்தது வெஸ்பா.

இதில் உள்ள 4kW எலெக்ட்ரிக் மோட்டார், சிங்கிள் சார்ஜில் 100 கி.மீ தூரம் செல்லக்கூடியது. பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கு 4 மணி நேரம் தேவைப்படும். எனவே, இதில் இருக்கும் பேட்டரி - எலெக்ட்ரிக் மோட்டார் செட்-அப்பை அடிப்படையாகக் கொண்டு, உள்நாட்டு உதிரிபாகங்களுடன் ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நிறுவனம் தயாரிக்கும் எனத் தெரிகிறது. இதனால் அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில் அது கிடைக்கலாம். அடுத்த ஆண்டில் இது விற்பனைக்கு வரக்கூடும். SXL 150-யை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள Racing Sixties லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது LED ஹெட்லைட், சீட்டுக்கு அடியே லைட், USB சார்ஜர் எனப் புதிய வசதிகளைக் கொண்டிருக்கிறது.